‘குஷி’-யை நிறைவு செய்து குஷியாக கொண்டாடிய விஜய் – சமந்தா டீம்

‘குஷி’-யை நிறைவு செய்து குஷியாக கொண்டாடிய விஜய் – சமந்தா டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குஷி’.

இப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘குஷி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு ஏற்கனவே போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

குஷி

இப்படத்தின் ‘ஆராத்யா’ பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

மேலும், இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

குஷி

Shooting of Vijay Deverakonda Samantha starrer ‘Kushi’ wrapped up

வசந்த் ரவி நடித்த ‘அஸ்வின்ஸ்’ பட ஓடிடி ரிலீஸ் தேதி இதோ..

வசந்த் ரவி நடித்த ‘அஸ்வின்ஸ்’ பட ஓடிடி ரிலீஸ் தேதி இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தரமணி’, ‘ராக்கி’ ஆகிய படங்களில் நடித்த வசந்த் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அஸ்வின்ஸ்’ (ASVINS).

இப்படத்தில் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் மற்றும் சிம்ரன் பரீக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான தருண் தேஜா இயக்கினார்.

இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (எஸ்விசிசி) பி.வி.எஸ்.என். பிரசாத் தயாரித்துள்ளது.

‘அஸ்வின்ஸ்’ திரைப்படம் கடந்த ஜூன்23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘அஸ்வின்ஸ்’ (ASVINS) படம் வருகிற ஜூலை 20-ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

மேலும், இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

அஸ்வின்ஸ்

Vasanth Ravi’s ‘Asvins’ movie OTT release date announcement

ரீ-ரீலீசிலும் கோடியை அள்ளியது ‘வேட்டையாடு விளையாடு’

ரீ-ரீலீசிலும் கோடியை அள்ளியது ‘வேட்டையாடு விளையாடு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2006-ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு.’

இதில் கமலுடன் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.

அப்போதே இத்திரைப்படம் பெரும் வசூலைக் குவித்து மாபெரும் வெற்றி பெற்றது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு வேட்டையாடு விளையாடு படம் ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆனது.

இதையடுத்து இப்படத்தின் மறு வெளியீட்டு வெற்றியை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிலையில், இப்படத்தின் ரீ-ரிலீஸ் வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

‘வேட்டையாடு விளையாடு’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரூ.1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ரீ ரிலீஸிலும் சாதனை படைத்த இப்படத்தின் வெற்றியை கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

kamal’s vettaiyaadu vilaiyaadu re-release collections update

ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தில் விஷ்ணு விஷால் கேரக்டர் என்ன தெரியுமா.?

ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தில் விஷ்ணு விஷால் கேரக்டர் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிப்பில் உருவாகும் ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா.

இந்த படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இதில் முதன்மை நாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் நடித்து வருகின்றனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இதன் படப்பிடிப்பு மும்பை பாண்டிச்சேரி காரைக்கால் திருவண்ணாமலை செஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இதன் படபிடிப்பு நிறைவடைந்தது.

ஓரிரு தினங்களுக்கு முன் காரைக்கால் பகுதியில் உள்ள நிரவியில் ரஜினி இல்லாத மீதமுள்ள காட்சிகளை படமாக்கினார் ஐஸ்வர்யா.

இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

ரஜினியுடன் நிரோஷா மற்றும் ஜீவிதா இருவரும் முதன்முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ஜூலை 17ஆம் தேதி நடிகர் விஷ்ணு விஷால் தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது கேரக்டர் பெயர் திருநாவுக்கரசு என்று அழைத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளனர் ‘லால் சலாம்’ படக்குழுவினர்.

அவர் இதில் கிரிக்கெட் வீரராக வருகிறார் எனவே அவர் கிரிக்கெட் ஆடுவது போல போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் கேரக்டரில் நடிக்க அவருக்கு மனைவியாக நிரோஷா நடிக்க ரஜினியின் தங்கையாக ஜீவிதா நடித்து வருகிறார்.

விஷ்ணு விஷால்

Vishnu Visual character in Lal Salaam movie

His Name is John.; ‘துருவ நட்சத்திரம்’ பட 2வது பாடல் ப்ரோமோ வெளியானது

His Name is John.; ‘துருவ நட்சத்திரம்’ பட 2வது பாடல் ப்ரோமோ வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’.

இப்படத்தில் கதாநாயகியாக ரீத்துவர்மா நடிக்க, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு இப்பட டீசர் வெளியானது. மேலும் இதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ஒரு மனம்’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ‘விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்’ என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் 2-வது சிங்கிள் பாடல் ஜூலை 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ பாடலின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்கள்.

துருவ நட்சத்திரம்

Vikram’s ‘Dhruva Natchathiram’ second single promo released

யாருக்காக.? இது 2K கிட்ஸ்காக.! 50 வருடத்திற்கு பிறகு 100 தியேட்டர்களில் ரீ-ரிலீசாகும் ‘வசந்த மாளிகை’

யாருக்காக.? இது 2K கிட்ஸ்காக.! 50 வருடத்திற்கு பிறகு 100 தியேட்டர்களில் ரீ-ரிலீசாகும் ‘வசந்த மாளிகை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலத்தால் அழியாத காவியப்படமான ‘2’ வெளிவந்து 50 வருடங்களாகிறது. 200 நாட்களை தாண்டி வெற்றி விழா கண்ட இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ கே.பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், வி.கே.ராமசாமி, மனோரமா, பண்டரிபாய், ரமாபிரபா, ஹெலன், ஏ. சகுந்தலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சிங்கப்பூர், மலேசியா, நாடுகளிலும் வசூலை அள்ளிய இந்தப்படம் இலங்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அன்றைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

கலைமகள் கை பொருளே,
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்…
யாருக்காக இது யாருக்காக ….
இரண்டு மனம் வேண்டும்…..
குடிமகனே பெரும் குடிமகனே…
போன்ற முத்தான பாடல்களை கண்ணதாசன் எழுதி இருந்தார். கே.வி.மகாதேவன் அசத்தலாக இசையமைத்து இன்றளவும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படம் வெளிவந்து 50 வருடமாகிறது – இதை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கி ரசிகர்களுக்கு தருவதற்காக வி.சி. குகநாதன் முயன்றார். அதற்காக ராமு அவர்களின் முழு ஈடுபாட்டில் வசந்தமாளிகை டிஜிட்டல்மயமாகி உள்ளது.

சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர ரசிகரான வி.நாகராஜன் ஜுலை மாதம் 21 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 100 திரையரங்குகளில் திரையிட முழு முனைப்பில் ஈடுபட்டுள்ளார்.

இன்றைய ரசிகர்களும் பார்த்து பாராட்டும் படமிது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் , வசந்த மாளிகை ” உயிரோட்டமான படமாக இருக்கும் அதனால்தான் நம்பிக்கையோடு ரிலீஸ் செய்கிறேன்” என்று வி. நாகராஜன் கூறுகிறார்.

சினிமா ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத ‘வசந்த மாளிகை’ படத்தை இனி 2K KIDS-கள் திரையில் பார்த்து ரசிக்கலாம்.

Vasantha Maaligai re release in 100 theatres after 50 years

More Articles
Follows