தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா.
இவர் அண்மையில் ஒரு தீவிர தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு மளமளவென படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘சாகுந்தலம்’ படம் மோசமான விமர்சனங்களை பெற்றது.
தற்போது விஜய தேவர்கொண்டா உடன் ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.
இதனையடுத்து ஒரு வெப் தொடரில் முக்கியமான கேரக்டரில் சமந்தா நடித்து வருகிறார்.
பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ‘சிட்டாடெல்’ வெப் தொடரின் இந்திய பதிப்பில் தான் சமந்தா நடித்துள்ளார்.
இதை ‘தி பேமிலிமேன்’ வெப் தொடரை இயக்கிய ராஜ் – டீகே இயக்குகின்றனர்.
இந்தத் தொடரில் பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக சமந்தா நடிக்கிறார் என்பதுதான் ஹைலைட்.
1980, 90-களில் நடக்கும் கதைக்களத்தில் சமந்தா காட்சிகள் வருகிறதாம்.
கூடுதல் தகவல்…
பாலிவுட்டில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் உடன் ‘தமிழன்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
samantha plays priyanka chopra mother role