கீழே நிக்கிறவன்தான்டா சூப்பர் ஸ்டாரு..; கல்லூரி விழாவில் சிம்பு மாஸ்

கீழே நிக்கிறவன்தான்டா சூப்பர் ஸ்டாரு..; கல்லூரி விழாவில் சிம்பு மாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbus Mass Speech At Nakshatra 2020 event at Collegeநீண்ட இடைவெளிக்குப் பிறகு தனியார் கல்லூரி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் சிம்பு.

அப்போது அவர் பேசியதாவது..

“இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொண்டது மகிழ்ச்சி.

எஃப் 1 கார் ரேஸ் உங்களுக்குத் தெரியுமா.? அதில் நிறைய சுற்றுகள் இருக்கும். தொடர்ந்து வண்டியை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே இருக்க முடியாது. அதற்காக பிட் ஸ்டாப் இருக்கும்.

அங்கு நிறுத்தி காரின் தேய்ந்து போன டயர்களை மாற்றி, பெட்ரோல் நிரப்பி, தொடர்ந்து ஓட்ட வேண்டும்.

கண்ணை மூடிக்கிட்டு என் ரசிகர்களை லவ் பண்ணலாம்.; பெண்களுக்கு சிம்பு அட்வைஸ்

இப்போதும் சொல்வேன். முதலில் யார் முதலிடத்தை அடைகிறார்கள் என்பதே முக்கியமல்ல. கடைசியில் யார் முதலிடத்தைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

உங்களுடைய அன்புதான் என்னை இப்பவும் சினிமாவில் வைத்திருக்கிறது.

சின்ன வயசுலே இருந்தே நடிக்கிறேன். எனவே தான் ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டேன். அதற்காக கோபித்துக் கொள்ளாதீர்கள்.

திரும்ப வந்துவிட்டேன். இனிமேல் எப்போதும் உங்களைவிட்டு போகமாட்டேன்.

நாம் வெற்றி பெறும் போது நம் பின்னால் நிறைய பேர் வருவார்கள். நம் பின்னால் ஒரு கூட்டமிருக்கும். ஆனால் ஒருவன் தோல்வியடைந்துவிட்டான் என்று சொன்னப்போதும் எனக்காக நின்றீர்களே. உங்களை எப்படி நான் விட்டுக் கொடுப்பேன்.

ஒவ்வொரு படம் கதையில் கதாபாத்திரங்கள் இருக்கும். அதில் ஒருவன் தொடர்ந்து கஷ்டப்படுகிறான். அனைவரும் அவனை மேலே வரவிடாமல் தடுக்கின்றனர். அவனது காதலில் பிரச்னை வருகிறது.

இந்தியன் 2 விபத்து; பணம்-வார்த்தை உயிரிழப்பை ஈடு செய்யாது என சிம்பு அறிக்கை

ஆனால் கடைசியில் ஜெயிக்கிறான். அவனது பெயர்தான் ஹீரோ. இன்னொரு கதாபாத்திரம் ஆரம்பத்திலிருந்தே எந்த பிரச்னையுமின்றி ஜெயித்துக் கொண்டே இருக்கிறான். மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுக்கிறான். அவனுக்கு பெயர் வில்லன்.

படத்தைப் போல் தான் நிஜவாழ்வும். ஒருவன் மேலே வருவதை தடுத்து கீழே தள்ளுகிறார்கள். வளரவிடாமல் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஹீரோவாக என்னை நீங்களும் கடவுளும் ஆக்கியிருக்கிறீர்கள்.

அண்ணாமலை படத்தில் இடைவேளை சமயத்தில் வில்லன் உயர்ந்து மேலே நிற்பார்.

தலைவன் கீழே நிற்பார். அவர்தான் ஹீரோ சூப்பர் ஸ்டார். மேலே நிற்பவர் அல்ல. அதனால் நான் கவலையேபடமாட்டேன்.” என பேசினார் சிம்பு.

Simbus Mass Speech At Nakshatra 2020 event at College

பிப். 21ல் மோதிய ஆறு படங்களில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ‘கன்னி மாடம்’

பிப். 21ல் மோதிய ஆறு படங்களில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ‘கன்னி மாடம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kanni Maadam movie gets good response from audience கடந்த வாரம் பிப்ரவரி 21 வெள்ளிக்கிழமை ஆறு படங்கள் மோதியது.

பாரதிராஜா இயக்கி தயாரித்து நடித்து மீண்டும் ஒரு மரியாதை,

அருண் விஜய் பிரசன்னா நடித்த மாஃபியா,

நட்ராஜ் மற்றும் லால் இணைந்த காட்ஃபாதர்,

போஸ் வெங்கட் இயக்கிய கன்னி மாடம்,

தேசிய விருது பெற்ற பாரம் மற்றும் குட்டி தேவதை உள்ளிட்ட படங்கள் வெளியானது.

இதில் மற்ற படங்களை காட்டிலும் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதை கவர்ந்த படமாக கன்னி மாடம் பெயர் பெற்றுள்ளது.

இதுவரை படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துள்ளதால் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பாரம் படம் தேசிய விருது படமாக இருந்தபோதிலும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. மேலும் மிஷ்கின் இந்த படத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அவரே நேரிமையாக சினிமா போஸ்டர்களையும் ஒட்டி வருகிறார்.

ஆக… இந்த வார ரேஸில் கன்னி மாடம் முதல் இடத்தை பெறும் எனத் தெரிகிறது.

Kanni Maadam movie gets good response from audience

துப்பறிவாளன் 2: மிஷ்கினை நீக்கி விட்டு விஷாலே இயக்க திட்டம்.?

துப்பறிவாளன் 2: மிஷ்கினை நீக்கி விட்டு விஷாலே இயக்க திட்டம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mysskin to not direct Vishals Thupparivalan 2கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் ‘துப்பறிவாளன்’.

மிஷ்கின் இயக்கியிருந்த இந்த படத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வினய் வில்லனாக மிரட்டியிருந்தார்.

இதில் விஷாலின் கணியன் பூங்குன்றன் கேரக்டர் பலரின் பாராட்டையும் பெற்றது.

தற்போது இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகின்றனர்.

முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் துவங்கியுள்ளது.

இதில் விஷாலுடன் பிரசன்னா, கெளதமி, ரகுமான், அஷ்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தமானார்.

இந்த நிலையில் இப்பட பட்ஜெட் திட்டமிட்டதை விட அதிகமானதால் மிஷ்கினை படத்திலிருந்து நீக்கி விட்டு நடிகரும் தயாரிப்பாளருமான விஷாலே இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்த உறுதியான தகவல்கள் இல்லை.

Mysskin to not direct Vishals Thupparivalan 2

கண்ணை மூடிக்கிட்டு என் ரசிகர்களை லவ் பண்ணலாம்.; பெண்களுக்கு சிம்பு அட்வைஸ்

கண்ணை மூடிக்கிட்டு என் ரசிகர்களை லவ் பண்ணலாம்.; பெண்களுக்கு சிம்பு அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Girls can love my fans blindly says STR aka Simbu அண்மையில் சிம்பு நடிக்கும் மாநாடு பட சூட்டிங் தொடங்கியது..

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனியார் கல்லூரி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் சிம்பு.

அப்போது அவர் பேசியதாவது,

“யாருடைய அறிவுரையையும் கேட்காதீர்கள். நான் சொல்வது அறிவுரை அல்ல. பிடித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் விட்டுவிடுங்கள்.

கஷ்டம் வந்தால் முதலில் பாட்டுப் போட்டு டான்ஸ் ஆடுங்கள்.

கீழே நிக்கிறவன்தான்டா சூப்பர் ஸ்டாரு..; கல்லூரி விழாவில் சிம்பு மாஸ்

நம்மைப் பலர் திட்டுகிறார்கள் என்றால் நாம் ஜெயிக்கிறோம் என்று அர்த்தம்.

பிரச்னை இல்லையெனில் வாழ்க்கையே இல்லை.

எல்லோரும் இவன் வேண்டாம். இவன் கெட்டவன் என்று என்னைப் பற்றி ஏதேதோ சொல்கிறார்கள்.

என்னை உங்களுக்கு ஏன் பிடித்திருக்கிறது.??

நீங்கள் இப்படி கை தட்டி ஏற்றிவிடுவதால் என்னை தேவையில்லாமல் சிலர் சீண்டுகிறார்கள். ரொம்ப ஓவரா பண்றாங்க..

இந்தியன் 2 விபத்து; பணம்-வார்த்தை உயிரிழப்பை ஈடு செய்யாது என சிம்பு அறிக்கை

நீங்கள் இப்படி கை தட்டி ஆதரவு கொடுப்பதால் என்னை சீண்டுபவர்களுக்கு கோபம் வரும்.

சிம்பு பெண்களுக்கு எதிரானவர் என்று சொன்னார்கள். ஆனால் அந்தப் பெண்கள் தான் என் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள்.

பெண்களுக்கு பிரச்னை என்றால், முதலில் குரல் கொடுப்பது நான் தான். பெண்களுக்கு பிரச்னை தருபவர்களை சும்மா விடமாட்டேன்..

சிம்பு ரசிகர்களை பெண்கள் கண்ணை மூடிக் கொண்டு காதலிக்கலாம். என்னை பலரும் கழுவி கண்ணா பிண்ணா திட்டிய போதே என்னை விட்டு செல்லாதவர்கள் என் ரசிகர்கள்.

அவர்களை நீங்கள் காதலித்தால் எந்த காலத்திலும் காதலியை/ மனைவியை விட மாட்டார்கள்..

இவ்வாறு மாணவ & மாணவிகள் மத்தியில் பேசினார் சிம்பு.

இவருடன் விடிவி கணேஷ் கலந்துக் கொண்டார்.

Girls can love my fans blindly says STR aka Simbu

விஜய் டி‌வி புகழ் பிரஜினின் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

விஜய் டி‌வி புகழ் பிரஜினின் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Prajinதமிழிசை தந்த உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன் ‘சாதக பறவைகள்’ சங்கர் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

வார்வின் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஐ ராஜா தயாரிக்க, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர் பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட படங்களில் முன்னணி இயக்குனர் சீனுராமசாமியிடம் துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன் இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார்.

இத்திரைப்படம் இன்றைய காலகட்டத்தில், மனித வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்து கொண்டிருக்கும் மதுவுக்கு அடிமையான ஒருவர், தன்னை உணர்ந்து, அதிலிருந்து விடுபட்டு, முன்னெடுக்கும் புரட்சிகரமான நடவடிக்கைகளை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுகிறது. தனிமனித வாழ்வின் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு முக்கியமான திரைப்படமாக இது அமையும்.

சாஸ்திரீய இசை அனைவருக்கும் புரியவில்லை என்ற போதிலும், ராகத்திலும் தாளத்திலும் மயங்கி, மொழியும் அர்த்தமும் புரியாமல் ரசித்து வந்த நிலையில், எளிய தமிழில் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் இசைப்பங்களிப்புப் போற்றுதலுக்குரியது. பெரும்பாலும் பக்தி இலக்கிய படைப்புகளை உருவாக்கிய அவர், திருவாசகம், பன்னிரு திருமுறைகளுக்கு அப்பாற்பட்டு எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் பாடல்களை உருவாக்கினார்.

அவரது மகனான ‘சாதக பறவைகள்’ இசைக்குழு அமைப்பாளர் சங்கர், உலகெங்கிலும் சுமார் 8000 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்திய பெருமைக்குரியவர், தொடர்ந்து நடத்தியும் வருகிறார். தீவிர இசை ரசிகர், பல்வேறு இசை வடிவங்களில் முறையான தேர்ச்சி பெற்றவர். அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல புதுமைகளை புகுத்தியிருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் தீரத் தீர் எனும் முதல் பாடல் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘அக்கப்பல்லா’ என்றழைக்கப்படும் பாரம்பரிய முறையில், மிகக் குறைவான இசைக்கருவிகளின் துணையுடன், வாய்மொழியாகவே ஒரு முழுப்பாடலையும் வடிவமைத்திருக்கிறார். இப்பாடலை வைரபாரதி எழுதியிருக்கிறார்.

இப்படத்தில் விஜய் டிவி புகழ் பிராஜின், அறிமுக நாயகி ரியாமிகா, இயக்குனர் கே பாக்யராஜ், இமான் அண்ணாச்சி மற்றும் ஷகிலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

வார்வின் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் தயானந்தன் இயக்கத்தில், உருவாகியுள்ள ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில், வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

புரோமோசனுக்கு வரலேன்னா பணத்தை திருப்பி கொடுங்க..; த்ரிஷாவுக்கு சிவா எச்சரிக்கை

புரோமோசனுக்கு வரலேன்னா பணத்தை திருப்பி கொடுங்க..; த்ரிஷாவுக்கு சிவா எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer T Siva warning Trisha at Paramapadham Vilayattu event 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க த்ரிஷா நடித்துள்ள படம் ‘பரமபதம் விளையாட்டு’.

இப்படத்தின் பிரி புரமோஷன் விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினர்களும் கலந்துக் கொண்டனர். ஆனால் த்ரிஷா விழாவுக்கு வரவில்லை.

இதில் தயாரிப்பாளரும் நடிகருமான டி.சிவா பேசும்போது, ‘நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் பார்த்த என் நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்கள்.

பெரிய நாயகன் இல்லாமல், விளம்பர நோக்கோடும் இல்லாமல், ஆனால், நட்சத்திர அந்தஸ்த்தோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார் திருஞானம்.

இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்திற்கு திரிஷா வரவில்லையென்பது வருத்தத்திற்குரிய விஷயம். தொடர்ந்து அவர் விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன்’ என பேசினார்.

Producer T Siva warning Trisha at Paramapadham Vilayattu event

More Articles
Follows