‘குஷி’ படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் அப்டேட் இதோ..

‘குஷி’ படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் அப்டேட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடித்துள்ள படம் ‘குஷி’.

இப்படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கு இந்த படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்கிறது படக்குழு.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

‘குஷி’ படத்தின் டிரைலர் வருகிற 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

‘குஷி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

குஷி

Vijay Deverakonda and Samantha in ‘Kushi’ as trailer date announcement

பாரம்பரிய கலையை தொடரும் கலைஞர்களுக்கு தலை வணங்குகிறேன்… – கார்த்தி

பாரம்பரிய கலையை தொடரும் கலைஞர்களுக்கு தலை வணங்குகிறேன்… – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று திரைப் பாடல்களுக்கு இணையாக தனி இசை ஆல்பமாக வெளியாகும் சுயாதீன பாடல்களும் இசை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று வருகின்றன.

பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்னணியாக கொண்டு அப்படிப்பட்ட பாடல்கள் உருவாகி வரும் சூழலில் நமது நாட்டுப்புற கலைகளையும் நம் சொந்த மண்ணின் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக வீடியோ பாடலாக வெளியாகி உள்ளது ‘ஊருசனம்’ என்கிற தனி இசை பாடல்.

இந்த பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து இந்த இசை ஆல்பத்தை தயாரித்தும் உள்ளார் அட்ராம் (ATRam). முத்துச்சிற்பி மற்றும் ரேப்பர் ஃபனோஹா இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.

இந்த பாடலை கண்கவரும் வகையில் இயக்கியுள்ளார் முகின் ஜெயராஜ். இந்தப் பாடலுக்கான நடனத்தை கோகுல் வடிவமைத்துள்ளார். ட்ரெண்ட் மியூசிக்கில் வெளியாகி உள்ள இந்த பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இந்த பாடலை பார்த்துவிட்டு நடிகர் கார்த்தி, தனது மகிழ்ச்சியையும் இந்த இசைக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது…

“நமது நாட்டுப்புற கலையையும் கலைஞர்களையும் இன்றைய இளம் கலைஞர்களும் நமது மக்களும் கொண்டாடுவதை பார்க்கும்போது ரொம்பவே மகிழ்ச்சியாக உணர முடிகிறது. பல தலைமுறைகளாக கடந்து வரும் நம் முன்னோர்களின் சொத்தான பாரம்பரிய கலை வடிவத்தை இப்போதும் தொடர்ந்து பயிற்சி செய்து வரும் கலைஞர்களை பார்த்து தலை வணங்குகிறேன்.

இந்தப் பாடலை வடிவமைத்த விதமும் அதில் அழகாக நாம் பாரம்பரியத்தை வெளிப்படுத்திய விதமும் சிறந்த ஒரு முயற்சி” என்று கூறியுள்ளார் கார்த்தி.

ஊருசனம்

Young artists celebrates native folk art says Karthi

ஒரு படம் ஒரு தருணத்திலாவது ஒன்ற வைக்கனும்… – ‘மசாலா பாப்கார்ன்’ நிறுவனர் ஐஸ்வர்யா

ஒரு படம் ஒரு தருணத்திலாவது ஒன்ற வைக்கனும்… – ‘மசாலா பாப்கார்ன்’ நிறுவனர் ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்பட தயாரிப்பாளர் மசாலா பாப்கார்ன் நிறுவனர் ‘ஐஸ்வர்யா’ படம் பற்றி கூறுகையில்…

“இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தேன். தயாரிப்பு,நிர்வாகத்தை சிறந்த முறையில் கற்று அனுபவம் பெற வெங்கட் பிரபு நிறுவனம் பெரிதும் உதவியது.

எனது தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பாப்கார்ன்’ தொடங்கும் எண்ணம் ஏற்பட்டபோது , தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டேன்.

தயாரிக்கும் முதல் படம் என்பது ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திற்கும் சிறப்பானதும் மிகவும் முக்கியமானது ஆகும். மசாலா பாப்கார்னில், உருவாகும் திரைப்படம் படம் காண்பவர் உள்ளம் நிறையும் வண்ணம்
இருக்க வேண்டும் என்றும், ஏதாவது ஒருவகையில் படம் காண்பவர்களை படம் தொடர்பு படுத்தவேண்டும், சிரிக்க வைக்க வேண்டும், அழ வைக்க வேண்டும், குறைந்தது ஒரு தருணத்திலாவது அந்தப் படத்தோடு நம்மை ஒன்ற வைக்க வேண்டும், அவ்வாறான படங்களைத்தான் தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அவ்வாறான படமாக மசாலா பாப்கார்னுக்கு ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் சரியான தருணத்தில் வந்தது.

படத்தின் பெயருக்கு ஏற்றாற்போல் நட்பே எங்களை இணைத்து எல்லாம் சரியாக நடந்தது. எங்கள் நட்பிலுள்ள நம்பிக்கையே எங்களை இவ்வளவு தூரம் கடத்திக் கொண்டு வந்து படத்தை முடிக்க உதவியது. விரைவில் படம் வெளியாக உள்ளது.

மசாலா பாப்கார்ன் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான நண்பன் ஒருவன் வந்த பிறகு #NOVP, திரைப்படத்திற்காக ஒயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோவுடன் இணைவதில் பெருமை கொள்கிறோம். படம் பற்றிய கூடுதல் தகவல்களை விரைவில் அறிவிப்போம்” என்றார்.

ஐஸ்வர்யா

கதையாசிரியரும் நடிகரும், இயக்குநருமான ஆனந்த் கூறும்போது, ..

“ஐஸ்வர்யா மற்றும் அவரது மசாலா பாப்கார்ன் நிறுவனம் எனக்கும், எங்கள் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்துக்கும் கிடைத்தது மிகச் சிறந்ததாக கருதுகிறேன்.

எந்த ஒரு படைப்பாளியும் தன்னை முழுவதுமாக நம்பும் ஒரு தயாரிப்பாளரும், தயாரிப்பு நிறுவனமும் வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். எல்லா சூழ்நிலைகளிலும் நம்முடன் நின்று சிறந்ததைச் செய்யத் தூண்டுவார்கள்.

தயாரிப்பாளர் ஐஸ்வர்யா மற்றும் மசாலா பாப்கார்ன் நிறுவனம் எதிர்பார்த்ததை விட எமது தேவையை முழுமையாக நிறைவேற்றித் தந்தார்கள்”.

படம் சென்னையின் பல பகுதிகளில் படமாக்கப்பட்டு இருந்தாலும் இதன் பெரும்பகுதி சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளது.

‘NOVP’ திரைப்படம் வாழ்க்கையையும் நட்பையும் கொண்டாடும் வகையில் உணர்வுப்பூர்வமாக வந்துள்ளது ! படத்தைப் போலவே நிஜத்திலும் மசாலா பாப்கார்ன் மற்றும் ஐஸ்வர்யா மேம் ஆகியோருடனான நட்பு பயணம் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் நம்பிக்கை உள்ளது என்றார்.

படம் குறித்து இயக்குநர் வெங்கட்பிரபு கூறியதாவது…

“’சென்னை 28’ படத்தின் நினைவுகளுக்கு என்னை அழைத்து சென்ற இந்தப் படத்தை வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சி! சிறந்த கனவுகளுடன், இந்த அற்புதமான சினிமாவில் முத்திரை பதிக்க கடுமையாக முயற்சிக்கும் இந்த இளம் திறமைகளை பார்க்கும் போது எங்களையே மீண்டும் பார்ப்பது போல உள்ளது.

இந்த திறமைசாலிகளை அடையாளம் கண்டு எனக்கு அறிமுகப்படுத்திய ஐஸ்வர்யாவுக்கு நன்றி! ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் உங்கள் நண்பர்களைப் பற்றிய கதையாகவோ அல்லது உங்களைப் பற்றியதாகக் கூட இருக்கலாம்.

விரைவில் நாங்கள் அதை உங்களிடம் கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையின் சிறந்த நாட்களை மீட்டு தருவோம்! நண்பர்கள் அனைவருக்காகவும் நண்பர்கள் சேர்ந்து செய்த படம் இது” என்றார்.

பல அற்புதமான ஆச்சர்யங்களுடன், ஒரு சிறந்த பயணத்தை எதிர்நோக்குகிறோம் என்றும் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யா

Aishwarya speaks about her first production movie

‘விடாமுயற்சி’ சூட்டிங் எங்கே? எப்போ?அஜித்துடன் இணையும் டபுள் ஹீரோயின்ஸ்.!

‘விடாமுயற்சி’ சூட்டிங் எங்கே? எப்போ?அஜித்துடன் இணையும் டபுள் ஹீரோயின்ஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துணிவு’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித், இயக்குனர் மகிழ் திருமேனியுடன் தனது 62வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், ‘விடாமுயற்சி’ படத்தில் திரிஷா மற்றும் தமன்னா இணைந்து உள்ளார்கள்.

இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு வருகிற 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, புனே, அபுதாபி, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Ajith’s vidamuyarchi movie shooting update

அர்ஜூன்தாஸ் படத்திற்கு வித்தியாசமான பெயர் வைத்த ‘மௌனகுரு’ இயக்குநர்

அர்ஜூன்தாஸ் படத்திற்கு வித்தியாசமான பெயர் வைத்த ‘மௌனகுரு’ இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மெளனகுரு’, ‘மகாமுனி’ படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் கவனம் பெற்றவர் இயக்குனர் சாந்தகுமார்.

இவர் இயக்கவுள்ள மூன்றாவது படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க, ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜிஎம் சுந்தர், எஸ்.ரம்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தை ‘டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி’ தயாரிக்கிறது.

தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு சிவா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு ‘ரசவாதி – The Alchemist’ என படக்குழு தலைப்பு வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

ரசவாதி

Santhakumar’s film starring Arjun Das titled and first look poster unveils

விஜய்சேதுபதி படத்தை இயக்க முடியாது.; இயக்குநர் சேரன் ஓபன் டாக்

விஜய்சேதுபதி படத்தை இயக்க முடியாது.; இயக்குநர் சேரன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சேரன் சந்தித்தபோது அவரிடம் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டனர்.

அப்போது ஒருவர் விஜய் சேதுபதியுடன் இணைவீர்களா? படம் இயக்க வாய்ப்பு உண்டா? என கேட்டார்.

அதற்கு சேரன் பதில் அளிக்கும் போது..

“விஜய்சேதுபதியின் நிலை உயர்ந்துவிட்டது. எனவே அவருக்காக கதையில் மாற்றம் செய்ய வேண்டும்.

மேலும் மிகவும் பிசியாக இருக்கிறார். எனவே தற்போது அந்த படம் பண்ண முடியாது” என்றார் சேரன்.

I can’t direct Vijay sethupathi now says Cheran

More Articles
Follows