ரஜினிக்கு மட்டுமே நடக்கும் மேஜிக்.; பேட்ட ரிலீசுக்கு ஐடி கம்பெனிஸ் லீவு

IT companies declared holiday to Celebrate Rajinis Petta releaseசூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடல் ரஜினிக்காகவே எழுதப்பட்டது என்று நாம் அறிந்த ஒன்றுதான்.

ஏனென்றால் அவர் 6 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கிறார்.

உலக அரங்கில் இந்திய சினிமாவை தமிழ் சினிமாவை காட்டிய முக்கிய நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த்.

எனவே தான் அவருக்கு உலகளவில் தமிழே தெரியாத நாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் மன்றங்கள் உள்ளது.

எனவே ரஜினி படங்கள் ரிலீஸ் ஆகும் நாட்கள் திருவிழா போல் கொண்டாடப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக ஏன் நாளை கூட விடுமுறை தினமோ பண்டிகை தினமோ இல்லை. இருந்தாலும் ரஜினி படம் ரிலீஸ் என்றால் அது அனைவரின் பேச்சாக இருக்கிறது.

முதல் நாள் படத்தை பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஏங்குகிறார்கள்.

இதனையறிந்து பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர்.

கபாலி படத்தின் போது நிறைய ஐடி நிறுவனங்கள் விடுமுறை அளித்தன என்பதை பார்த்தோம்.

அதன்பின்னர் காலா படம், 2.0 படம் ஆகிய படங்களின் ரிலீசின் போதும் இந்த மேஜிக் நடைபெற்றது.

தற்போது இதே மேஜிக் பேட்ட ரிலீசுக்கும் நடைபெறுகிறது.

சென்னை மற்றும் பெங்களுரைச் சேர்ந்த சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து டிக்கெட் எடுத்துக் கொடுத்து பேட்ட படத்தை கண்டு களியுங்கள் என சர்குலர் (அறிக்கை) வெளியிட்டுள்ளனர்.

இது எல்லாம் ரஜினி என்ற ஒரு நடிகருக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாகும்.

IT companies declared holiday to Celebrate Rajinis Petta release

சில கம்பெனிகள் சர்குலர் இதோ…

Overall Rating : Not available

Latest Post