கமல்-சிவகார்த்திகேயனை நெருங்குவாரா பரத்..?

கமல்-சிவகார்த்திகேயனை நெருங்குவாரா பரத்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharathஅவ்வை சண்முகி படத்தில் கமல்ஹாசன் மற்றும் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் இருவரும் பெண் வேடமேற்று நடித்திருந்தனர்.

இந்த வேடங்கள் இவர்களுக்கு பொருத்தமாக அமைந்ததாலும், அருமையான நடிப்பை இவர்கள் வெளிப்படுத்தியதாலும் இப்படங்கள் மாபெரும் வெற்றிப் பெற்றன.

இந்நிலையில், வடிவுடையான் இயக்கத்தில் பரத், நமீதா, இனியா, ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ள படம் பொட்டு படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதன் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் பெண் கேரக்டரில் பரத் நடித்திருக்கிறாராம்.

கமல், சிவகார்த்திகேயன் போல பரத்தும் பெண் வேடத்தில் ஜெயிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

In pottu movie Bharath plays in female character

pottu bharath

மீண்டும் மீண்டும் ரஜினியை குறிவைக்கும் நட்ராஜ்

மீண்டும் மீண்டும் ரஜினியை குறிவைக்கும் நட்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kettapaiyanபிரபல ஒளிப்பதிவாளரான நட்டி என்ற நட்ராஜ் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவரின் நடிப்பில் உருவாகியுள்ள போங்கு மற்றும் எங்கிட்ட மோதாதே படங்கள் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன.

இதில் எங்கிட்ட மோதாதே படம் வருகிற மார்ச் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகராகவும் நடித்துள்ளார்.

இப்படத்தலைப்பு ரஜினிகாந்த்தின் சூப்பர் ஹிட் படமான ராஜாதி ராஜா படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் முதல் வரி என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இவர் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் தலைப்பை இன்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டார்.

அப்படத்திற்கு கெட்ட பையன் சார் இவன் என பெயரிட்டுள்ளனர்.

இந்த வரியும் ரஜினியின் பிரபலமாக பன்ச் டயலாக் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை சிக்ஸ் பேஸ் ஸ்டூடியோ தயாரிக்க, தீபக் இயக்குகிறார். காஷிப் என்பவர் இசையமைக்கிறார்.

Actor Natraj again targetting Rajinikanth punch dialogues

தனுஷ் நண்பர் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்யும் சுசித்ரா

தனுஷ் நண்பர் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்யும் சுசித்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Singer suchitra and karthik kumarதமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா.

இவர் கடந்த சில நாட்களாக அதிரடியான ட்விட்களை தன் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அதில் தனுஷ் மற்றும் நண்பர்களால் தான் தாக்கப்பட்டதாகவும் அவரது நண்பர்கள் அருகில் இருந்ததாகவும் காயம் பட்ட போட்டோக்களை பதிவிட்டு இருந்தார்.

இதனிடையில் இவர் நடிகர் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்யப்போவதாக அதிரடி அறிவித்துள்ளார்.

யாரடி நீ மோகினி படத்தில் தனுஷின் நண்பராக கார்த்திக் குமார் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

சினிமாவில் நடித்து வந்தாலும், தனது திறமைக்கேற்ற வாய்ப்பு கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகுவதாக சில மாதங்களுக்கு முன் கார்த்திக் குமார் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகார்ஜுனாவின் மகன் திருமணம் ரத்து… அதிர்ச்சியில் சமந்தா

நாகார்ஜுனாவின் மகன் திருமணம் ரத்து… அதிர்ச்சியில் சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Akhil-Shriya-Engagement-Latestபிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜீனாவுக்கு நாக சைதன்யா, அகில் என இரு மகன்கள் உள்ளனர்.

இதில் இளைய மகன் அகில் மற்றும் ஸ்ரேயாவின் திருமண நிச்சயத்தார்த்தம் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.

இதனையடுத்து இத்தாலி நாட்டில் மிகப்பிரம்மாண்டமாக இத்திருமணத்தை நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டனர்.

இதற்காக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பகர்ள் 700 பேருக்கு விமான டிக்கெட்டையும் முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் திடீரென இத்திருமணம் நடைபெறாது என நாகார்ஜீனா அறிவித்தார்.

இதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் அகில் மற்றும் ஸ்ரேயா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நாகார்ஜீனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கு திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது.

அகில் பிரச்சினை காரணமாக தன்னுடைய திருமணத்திற்கும் ஏதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்று சமந்தா தரப்பு அதிர்ச்சியில் உள்ளதாம்.

Akhil Akkineni’s wedding cancelled. Samantha Shocked

நயன்தாராவுடன் மலேசியா பறக்கும் சிவகார்த்திகேயன்

நயன்தாராவுடன் மலேசியா பறக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan nayantharaமோகன்ராஜா இயக்கத்தில் உருவாகும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மே 1ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படத்தின் நாயகி நயன்தாரா மற்றும் படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் மலேசியா செல்கிறார்.

அங்கு 35 நாட்கள் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம் டைரக்டர் மோகன்ராஜா.

அனிருத் இசையமைக்க, இப்படத்தை 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan fly to Malaysia for Velaikaran movie shoot

பெண்களுக்கு தனுஷின் ஸ்பெஷல் விருந்து

பெண்களுக்கு தனுஷின் ஸ்பெஷல் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush rajkiranநடிகர் தனுஷ்க்கு பெண் ரசிகைகள் அதிகம்.

இவர் தற்போது இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். இனி டைரக்டர் தனுஷ்க்கும் ரசிகர்கள் அதிகரித்தாலும் ஆச்சரியமில்லை.

இந்நிலையில் மார்ச் 9ஆம் தேதி மகளிர் தினத்தில், தன் இயக்கத்தில் உருவாகியுள்ள பவர்பாண்டி படத்தின் இசையை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இப்படத்தின் டப்பிங் பணிகளை இன்று தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராஜ்கிரண், சாயாசிங், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சீன் ரோல்டன் இசையமைக்க, தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Dhanushs Power Pandi treat on Womens day

More Articles
Follows