காலாவுக்கு எதிர்ப்பு கம்மிதான்; இன்னும் எதிர்பார்தேன்.. ரஜினி ஓபன் டாக்

காலாவுக்கு எதிர்ப்பு கம்மிதான்; இன்னும் எதிர்பார்தேன்.. ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I expected more opposition for Kaala movie Rajinikanth open talkரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கி தனுஷ் தயாரித்துள்ள காலா திரைப்படம் நாளை மறுநாள் ஜீன் 7ல் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு காவிரி பிரச்சினையால் கர்நாடகாவில் எதிர்ப்புகள் வந்தாலும் உலகமெங்கும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் தெலுங்கு பதிப்புக்கான காலா பிரஸ்மீட்டில் கலந்துக் கொண்டார் ரஜினிகாந்த்.

இதனை முடித்துவிட்டு சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது….

காலா படத்திற்கு கர்நாடகாவில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

கர்நாடக முதல்வர் நடவடிக்கை எடுப்பார். மேலும் நான் மதிக்கும் தேவகௌடா அவர்கள் இது குறித்து பேசுவார் என நம்புகிறேன்.

இந்த எதிர்ப்பு கம்மிதான். நான் இன்னும் அதிகமா எதிர்பார்த்தேன்.

படம் நன்றாக இருந்தால் மக்கள் பார்க்க போகிறார்கள். இல்லையென்றால் அவ்வளவுதான்.

சினிமா வேற அரசியல் வேற. இரண்டையும் எப்போதும் இணைத்து பார்க்கக்கூடாது” என ரஜினி ஓபனாக பேசினார்.

I expected more opposition for Kaala movie Rajinikanth open talk

அர்ஜூன்-விஜய் ஆண்டனி இணையும் கொலைகாரன் பட பர்ஸ்ட் லுக்

அர்ஜூன்-விஜய் ஆண்டனி இணையும் கொலைகாரன் பட பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kolaigaranகாளி மற்றும் திமிரு புடிச்சவன் படங்களை தொடர்ந்து கொலைக்காரன் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார் என்பதை சில தினங்களுக்கு முன் நம் தளத்தில் படித்தோம்.

இப்போது அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இதில் முதன்முறையாக அர்ஜூன் உடன் இணைந்து நடிக்கிறார்.

இப்படத்தை விஜய் ஆண்டனியின் நண்பர் ஆன்ட்ரூ லுயிஸ் இயக்குகிறார்.

தியா மூவிஸ் சார்பாக பிரதீப் என்பவர் தயாரிக்க, நாளை முதல் இப்பட சூட்டிங்கை துவங்கவுள்ளனர்.

Arjun and Vijay Antony teams up for Kolaigaran first look launch

ரஜினியின் பிம்பத்தை சிதைக்க முயல்கிறார் கமல் – தமிழருவி மணியன்

ரஜினியின் பிம்பத்தை சிதைக்க முயல்கிறார் கமல் – தமிழருவி மணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilaruvi Manian reaction towards Kamal speech about Rajiniதூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினிகாந்த் அண்மையில் பேசியிருந்தார்.

மேலும் போராட்டங்கள் அடிக்கடி நடைபெற்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என கூறியிருந்தார்.

இதுகுறித்து கமல் இன்று ஒரு பேட்டியில் பேசும்போது… ரஜினி பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து. போராட்டங்கள் தேவை. என்பதே என் கருத்து என பேசினார்.

இதுகுறித்து காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் கூறியதாவது…

மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்வர் கனவு கலைந்துவிடக் கூடும் என்று அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும் சில அமைப்புகளும் அவருடைய பிம்பத்தைத் திட்டமிட்டுச் சிதைக்க முற்படும் நேரத்தில் கமலஹாசனும் மறைமுகமாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் அந்தரங்க நோக்கத்தை மக்கள் எளிதாக இனம் காணக்கூடும்.

ரஜினிகாந்த் மக்கள் நலன் சார்ந்த எந்தப் போராட்டத்திற்கும் எதிரி அல்ல. மக்களால் வளர்த்தெடுக்கப்படும் வாழ்வாதாரப் போராட்டங்களில் வன்முறையாளர்கள் இடம் பெற்றிடலாகாது என்பதுதான் ரஜினியின் கவலையாக இருக்கிறது.

ரஜினி சொந்தக் கருத்தைச் சொல்லி இருப்பதாகவும், மக்கள் கருத்தையே தான் எப்போதும் முன்வைப்பதாகவும் கமல்ஹாசன் கூறியிருப்பதில் அவருடைய அந்தரங்க நோக்கம் தெளிவாகவே முகம் காட்டுகிறது.

சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் துணிவுதான் ஓர் உயர்ந்த தலைமைக்குரிய நல் அடையாளம்.

இந்த நாட்டை யார் ஆண்டால் என்ன என்றிருந்த நிலையில் ஒத்துழையாமை, சாத்விக சட்ட மறுப்பு, மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, தேசியக் கல்வி போன்ற தன் சொந்தக் கருத்துக்களின் மூலம் தான் காந்தி மக்கள் கருத்தை மாற்ற முயன்றார்.

அடங்கிக் கிடப்பதுதான் ஆண்டவன் எழுதி வைத்த விதி என்ற நம்பிக்கையில் ஒடுங்கிக் கிடந்த அடித்தட்டு மக்களிடம் தன் உரிமை சார்ந்த சொந்தக் கருத்துகளின் மூலம்தான் புரட்சிக் கனலை அண்ணல் அம்பேத்கார் மூட்டினார்.

தன்மான உணர்வின்றித் தலை தாழ்ந்து கிடந்த தமிழரிடையே பகுத்தறிவு சார்ந்த தன் சொந்தக் கருத்துக்களின் மூலம் தான் “அறிவும் மானமுமே மனிதற்கு அழகு” என்று பெரியார் சமூக மாற்றத்திற்கு வித்திட்டார்.

ரஜினிகாந்த் காந்தியும் இல்லை; அம்பேத்கரும் இல்லை; பெரியாரும் இல்லை. ஆனால் எந்த ஆதாயத்திற்காகவும் ரஜினி தன் சொந்தக் கருத்தை மறைத்து மக்கள் கருத்து என்ற போர்வையில் பதுங்குபவரில்லை.

காந்தியின் சீடர் என்று அடிக்கடி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கமல்ஹாசன் பெரிய தொழில்கள் காந்தியின் கனவு என்கிறார்.

கிராமக் கைத்தொழில்களும், சிறு குறு தொழில்களும், வேளாண்மையும் பல்கிப் பெருகுவதன் மூலமே அனைத்து மக்களும் வறுமையற்ற வாழ்வை அடைய முடியும் என்று இடையறாமல் வலியுறுத்திய காந்தி பெருந்தொழில்களுக்கு எதிராகவே இறுதிவரை போராடினார்.

கமலஹாசன் இனியாவது காந்தியப் பொருளாதாரம் குறித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

சமூக வலைத்தளங்களிலும், சில காட்சி ஊடகங்களிலும் ரஜினிக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன் பிடிக்கப் பார்ப்பது வருந்தத்தக்கது.

-தமிழருவி மணியன்

Kamal trying to exploit anti Rajini sentiment says Tamilaruvi Manian

Kamal trying to exploit anti Rajini sentiment says Tamilaruvi Manian

அக்னி தேவ் படத்திற்காக இணையும் பாபி சிம்ஹா-சதீஷ்

அக்னி தேவ் படத்திற்காக இணையும் பாபி சிம்ஹா-சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

agni devதேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா நடிக்கவுள்ள புதிய படத்திற்கு அக்னி தேவ் என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தின் இரண்டாவது நாயகனாக சதீஷ் நடிக்கிறார்.

இப்படத்தை சென்னையில் ஒரு நாள் 2 பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இருவரும் இயக்குகின்றனர்.

செனட்டோ ஸ்டூடியோ மற்றும்ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதன் படப் பூஜை இன்று கோவையில் உள்ள கோயிலில் நடைபெற்றது.

Actor Bobby Simha and Sathishs Next Titled AGNI DEV

பத்து பேர் ஒருத்தன எதிர்த்தா அவன் தலைவன்; ரஜினிக்காக தனுஷ் பேசிய பன்ச்

பத்து பேர் ஒருத்தன எதிர்த்தா அவன் தலைவன்; ரஜினிக்காக தனுஷ் பேசிய பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush reaction to Rajinikanths haters at Vijay awards 2018ரஜினிகாந்த்தின் மருமகன் நடிகர் தனுஷ் என்பது நாம் தெரிந்த ஒன்றுதான்.

ரஜினியின் அரசியல் வருகையொட்டி அவருக்கு ஆதரவாக மறைமுகமாக ரஜினியின் எதிரிகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் தனுஷ்.

காலா படத்தின் இசை வெளியீட்டின் போது தனுஷின் பேச்சுக்கு பலத்த கரவொலி இருந்தது.

அண்மையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு காரணம் சமூக விரோதிகளே பற்றி ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு விருது விழாவில் மீண்டும் ரஜினிக்கு ஆதரவாக தனுஷ் பேசினார்.

ஒருத்தன் பத்து பேர எதிர்த்தா வீரன், பத்து பேர் ஒருத்தன எதிர்த்தா அவன் தலைவன். புரியும்னு நினைக்கிறேன்.” என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush reaction to Rajinikanths haters at Vijay awards 2018

காலாவுக்காக பேச மாட்டாரா கமல்; அப்போ விஸ்வரூபம்.. பிரகாஷ்ராஜ் கேள்வி

காலாவுக்காக பேச மாட்டாரா கமல்; அப்போ விஸ்வரூபம்.. பிரகாஷ்ராஜ் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prakash Raj reaction towards Kamalhassan on Kaala ban in Karnatakaரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்திற்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

படத்தின் வெளியீடு அன்று அதாவது வருகிற ஜீன் 7ஆம் தேதி படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து காவிரி நீர் தொடர்பாக ரஜினியின் நெருங்கிய நண்பர் கமல் பேசினார்.

அப்போது கர்நாடகாவில் காலா ரிலீஸ் தொடர்பான பிரச்சினை குறித்து கேட்டதற்கு காலா இப்போது முக்கியமல்ல. மக்கள் பிரச்சினையான காவிரிதான் முக்கியம் என பேசியிருந்தார்.

இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாவது….

ஒரு திரைப்பட கலைஞராக கமல் அப்படி சொல்லியிருக்க கூடாது. விஸ்வரூபம் படத்தின் பிரச்சினையின் போது எல்லாரும் துணை நிற்க வேண்டும் என அவர் எதிர்பார்த்தார்.

ஆனால் தற்போது அது அவருக்கு தேவையில்லாத பிரச்சினையாக போய்விட்டது. ஆனால் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் என்ற முறையில் நான் நிச்சயம் பேச வேண்டும்.

அரசியலும் சினிமாவும் வேறு வேறு. இப்படி இரண்டையும் இணைத்து பார்க்க கூடாது” என பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

பின்குறிப்பு; கமல் நடித்த விஸ்வரூபம் படத்திற்கு தமிழகத்தில் தடை ஏற்பட்ட போது இஸ்லாமிய அமைப்புகளுக்கு 2013ல் ரஜினிகாந்த் கடிதம் எழுதியிருந்தார்.

அதில் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த கமல் என்ற மகா கலைஞனின் படத்தை தடை செய்ய கூடாது என வலியுறுத்தியிருந்தார்.

இந்த கடிதத்தை ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

Prakash Raj reaction towards Kamalhassan on Kaala ban in Karnataka

More Articles
Follows