என் கருத்துக்களை ரஜினி மூலம் சொல்கிறேன்; ரஞ்சித் ஓபன் டாக்

என் கருத்துக்களை ரஜினி மூலம் சொல்கிறேன்; ரஞ்சித் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I am using Rajini voice to say my thoughts says Ranjithகபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியை இயக்கும் வாயப்பை பெற்றார் ரஞ்சித்.

இவர் இயக்கியுள்ள காலா படத்தின் இசை வெளியீடு நேற்று (மே 9ஆம்) சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக ரஜினி ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது ரஞ்சித் பேசியதாவது…

படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.

“ரஜினி சாருக்கு பவர்ஃபுல்லான வாய்ஸ். அவர் ஒரு விஷயத்தை பேசினார் அதன் ரீச் பெரியளவில் இருக்கும். அதை நான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன் என நினைக்கிறேன்’ என தெரிவித்தார்.

I am using Rajini voice to say my thoughts says Ranjith

அதிபுத்திசாலி; தனுஷ்-ரஞ்சித்; நல்ல காலம்… காலா ஆடியோ ஹைலைட்ஸ்

அதிபுத்திசாலி; தனுஷ்-ரஞ்சித்; நல்ல காலம்… காலா ஆடியோ ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth speech High lights in Kaala audio launchஎவரும் எதிர்பாரா வகையில் மிகப்பிரம்மாண்டமாக காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கிட்டதட்ட 30 நிமிடங்கள் ரஜினிகாந்த் பேசினார். அவர் பேசியவற்றில் ஹைலைட்ஸ் பாய்ண்ட்ஸ் இதோ….

சிவாஜி பட வெற்றி விழாவில் பேசி கவுரவித்தார் திமுக. தலைவர் கருணாநிதி. அவரின் குரலை மீண்டும் கேட்க கோடான கோடி மக்களில் ஒருவனாய் நானும் ஆவலாய் உள்ளேன்.

ரோபோ படத்திற்கு பிறகு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவ உதவியாலும் ரசிகர்களின் பிரார்த்தனையாலும் மீண்டும் வந்தேன்.

மனசு சரியிருந்தால் உடம்பு நன்றாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்தால் மனசு நல்லாயிருக்கும். எனவே எனக்கு பிடித்ததை செய்ய சொன்னார்கள் மருத்துவர்கள். நடிப்பை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது.

எனவே சில நாட்கள் மட்டும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்தேன். அதுதான் கோச்சடையான். அப்போது டெக்னாலஜி அவ்ளே இல்லை.

எனவே முடிந்தவரை படத்தை ரிலீஸ் செய்ய சொன்னேன். அந்த படம் சரியாக போகவில்லை.

அதன்பின்னர் லிங்கா படத்தில் நடித்தேன். அதுவும் சரியாக போகவில்லை. நதிகள் அணை பற்றிய படம் அது.

தண்ணீர் பிரச்னை என்றால் என்னை அறியாமலும் ஆர்வம் வந்துவிடுகிறது. கங்கை நதியை பார்ப்பதற்காகவே நான் அடிக்கடி இமயமலை செல்கிறேன்.

அந்த இரண்டு படங்களும் சரியாக போகவில்லை. அப்போதுதான் ஒன்று தெரிந்துக் கொண்டேன்.

என்னைவிட வயது மிகவும் குறைந்த என் மகள் வயது பெண் (சோனாக்ஷி) நடித்தேன். அது இனி கூடாது என நினைத்தேன்.

கோச்சடையான் படத்தின் மூலம் அதிபுத்திசாலியுடன் பழகக்கூடாது என தெரிந்துக் கொண்டேன்.

நல்லவனாக இருக்கலாம்; மிகவும் நல்லவனாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் கோழை.

லிங்கா சரியாக போகவில்லை என்பதால் நான் நடித்து முடித்து விட்டேன் என சொன்னார்கள். 40 ஆண்டுகளாக அப்படித்தான் என்னை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்களும், கடவுளும் என்னை தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். யார் என்ன சொன்னாலும் நான் என் பாதையில் தொடர்ந்து செல்வேன்.

என் பட தயாரிப்பாளர் தனுஷ், அவர் என் மாப்பிள்ளை என்பதற்காக சொல்லவில்லை, நல்ல பையன், அப்பா – அம்மாவை ரொம்ப மதிக்கிறார்.

ரசிகர்களை மனதை வைத்து தான் ஒவ்வொரு படத்தின் கதையையும் கேட்கிறேன்.

காலா படம் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். காலா அரசியல் படம் அல்ல, ஆனால் அரசியல் இருக்கிறது.

ரஞ்சித் நிச்சயம் பெரிய ஆளாக வருவார். தன்னை சுற்றி இருப்பவர்களும் நன்றாக வர வேண்டும் என எண்ணுபவர். நிச்சயம் ரஞ்சித்திற்கு ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது. ரஞ்சித் திட்டமிட்டு படத்தை முடிப்பவர், தயாரிப்பாளர்களின் இயக்குநர்.

நான் எப்போதும் சொல்வது போல் தாய், தந்தையரை முதலில் கவனியுங்கள். குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்.

ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு இடம் கொடுங்கள். ஒவ்வொரு சிந்தனைக்கும் ஒரு கலர், எடை உள்ளது. எனவே மனதை சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள்.

எல்லாரும் நான் கடைசியாக அதை (அரசியல்) பேசுவேன் என எதிர்பார்க்கிறார்கள்.

கடமை இருக்கு, நேரம் பார்த்து வருவேன். நிச்சயம் தமிழ்நாட்டிற்கு நல்ல நேரம் பிறக்கும், வாழ்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த்!

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Rajinikanth speech High lights in Kaala audio launch

kaala audio crowd

விஜயகாந்த்-கமல் வழியில் இல்லாமல் தனி வழியில் செல்லும் ரஜினி

விஜயகாந்த்-கமல் வழியில் இல்லாமல் தனி வழியில் செல்லும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why Rajinikanth select Coimbatore to conduct his political meetஇந்திய சினிமாவில் ஜெயித்த ஹீரோக்கள் அரசியல் களத்தில் இறங்கி வருவது கால காலமாக நடந்து வருகிறது.

அதுவும் தமிழ்நாட்டில் சினிமாவையும் அரசியலையும் பிரித்து பார்க்க முடியாத படி பின்னி பிணைந்து கிடக்கிறது.

விஜயகாந்த் தன் தேசிய முற்போக்கு திராவிட கட்சியை மதுரையில் தொடங்கினார்.

அதனையடுத்து இவர் தற்போது சட்டசபையில் எம்எல்ஏவாக செயல்பட்டு வருகிறார்.

அண்மையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து கமல்ஹாசன் அரசியல் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார்.

இவரும் மதுரை மாநகரில் தன் முதல் அரசியல் மாநாட்டை நடத்தினார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் புதிய கட்சியை அறிவிக்கவுள்ளார்.

இவர் விஜயகாந்த், கமல்ஹாசன் அவர்களை போல் மதுரை மாநகரில் தன் அரசியல் மாநாட்டை நடத்தாமல் கோவை மாநகரில் நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம்.

இந்த மாநாடு அடுத்த ஜீன் மாதம் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

Why Rajinikanth select Coimbatore to conduct his political meet

kamal vijayakanth meet

BREAKING: நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை; ஜுன் மாதம் அரசியல் அதிரடி

BREAKING: நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை; ஜுன் மாதம் அரசியல் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth plans to conduct his political meet on June 2018 at Coimbatoreரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதனையடுத்து இன்று தன் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

அப்போது கட்சி ஆரம்பிப்பது குறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் தன் முதல் கட்சி மாநாட்டை கோவை மாநகரில் நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம்.

பொதுவாக திருச்சி மற்றும் மதுரையில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம் என கூறப்பட்டு வந்தது.

ஆனால் மக்கள் மன்றம் ஆன பின்னர் கோவை மாநகரில் அதிகப்படியான நபர்கள் இணைந்துள்ளதால், அங்கே தன் முதல் மாநாட்டை நடத்த முடிவு செய்திருக்கிறாராம்.

ஒரு பக்கம் அரசியல் மறுபக்கம் கட்சி என இரட்டை குதிரைகளில் எம்ஜிஆர் பாணியில் தன் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Rajinikanth plans to conduct his political meet on June 2018 at Coimbatore

Rajini meet at poes garden

ரஜினி படத்தில் நடித்து அவரை கவர்ந்த 3 வில்லன்கள் இவர்கள்தான்

ரஜினி படத்தில் நடித்து அவரை கவர்ந்த 3 வில்லன்கள் இவர்கள்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis favorite baddies from his movies Raghuvaran Ramya Krishnan and Nana Patekarஇந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கடந்த 40 ஆண்டு காலமாக ஜொலித்து வருகிறார்.

இதுவரை 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.

இவரது படங்களில் பல வில்லன்கள் நடித்திருந்தாலும் இதுவரை அவருக்கு பிடித்த வில்லன்கள் 3 பேர்தானாம்.

பாட்ஷா படத்தில் நடித்த ரகுவரன், படையப்பா படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் மற்றும் காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் என்றார்.

இந்த தகவலை அவர் காலா பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினியே தெரிவித்தார்.

Rajinis favorite baddies from his movies Raghuvaran Ramya Krishnan and Nana Patekar

கபாலி என் படமல்ல; காலா-தான் என் படம்.. ரஜினி ஓபன் டாக்

கபாலி என் படமல்ல; காலா-தான் என் படம்.. ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali is Director Ranjiths movie Kaala is my movie says Rajinikanthஅபூர்வ ராகங்கள் தொடங்கி கபாலி வரை 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார் ரஜினிகாந்த்.

இதுவரையில்லாமல் இதில் கபாலி படத்தில் தன் ஒரிஜினல் நரைத்த தாடியுடன் நடித்திருந்தார்.

இதுபற்றி அவர் காலா பட இசை வெளியீட்டில் கூறுகையில்….

கபாலி படத்தின் கதையை ரஞ்சித் என்னிடம் கூறியபோது… ஒரு டான் கதை இருக்கிறது என்றார். பாட்ஷா தொடங்கி நிறைய கதைகள் அதுபோல் வந்துவிட்டது. எனக்கு அது வேண்டாம் என்றேன்.

இல்லை இது மலேசியா வாழ் தமிழர்கள் பற்றிய டான் கதை என்றார்.

முதல் பாதியில் விறுவிறுப்பாக இருக்கும் கதை பின்னர் 2ஆம் பாதியில் தன் மனைவியை தேடிக் கொண்டே போவார் கபாலி.

தேடுவார்… தேடுவார்.. தேடுவார் என்றே சொல்லிக் கொண்டே இருந்தார். எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

பின்னர் என் நெருங்கிய நண்பர் தானுவிடம் அந்த கதையை சொல்ல சொன்னேன். அவருக்கு இந்த கதையை மிகவும் பிடித்துவிட்டது.

அதன்பின்னர் ஒத்துக் கொண்டேன். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ஆனால் கபாலி படம் என் படமல்ல. அது ரஞ்சித் படம். ஆனால் காலா படம் என் படம்.

என் ரசிகர்களை நினைத்தே நான் எல்லா கதைகளையும் கேட்பேன். அவர்களுக்கு பிடித்த விஷயங்கள் காலாவில் இருக்கும்.” என்றார்.

Kabali is Director Ranjiths movie Kaala is my movie says Rajinikanth

More Articles
Follows