ஹாட்ரிக் ஹிட் அடித்த சிவகார்த்திகேயன்

actor sivakarthikeyanமோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசி, சினேகா ஆகியோர் நடித்து கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி வெளியான படம் ‘வேலைக்காரன்’.

ஆர்.டி.ராஜாவின் ‘24AM STUDIOS’ நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிப் படமாக அமைந்தது.

‘வேலைக்காரன்’ வெளியாகி இன்று 50-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்னமும் சில தியேட்டர்களில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு படம் வெளியாகி தொடர்ந்து 50 நாட்கள் ஓடுவது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன் வெளியாகிய ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்களும் 50 நாட்கள் ஓடி வெற்றிப் படங்களாக அமைந்தன.

எனவே இத்துடன் 3 வெற்றிகளை கொடுத்து ஹிட்டடித்துள்ளார்.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய…
...Read More
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் வரிசையில்…
...Read More
சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் என்ற படம்…
...Read More
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ மற்றும் வேலைக்காரன்…
...Read More

Latest Post