‘பீஸ்ட்’ படத்திற்கு ரூ 1500 வரை டிக்கெட்.; தியேட்டரிலேயே நான்கு நாட்களுக்கு கட்டணம் உயர்த்த முடிவு.?

‘பீஸ்ட்’ படத்திற்கு ரூ 1500 வரை டிக்கெட்.; தியேட்டரிலேயே நான்கு நாட்களுக்கு கட்டணம் உயர்த்த முடிவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் 13ஆம் தேதியே வெளியாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகமெங்கும் மிகப்பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது.

பீஸ்ட் படத்திற்கான முன்பதிவு தமிழகத்தில் அமோகமாக உள்ளது.

சென்னையில் ரூ 1000 முதல் 1500 வரை டிக்கெட்டுக்கள் விற்கப்படுகிறது.

நானும் விஜய் ரசிகர்தான்.; ‘பீஸ்ட்’ ட்ரைலருக்கு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பாராட்டு

தமிழகத்தில் பல ஊர்களில் டிக்கெட் கட்டணம் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இதை தடுக்கத்தான் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

இந்த நிலையில், புதுச்சேரி திரையரங்குகளில் வரும் 13 முதல் 17ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மட்டும் புதுச்சேரி அரசு உத்தரவுப்படி காட்சிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக போர்டுகள் தயாரித்துள்ளனர். இது இணையத்தளங்களில் வைரலானது.

அதில் 3 ஆம் வகுப்பு கட்டணம் ரூ. 50ல் இருந்து ரூ.150ம், இரண்டாம் வகுப்பு ரூ. 75ல் இருந்து ரூ. 175 ம், முதல்வகுப்பு கட்டணம் ரூ. 100ல் இருந்து ரூ.200ம், பால்கனி ரூ. 150ல் இருந்து ரூ. 250ம், பாக்ஸ் ரூ. 160ல் இருந்து ரூ. 260ம் என்று உயர்த்தப்படுவதாக எழுதப்பட்டிருந்தது.

இதனால் சமூக ஆர்வலர்கள் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் இதுகுறித்த தரப்பில் விசாரித்தபோது…

“புதுச்சேரியில் திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதி தரவில்லை” என தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் புதுச்சேரியில் ‘பீஸ்ட்’ திரைப்படத்துக்கு டிக்கெட் கட்டணம் நான்கு நாட்களுக்கு மட்டும் அனைத்து வகுப்புகளிலும் ரூ. 100 உயர்த்தப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

High ticket price for Beast movie in pondicherry

படிக்காமல் பார்வேட் செஞ்சிட்டேன்.. மன்னிப்பு கேட்க வெட்கமில்லை..; கோர்ட்டில் எஸ்.வி.சேகர் மன்னிப்பு

படிக்காமல் பார்வேட் செஞ்சிட்டேன்.. மன்னிப்பு கேட்க வெட்கமில்லை..; கோர்ட்டில் எஸ்.வி.சேகர் மன்னிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவி வகித்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

அப்போது, பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த கண்டனங்களை அடுத்து அந்த பதிவுகளை நீக்கினார் SVE சேகர்.

ஆனாலும் சர்ச்சை பதிவு தொடர்பாக சென்னை காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

நடிகர்கள் சம்பளமே சங்கத்திற்கு போதும்; அஜித் ரகசியம் பற்றி எஸ்வி. சேகர்

இந்த புகாரின் பேரில் எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை நீக்கப்பட்டு, மன்னிப்பும் கேட்கபட்டது.

மேலும் எஸ்.வி.சேகர் தரப்பில் நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முறைமுறை கூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஜாதி கருத்து மோதல்; ரஜினி உங்களுக்கு புரிய வைப்பார் ரஞ்சித்… – எஸ்வி.சேகர்

அப்போது…

அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தை படித்து பார்க்காமல் பார்வேர்ட் செய்தேன்.

தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை என கூறி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறி மனு தாக்கல் செய்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது குறித்த நடிகர் எஸ்.வி.சேகரின் நிலைப்பாட்டை, நான்கு புகார்கள் மீதான வழக்குகளிலும் தனித்தனி பிரமான பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Women journos slam sexist comment by TN BJP leader SVe Sekher

Veteran கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் நடிப்பில் உருவான முதல் தமிழ் சினிமா

Veteran கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் நடிப்பில் உருவான முதல் தமிழ் சினிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அசல் ஓய்வுபெற்ற மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் நடித்துள்ள யதார்த்த படமாக உருவாகியுள்ளது ‘போலாமா ஊர் கோலம்’.

இப்படத்தை நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கியுள்ளார்.

கஜசிம்ஹா மேக்கர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். பிரபுஜித் படத்தை இயக்கியிருக்கும் நாகராஜ் பாய் துரைலிங்கம் கலாபிரபு தொடங்கி விக்னேஷ் சிவன், ஹெச். வினோத் வரை பல இயக்குநர்களிடம் பல்வேறுபட்ட படங்களில் துணை, உதவி, இணை இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்.

இதில் கதாநாயகனாக பிரதான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் பிரபுஜித், ஒரு நடிகராக ஏற்கெனவே சுட்டுப் பிடிக்க உத்தரவு ,ஜகமே தந்திரம், பேட்ட,போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

இவர்தன் பள்ளி, கல்லூரி நண்பர்கள் உதவியில் கிரவுட் பண்டிங் எனப்படும் கூட்டு நிதிப் பங்களிப்பு முறையில் தயாரித்துள்ளார்.

இன்னொரு முக்கிய பாத்திரமேற்றுள்ள மதுசூதன் பெரிசு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர்.

இதில் நாயகியாக நடித்துள்ள சக்தி மகேந்திரா பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவர்.

முதன் முதலாக இதில் நாயகியாக நடித்துள்ளார். கதாநாயகன் கதாநாயகியை இயக்குனர் அறிமுகம் செய்துள்ளார்.

இவர்கள் தவிர ரவி ஏழுமலை, துளசி, சிவகார்த்திக், சூர்யா, கிருஷ்ணா, ரபிக்,ஆதீ இராசன் போன்றோரும் நடித்துள்ளனர்
.இவர்களை இயக்குனர் அறிமுகம் படுத்தி உள்ளார்.

அதுமட்டுமல்ல 1980களில் மாநில, தேசிய அளவில் பங்கெடுத்துப் புகழ்பெற்ற மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அவர்கள் இன்றும் விளையாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களைச் சுற்றி இந்தக் கதை சுழல்கிறது.

ஓய்வுபெற்ற கால்பந்தாட்ட வீரர்கள் இப்படத்தில் நடித்து இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை உண்டுபண்ணி உள்ளது.

” இது வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது.

ஒரு மூத்த கால்பந்தாட்ட வீரர் தனது காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பயணம் மேற்கொள்கிறார்.

அவர் தனது பயணத்தில் சந்திக்கும் அழகிய காதல் மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான, அதிர்ச்சியான, சுவையான, சுவாரஸ்யமான சம்பவங்களின் கால் பந்தாட்டம் தொகுப்பு தான் இந்தப் படம். அந்தப் பயணத்தில் பல்வேறு முடிச்சுகளும் திருப்பங்களும் இருக்கும்.படமாகப் பார்க்கும் போது பார்வையாளர்களைக் கட்டிப் போடும்படி விறுவிறுப்பாக இருக்கும்” கால்பந்தாட்டத்தையும் அதன் அசல் தன்மையோடு ஊடுருவச் செய்து கலகலப்பான சுவாரசியமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது என்றார் இயக்குநர்.

இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி அதாவது, 80%ஆந்திராவிலும், 20% தமிழ்நாட்டிலும் நடைபெற்றுள்ளது.

ஒளிப்பதிவு வைஷாலி சுப்பிரமணியம். இவர் 70 சதவிகித காட்சிகளைப் படம் பிடித்துள்ளார். எஞ்சிய 30 சதவிகித பகுதிகளை டேவிட்பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் தீபக்.
படத்தில் ஒரே ஒரு சண்டைக் காட்சியும் ஒரே ஒரு பாடல் காட்சியும் உண்டு.

சண்டைக்காட்சிகளை குன்றத்தூர் பாபு அமைத்துள்ளார்.

இசை சமந்த் நாக். பாடலை அனுராதா எழுதியுள்ளார். பின்னணி இசை ஏ. ஆர். ரஹ்மானின் கேஎம் இசைப்பள்ளியில் கற்பிக்கும் கே.எம்.ரயான். இவர் ஏ. ஆர். ரகுமானின் மாணவர். பின்னணி இசை மிகச்சிறப்பாக வந்துள்ளது இயக்குனர் மகிழ்ச்சியில் உள்ளார்.

படத்தில் வரும் சினிமாத்தனம் இல்லாத யதார்த்தமான காட்சிகள் ரசிகர்களைக் கவரும் . அதை கொஞ்சமும் சமரசம் இல்லாமல் இந்தப் படத்தை உருவாக்கி இருப்பதாக இயக்குநர்
நாகராஜ் பாய் துரைலிங்கம் கூறுகிறார்.

உலகிலேயே veteran கால்பந்தாட்ட 20 வீரர்களை நடிக்க வைத்து உருவாக்கப்பட்டுள்ள முதல் படம் இது “என்று பெருமையுடன் கூறுகிறார் இயக்குநர் .

கால்பந்தாட்டப் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு யதார்த்தமான திரை அனுபவம் தரும். வணிக ரீதியிலான திருப்தியைத் தரும் என்று நம்புகிறார் இயக்குநர். இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.

“Polama oorgolam” becomes the first-ever Tamil movie to feature real-life veteran football players

கேஜிஎஃப் 2 சென்னை மீட் ஹைலைட்ஸ்.; பிரசாந்த் & விஜய் இருவரும் பலம்.; BEAST & KGF2 இரண்டுமே கொண்டாட்டம்தான்

கேஜிஎஃப் 2 சென்னை மீட் ஹைலைட்ஸ்.; பிரசாந்த் & விஜய் இருவரும் பலம்.; BEAST & KGF2 இரண்டுமே கொண்டாட்டம்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’.

இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.

‘கே ஜி எஃப் 2’ படத்தினை தமிழில் அறிமுகப்படுத்தும் விழா நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

விஜய்யின் ‘BEAST’ படத்துடன் ‘KGF2’ மோதலா.? யஷ் சூப்பரான விளக்கம்

இவ்விழாவில் படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனர் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, சண்டைப்பயிற்சி இயக்குநர் அறிவு, தமிழ் பதிப்பிற்கு வசனம் எழுதிய வசனகர்த்தா அசோக், ஒளிப்பதிவாளர் புவன் கௌடா, தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் கௌடா, நடிகை ஈஸ்வரி ராவ், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகர் சரண் இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் படத்தின் கதாநாயகனான ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வசனகர்த்தா அசோக் பேசுகையில், ” கே ஜி எஃப் 2 படத்தில் வசனம் எழுத வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் கடுமையாக உழைத்திருக்கிறோம்.

கே ஜி எஃப் 2 படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு டப்பிங் படம் என்ற உணர்வு ஏற்படாமல், முழுமையாகவே தமிழில் எழுதி பேசி நடித்திருக்கிறார்கள். எனவே இதற்கான சரியான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

நடிகர் சரண் பேசுகையில்….

,” தமிழில் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். இயக்குநர் பிரசாந்த் நீல் சார், ‘கேஜிஎப் 2’ படத்தில் வாய்ப்பளித்த போது உண்மையில் வியந்தேன். இது போன்ற பிரம்மாண்டமான படைப்புகளில் சிறிய பங்களிப்பை அளித்திருக்கிறோம் என்று மகிழ்ச்சி எனக்குள் இருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் ராக்கிங் ஸ்டார் யஷ் அவர்களின் எளிமையை கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். மனிதநேய மிக்க மனிதர். வாய்ப்பு அளித்ததற்கு நன்றி.” என்றார்.

நானும் விஜய் ரசிகர்தான்.; ‘பீஸ்ட்’ ட்ரைலருக்கு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பாராட்டு

சண்டைப்பயிற்சி இயக்குநர் அறிவு பேசுகையில்…

, ” இயக்குநர் ,தயாரிப்பாளர் ,ஒளிப்பதிவாளர் , ராக்கிங் ஸ்டார் யஷ் ஆகியோர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆக்சன் காட்சிகளில் நாங்கள் நினைத்தவற்றை காட்சிப்படுத்த இவர்களின் ஒத்துழைப்பு எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருந்தது. படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தியதை விட, ‘கே ஜி எஃப்’ என்ற கனவு உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் பிரசாந்த் நீல் அவர்களின் கற்பனைக்காக ஒருங்கிணைந்து பணியாற்றினோம்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பிரம்மாண்டமான படைப்பாக கேஜிஎப் 2 அமைந்திருக்கிறது. பான் இந்தியா படம் என்றோ, டப்பிங் படம் என்றோ எந்த எண்ணமும் ஏற்படாது. இது முழுக்க முழுக்க தமிழ் படம் என்ற உணர்வை ஏற்படுத்தும்.” என்றார்.

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில்,….

” கடினமாகவும், அர்ப்பணிப்புடனும் உழைத்து கே ஜி எஃப் 2 படைப்பை உருவாக்கி இருக்கிறோம். படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் தயாரிப்பாளர் பிரபு அவர்களுக்கு படக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

படப்பிடிப்பு தளத்தில் ராக்கிங் ஸ்டார் யஷ் நிஜ நட்சத்திர நாயகனைப் போல் எங்களிடம் அக்கறையும், அன்பும் காட்டினார். தயாரிப்பாளர், இயக்குநர், ராக்கிங் ஸ்டார் மூவரும் இணைந்து உருவாக்கிய கே ஜி எஃப் உலகத்தை காண ஏப்ரல் 14ஆம் தேதி வரை காத்திருக்க முடியாது. இந்த உலகை காண உற்சாகமாக வாருங்கள். கொண்டாடுங்கள். அற்புதமான அனுபவத்தை பெறுங்கள். வெற்றிபெற செய்யுங்கள்.” என்றார்.

‘மாஸ்டர்’ டீசர் ரெக்கார்டை அடித்து நொறுக்கிய ‘கேஜிஎஃப் 2’ டீசர்..; ஆனாலும் விட்டுக் கொடுக்காத விஜய் ரசிகர்கள்.. ஏன்?

படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசுகையில்….

, ” கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்திலேயே இணைந்து பணியாற்ற வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பல்வேறு சூழல் காரணமாக இணைந்து பணியாற்ற முடியவில்லை. கே ஜி எஃப் படத்தின் ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய கலைஞர்கள் தெளிவான திட்டமிடலுடன் நேர்த்தியாக பணியாற்றியதால் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படைப்பாக இது உருவாகி இருக்கிறது.

எங்களுடைய நிறுவனத்திலிருந்து தயாராகும் திரைப்படங்களை மட்டுமே விநியோகித்துக் கொண்டிருந்தோம். அதன் பிறகு ஏனைய தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களையும் வினியோகிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.

திரைப்பட துறையில் பிரம்மாண்டத்திற்கு என எப்போது ஒரு தனி ஈர்ப்பு உண்டு. டைரக்டர் ஷங்கர் சார் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டம் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தினார்.

அதனால் திரைத்துறை ஆரோக்கியமாக வளர்ச்சி அடைந்தது. வணிக எல்லையும் விரிவடைந்தது. புதுபுது தொழில்நுட்பங்களும், புதிய சிந்தனைகளும் உருவானது. மற்றொருபுறம் ராஜமௌலி சார் பிரம்மாண்டத்தை தன் பாணியில் வழங்கி ஆச்சரியப்படுத்தினார்.

அதை தொடர்ந்து பிரசாந்த் நீல் சார் அனைவரையும் திக்குமுக்காடும் வகையில் புதிய வகையிலான பிரமாண்டமான கே ஜி எஃப்பை வழங்கினார். எப்படி அவரால் இப்படியும் ஒரு விசயத்தை சிந்திக்க முடிந்தது என்று வியந்து பார்க்கிறேன்.

‘Beast & KGF2’ உடன் இணையும் ‘Haraa’.; தமிழ் புத்தாண்டில் விருந்தளிக்கும் விஜய்ஸ்ரீ

ஒவ்வொரு மாநில திரைத்துறையும் ஒன்றிணைந்து இன்று இந்திய திரைப்படத் துறை என்ற புது வடிவம் பெற்றிருக்கிறது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு மொழியில் உருவான படத்தை இந்தியா முழுவதும் பார்வையாளர்களால் ரசிக்கப்படுவது சந்தோஷமாக இருக்கிறது. இதன்மூலம் சர்வதேச தரத்திலான படைப்புகளை உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இது சாதாரணமான விசயமல்ல. இதற்கான முயற்சியை தயாரிப்பாளர், இயக்குநர், நட்சத்திர நடிகர் என மூவரும் ஒன்றிணைந்து, பொறுமையுடன் காத்திருந்து ,தெளிவான திட்டமிடலுடன் உழைத்து பூர்த்தி செய்திருக்கிறார்கள். இந்த வகையில் உருவான கே ஜி எஃப் 2 ஏப்ரல் 14ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவதற்காக எங்களின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறது.

தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாகி இருப்பதால் கொண்டாட்டமான காலகட்டம். இரண்டு படங்களையும் பார்த்து கொண்டாடுங்கள். இயக்குநர் பிரசாந்த் நீல் அவர்கள் கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது படத்தை இயக்கிவருகிறீர்கள்.

விரைவில் தமிழிலும் திரைப்படத்தை இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ராக்கிங் ஸ்டார் யஷ் அவர்களுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உருவாகி இருப்பதால், நீங்களும் தமிழில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.

இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில்…

, ” கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்திற்கு பேராதரவு வழங்கிய தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கேஜிஎப் 2 படத்திற்காக கடந்த 3 ஆண்டுகளாக அளித்துவரும் அன்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படைப்புகள் மூலம் இரு மாநில மக்களுக்கு இடையே பரந்த மனப்பான்மை ஏற்பட்டிருப்பதாக கருதுகிறேன்.

கே ஜி எஃப் 2 படத்தை வெளியிடுவதில் ஒத்துழைப்பு வழங்கி வரும் தயாரிப்பாளர் பிரபு அவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அழகான நடிகர்களை வைத்துக்கொண்டு கே ஜி எஃப் போன்ற அற்புதமான கதையை சொல்லியதற்காக நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கே ஜி எஃப் படத்தின் வெற்றிக்கு என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களின் முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பு வழங்கினர். அதனால்தான் இந்தப் படத்தை பிரம்மாண்ட படைப்பாக உருவாக்க முடிந்தது. கே ஜி எஃப் என்ற கனவு உலகத்தை காட்சிகளாக நடிகர் யஷ்ஷால் உணர முடிந்தது. அதனால் அதனை அவர் தன்னுடைய தோள்களில் ஒற்றை ஆளாக சுமந்து பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கியிருக்கிறார்.

இதற்காக அவருக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.” என்றார்.

‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் பேசுகையில்….

, ” மூன்று ஆண்டுகளுக்கு முன் என்னுடைய நண்பர் விஷால் மூலம் கேஜிஎப் படத்தின் முதல் பாகத்தை வெளியிட்டோம். அதற்கு ஆதரவு அளித்ததற்காக இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் இருக்கும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடும் உழைப்பாளிகள். சண்டைப்பயிற்சி இயக்குநர் அன்பறிவு இதற்கு சிறந்த உதாரணம். சண்டைக் காட்சிகளின் போது ஒவ்வொரு ஷாட்டிலும் மிகுந்த அக்கறையுடன் பாதுகாப்பு அம்சங்களை ஒன்றுக்கு பல முறை ஆய்வு செய்து பிறகு நடிகர்களை அக்காட்சியில் நடிக்க வைப்பார்.

அவரது இந்த அணுகுமுறை அவருடைய தொழில் மீது அவர்கள் காட்டும் அர்ப்பணிப்பை உணர்த்தியது. இதற்காக நான் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய கடின உழைப்பிற்கு, படத்தின் முதல் பாகத்தில் பணியாற்றியதற்காக அன்பறிவு மாஸ்டருக்கு தேசிய விருது கிடைத்தது.

வசனகர்த்தா அசோக் கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் கூடுதலாக உழைத்திருக்கிறார். சாதரணமாக இது ஒரு டப்பிங் படம் என்று அனைவரும் சொல்வார்கள். ஆனால் கேஜிஎப்பைப் பொருத்தவரை ஒவ்வொரு மொழிக்குரிய முக்கியத்துவத்தை அளித்திருக்கிறோம்.

ஏனெனில் மொழி என்பது மதிப்புமிக்கது அதற்குரிய மரியாதை தரவேண்டும். ஒட்டு மொத்த படக்குழுவினரும் அதற்கான மரியாதையை வழங்கியிருக்கிறோம். ஒவ்வொரு மொழிக்கேற்ற வகையில், அதன் நேட்டிவிட்டி மாறாமல் வசனங்களை எழுதியிருக்கிறார்கள்.

இதற்காக வசனகர்த்தாவிற்கு பிரத்யேக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சேகர் என்ற கலைஞர் எனக்காக தமிழில் பின்னணி பேசி இருக்கிறார் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் பாகத்திலேயே நான் தமிழில் பின்னணி பேச முயற்சித்தேன். ஆனால் முழுமையான தன்னம்பிக்கை இல்லாததால் பேசவில்லை. இனி வரும் படங்களில் தமிழில் பின்னணி பேச முயற்சிக்கிறேன்.

Kannada God of Films…. KGF கேஜிஎஃப் விமர்சனம்

பாடலாசிரியர் மதுரகவியின் பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒளிப்பதிவாளர் புவனிடம்,‘ உனக்கு தான் கொஞ்சம் தமிழ் தெரியுமே.. பேசலாமே என்று கேட்டேன். அதற்கு அவர் மைக் முன் சென்றால், கன்னடமும் மறந்துவிடும்’ என்றார்.

மைக்கில் பேசவில்லை என்றாலும் அவர் திரையில் தன் திறமையை பேச வைத்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளரான கார்த்திக், பட உருவாக்கத்திலும், படப்பிடிப்பிற்கான திட்டமிடலும் தன்னுடைய பங்களிப்பை நேர்த்தியாக செய்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சரண் நல்ல திறமையான நடிகர். அவர் நடித்த காட்சி ஒன்றைப் பார்த்து வியந்தேன். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

நடிகை ஈஸ்வரி ராவ் அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்பொழுது மிகுந்த உற்சாகமாக இருப்பார். ஆனால் காட்சியின்போது க்ஷண நேரத்தில் சோக காட்சியில் நடித்துவிட்டு பிறகு மீண்டும் உற்சாகமாக பழகுவார். அவரின் இந்த மேஜிக்கான திறமை கண்டு வியந்திருக்கிறேன்.

நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கேஜிஎஃப்காக செலவழித்த காலகட்டத்தை நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவரின் இந்த அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. இது எந்த நடிகையிடம் இல்லாதது. ஏனெனில் ஒவ்வொரு நடிகைக்கும் காலம் பொன் போன்றது. இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் அவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்.

கே ஜி எஃப்பை பொருத்தவரை இயக்குநர் பிரசாந்த் தான் பலம். தயாரிப்பாளர் விஜய் அவர்களும் இதற்கு பக்கபலமாக இருந்தார். இந்த இருவரும் தான் கே ஜி எஃப் உருவாக காரணமாக இருந்தனர்.

ஏப்ரல் 14ஆம் தேதியன்று கேஜிஎப் 2 வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

KGF chapter 2 press meet high lights

சம்பள பாக்கியை கேட்டு 3 ஆண்டுகளாக ஏன் வழக்கு போடவில்லை.?.; சிவகார்த்திகேயனுக்கு கோர்ட் கேள்வி

சம்பள பாக்கியை கேட்டு 3 ஆண்டுகளாக ஏன் வழக்கு போடவில்லை.?.; சிவகார்த்திகேயனுக்கு கோர்ட் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019-ம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான ‘மிஸ்டர் லோக்கல்’ படம் வெளியானது.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.

இந்த படம் சுமாராகவே ஓடியது.

இந்த நிலையில் இந்த மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட 15 கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஞானவேல்ராஜா சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை அவர் தயாரிக்கும் படங்களில் முதலீடு செய்யத் தடை தேவை.

மேலும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடுகளை தடை செய்ய வேண்டும் எனவும் சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தனக்கு சம்பள பாக்கி ரூ.4 கோடி தர வேண்டும் என நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட பதினைந்து கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது நீதிபதி மூன்று ஆண்டுகளாக சம்பளப் பாக்கியை கேட்டு ஏன் வழக்கு தொடரவில்லை. தற்பொழுது டிடிஎஸ் தொகையை வசூலிக்கும் வருமான வரித்துறையின் நடவடிக்கை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கும் நிலையில் மற்றொரு வழக்காக ஏன் இதை தொடர்ந்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி இது தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு ஏப்ரல் 13 தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

High court questioned Sivakarthikeyan on Mr local issue

கேட்டு உதவியவர் ரஜினி.. கேட்காமல் உதவியவர் அஜித்.. விஜய், சூர்யாவும் உதவினர்.; SIDDY விழாவில் R.V.உதயகுமார் பேச்சு

கேட்டு உதவியவர் ரஜினி.. கேட்காமல் உதவியவர் அஜித்.. விஜய், சூர்யாவும் உதவினர்.; SIDDY விழாவில் R.V.உதயகுமார் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக திரு.மகேஷ்வரன் நந்தகோபால் அவர்கள் தயாரிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் படம் ‘சிட்தி’ ( SIDDY )
இந்த படத்தை பயஸ் ராஜ் (Pious Raj) எழுதி இயக்கியுள்ளார். அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா உதயகுமார் மற்றும் ஹரிதா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்,

சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவன் ” சிட்தி ” தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொலையாளியாக மாறுகிறார். அவர் ஏன் கொலையாளியாக மாறினார் ? இறுதியில் என்ன நடந்தது ? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளார்கள்.
அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, இப்படம் விரைவில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலிலையில் இப்படத்தின் தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில் ..
தயாரிப்பாளர் திரு.மகேஷ்வரன் நந்தகோபால் பேசியது…

சிறப்பு விருந்தினர் அனைவருக்கும் நன்றி. சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் முதல் படம் சிட்தி. இது ஒரு கூலான திரில்லர் படமாக இருக்கும். புதுமையான படமாக இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நாயகி அக்ஷயா உதயகுமார் பேசியதாவது…

முதல் முறை ஒரு மேடையில் தமிழ் பேசுகிறேன் எல்லோருடைய வாழ்க்கையிலும் முதன் முதலாக நடக்கும் சம்பங்கள் மிக சந்தோசமாக இருக்கும் அப்படிப்பட்ட கனவு தான் எனக்கு “சிட்தி” படம். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

இயக்குநர் சண்முகம் முத்துசாமி பேசியதாவது…
சிட்தி டிரெய்லர் பாடல் எல்லாம் பார்க்க நன்றாக இருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும். படத்தில் ஒளிப்பதிவு மிக நன்றாக இருந்தது. நான் எடுக்கும் படத்திற்காக போட் சீக்வென்ஸ் எடுக்க மிக கஷ்டப்பட்டேன் இப்படத்தில் மிக அழகாக எடுத்துள்ளார்கள். இசையில் நிறைய வித்தியாசம் இருந்தது கதையின் பரபரப்பை இசையில் தந்துள்ளார் ரமேஷ் நாராயணன். கதைக்கு ஏற்ற கதாநாயகனாக இருக்கிறார் ஹீரோ. நாயகியும் மிக அழகாக இருந்தார். டிரெய்லரில் சொல்ல வந்தது மிக எளிதாக புரிந்தது, இந்தப்படம் நிச்சயமாக பெரிய வெற்றி பெறும்.

சின்னப்படம் பெரிய படம் என ஒரு பஞ்சாயத்து போய்க்கொண்டே இருக்கிறது இரண்டு படத்திற்கும் ஒரே உழைப்பு தான். ஒரு பெரிய நடிகர் சொன்னதை இங்கு சொல்கிறேன் படம் எடுக்கும் போது சின்ன படம், பெரிய படம் என எதுவும் இல்லை அதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் இங்கு எல்லோரும் சின்னதாக இருந்து வந்தவர்களே படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணன் பேசியதாவது..,

நான் 100 படங்களுக்கு மேல் பல மொழிகளில் வேலை செய்துள்ளேன். ஒரு படத்தில் மொத்த படக்குழுவினரும் நன்றாக இருந்தால் தான் படம் நன்றாக வரும். சிட்தி படத்தில் மிக அற்புதமான குழுவினர் இணைந்துள்ளார்கள். எல்லோருக்கும் படம் பற்றிய புரிதல் இருந்ததாலே தான் இந்தப்படம் நன்றாக வந்துள்ளது.

இயக்குநர் ஒரு நாள் எனது இந்துஸ்தானி இசையை வேறு ஜானரில் கலந்து பயன்படுத்த போவதாக சொன்னார். அவரது தெளிவு பிரமிக்க வைத்தது. இந்தப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.

நடிகை கன்னிகா பேசியதாவது…

நான் மனோகரி படத்தில் வேலை செய்துள்ளேன் இந்தப்படம் பற்றி தெரியும் படம் நன்றாக வந்துள்ளது. மிக நல்ல தயாரிப்பாளர் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் நன்றி.

தயாரிப்பாளர் ராஜன் பேசியதாவது…

சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் என்றவுடன் எனக்கு ஏ எம் ரத்னம் அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறார். ஷங்கரை வைத்து, படமெடுத்து சம்பாதித்து அதே பணத்தை இங்கே படத்திலேயே விட்டுவிட்டு அதை அடைக்க தெலுங்கில் போய் படமெடுத்துகொண்டிருக்கிறார். சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் நல்ல பெயர் நன்றாக வரும். இந்த கடின காலத்திலும் தமிழில் படத்தை கொண்டு வரும் தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி. மலையாள சினிமாவில் சினிமாவுக்கு உண்மையாக இருப்பார்கள். இப்போது நான் எல்லாம் மலையாளப்படம் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரை சிரமப்படுத்துகிறார்கள் அவர்களை காப்பாற்றுங்கள் என்று தான் கேட்கிறேன். கேரளாவில் எல்லா நடிகர்களும் உதவி செய்கிறார்கள். இங்கே யார் உதவி செய்கிறார்கள். கொரோனா காலத்தில் ரஜினி சார் போன் செய்து என்ன உதவி வேண்டும் எனக்கேட்டு 100 மூட்டை அரிசி கொடுத்தார்.

ராம் சரண் படம் தோற்ற போது நான் ஹீரோ என்பதால் தான் படம் வாங்கினார்கள் என தயாரிப்பாளருக்கு 15 கோடியை திருப்பி கொடுத்தார். ராதே ஷ்யாம் படம் பெயிலர் பிரபாஸ் அந்த படத்திற்கு வாங்கிய பணத்தில் 50 கோடியை திருப்பி கொடுத்துவிட்டார். ராம் சரண், பிரபாஸை வணங்குகிறேன். வெற்றியில் பங்கு கொள்ளும் ஹீரோக்கள் தோல்வியிலும் பங்குகொள்ள வேண்டும். இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் RV உதயகுமார் பேசியதாவது,

படம் என்பது வேறு, குணாதிசியம் வேறு. ஒரு மென்மையானவன், வன்மையானவனாகிறான் என்பதை படமாக எடுக்கலாம். அது தான் இந்த படத்திலும் காட்டபட்டுள்ளது. அப்பாவி எப்படி சிக்கலுக்குள் மாட்டிகொள்கிறான் என்பது தான் கதை. ஹீரோக்களை ராஜன் அதிகமாக திட்டுகிறீர்கள், அது தவறு. தமிழ் சினிமாவில் விஜயகாந்த் போன்று சாப்பாடு போட்டவர் யாரும் இல்லை.

என்னை கூட்டி போய் சாப்பாடு போட்டவர் விஜயகாந்த். யாரும் பசியுடன் இருப்பது பிடிக்காமல் சாப்பாட்டு போட்டவர் விஜயகாந்த். கொரோனா காலத்தில் இயக்குனர் சங்கத்துக்கு ரஜினிகாந்த் போன் செய்து, எவ்வளவு பேர் கஷ்டத்தில் இருக்கீறீர்கள் என கேட்டு உதவியவர். எழுத்தாளர் சங்கத்திற்கும் உதவினார்.

கேட்காமலயே உதவியவர் அஜித் குமார். தோல்வி படத்திற்கு பிறகு அதே நிறுவனத்திற்கு படம் செய்து கொடுப்பவர்.
வாழ்ந்து பார்த்தால் தான் இயக்குனராக முடியும். சில டூபாக்கூர் இயக்குனர்கள் உள்ளனர்.

சிவாஜி சார், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் பிரபு என்னை அழைத்து சிவாஜி சாரிடம் கதை சொல்ல சொன்னார். நான் முதல் நாள் பார்த்த ஆங்கில படத்தின் கதையை கூறினேன். அதை கேட்ட அவர், இப்போதெல்லாம் பலர் சப்டில் ஆக்டிங், நேச்சுரல் ஆக்டிங் என சொல்கிறார்கள், நான் அதிகமாக நடித்துவிட்டேன், நான் மாற்றி நடிக்க வேண்டும் என்றார் சாகும் தருவாயிலும் நடிப்பில் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்த ஒப்பற்ற கலைஞன் அவர்.

சிலருக்கு தர்மம் பற்றி தெரியவில்லை. நமக்கு லாரன்ஸ், விஜய், சூர்யா என பலர் உதவினர். அவர்களை வாழ்த்த வேண்டும்.

இப்பொழுது சினிமாவை பிசினஸ் ஆக்கி விட்டீர்கள். சினிமா மீது ஆர்வம் கொண்டவர்களை இயக்குனராக்காமல், பணம் கேட்பவருக்கு கொடுத்து கெடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இந்த படம் தமிழ் தயாரிப்பாளர், மலையாள குழு உடன் படம் எடுத்துள்ளார். முன்னர் எல்லா மொழியும் சென்னையில் தான் எடுக்கபட்டது. இப்பொழுது தான் பான் இந்தியா என்ற வார்த்தை உள்ளது. ஆனால் முன்னரே அப்படி தான் எடுக்க பட்டது. அதை மாற்றியவர்கள், வியாபாரிகள். இசையமைப்பாளர் பற்றி தயாரிப்பாளரும், இயக்குநரும் தான் கூற வேண்டும். இசையமைப்பாளர் பாடல்களை சிறப்பாக உருவாக்கியுள்ளார் வாழ்த்துக்கள். சமீபத்தில் நான் பார்த்த டிரெய்லர்களில் என்னை விஷுவலாக அசத்தியது இந்தப்படம் தான். படத்தில் எல்லோரும் நன்றாக செய்துள்ளார்கள். ஹீரோயின் பெயரில் என் பெயரும் உள்ளது வாழ்த்துக்கள் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது..,
தயாரிப்பாளர் எனக்கு அறிமுகமானது, மனோகரி படத்தின் மூலமாக தான். அப்பொழுது அவர் கூறியது, மலையாளத்தில் நான் ஒரு படம் முடித்துள்ளேன், ஒரு தமிழனாக நான் தமிழில் முதல் படம் வெளியாக வேண்டும் என நினைக்கிறேன். மலையாள திரையுலகம் மிகபெரிய திரையுலகமாக இருக்கும் போது, அவர் தமிழ் மேல் கொண்ட ஈர்ப்பு அளப்பறியது. அவர் இந்த படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என்று விரும்பினார். இயக்குநருடன் நான் பேசிய வார்தைகள் குறைவு தான். பின்னர் இசையமைப்பாளர் பற்றி கூறிய போது, அவர் ஒரு மெலடி கிங் என கூறினார். அவர் சிறப்பாக வேலை செய்துள்ளார். மொத்த குழுவும் அயராத உழைப்பை தந்துள்ளனர். படத்தின் நிகழ்வை சென்னையில் வைக்கும் போது, யாரையாவது அழைக்கலாம் என்றபோது ராஜன் சாரை அழையுங்கள், உதயகுமார் சாரை அழையுங்கள் என்றேன். எல்லா நிகழ்வுகளுக்கும் இருவரும் வருகிறார்கள் என்ற சோர்வு பத்திரிக்கையாளருக்கு இருக்கும்.

சினிமாவில் யாரும் தோற்றுவிட கூடாது என நினைப்பவர்கள் அவர்கள். அவர்கள் அருகில் அமர்வது எனக்கு மகிழ்ச்சி. படத்தின் ஒளிப்பதிவு மிகவும் கடினமானது. கடலில் எடுத்த காட்சிகள் மிகவும் கடினமாது. தயாரிப்பாளரிடம் நான் ஓடிடிக்கு போகலாம் என கூறிய போது, அவர் தியேட்டர் தான் என்று உறுதியுடன் கூறினார். காரணம் அவர் இயக்குனராக வேண்டும் என சென்னை வந்தவர். அதனால் நான் சாதிக்க முடியாததை நிகழ்த்தி காட்ட, தயாரிப்பாளராக மாறியவர். படம் கண்டிப்பாக வெற்றி பெறும். வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் ஆரி பேசியதாவது…,
நான் உள்ளே வரும் போதே யாரார் வந்திருக்கிறார்கள் என கேட்டேன் ராஜன் சார், உதயகுமார் சார் வந்திருக்கிறார்கள் என்றார்கள், அப்போ நான் போய்விடுகிறேன் அவர்களே எல்லாவற்றையும் பேசிவிடுவார்கள் என்றேன். சின்ன பட்ஜெட் படங்களுக்கு யாரும் உதவாத போது, அப்படத்திற்கு ஜாமின் தரும் முதல் ஆட்களாக அண்ணன் ராஜன் அவர்கள் இருக்கிறார்கள். அண்ணன் ஏன் எல்லா பிரச்சனையும் பேசுகிறார் என்றால் அவருக்கு அவ்வளவு பிரச்சனை இருக்கிறது. அண்ணனும் நானும் பேசிக்கொண்டிருக்கும் போது ஒன்று ஞாபகம் வந்தது. நலிந்த தயாரிப்பாளர்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும், ஒரு நலிந்த தயாரிப்பாளரை காட்டுங்கள் ஒரு ரூபாய் பணம் வாங்காமல் நான் நடித்து தருகிறேன். இதே உதவியை நான் நடிகர் சங்கத்திற்கும் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த இயக்குனரும் நானும் சேர்ந்து ஒரு படம் செய்வதாக இருந்தது ஆனால் அதை தடுத்தது மோடி தான், டிமானிடைசேசன் வந்தது அது படத்தை பாதித்து விட்டது.

நீங்கள் கேஜிஎஃப் ரசிகராக இருந்தாலும் ஓகே பீஸ்ட் ரசிகராக இருந்தாலும் ஓகே ஆனால் படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள். இந்தப்படம் டிரெய்லரே தரமாக இருக்கிறது. அதில் உழைப்பு தெரிகிறது. தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் பயஸ் ராஜ் பேசியதாவது…

இந்தப்படம் மிக சிறந்த திரில் அனுபவமாக இருக்கும். இசையமைப்பாளர் மிக சிறப்பான இசையை தந்திருக்கிறார். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் I. M. விஜயன், ராஜேஷ் சர்மா, ஹரி கிருஷ்ணன், சிஜீ லால், வேணு மரியாபுரம், சொப்னா பிள்ளை, மதுவிருத்தி, திவ்யா கோபிநாத், தனுஜா கார்த்தி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு : கார்த்திக் S. நாயர்

இசை : ரமேஷ் நாராயணன்

வசனம் : சீனிவாச மூர்த்தி

பாடல்கள் : சினேகன், மலர் வண்ணன்.

எடிட்டிங் : அஜித் உன்னிகிருஷ்ணன்

நடனம் : சாமி பிள்ளை

ஸ்டண்ட் : பவன் சங்கர்

கலை : பெனித் பத்தேரி

மக்கள் தொடர்பு : மணவை புவன்

தயாரிப்பு :மகேஷ்வரன் நந்தகோபால்

தயாரிப்பு நிறுவனம் : சூர்யா பிலிம் புரொடக் ஷன்ஸ்.

எழுத்து – இயக்கம் : பயஸ் ராஜ் (Pious Raj).

Siddy audio launch

Director RV Udhaya Kumar praises top actors at SIDDY audio launch

More Articles
Follows