‘மாஸ்டர்’ டீசர் ரெக்கார்டை அடித்து நொறுக்கிய ‘கேஜிஎஃப் 2′ டீசர்..; ஆனாலும் விட்டுக் கொடுக்காத விஜய் ரசிகர்கள்.. ஏன்?

Masterகன்னட நடிகர் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘கேஜிஎப்’ பட இரண்டாம் பாகமான ‘கேஜிஎப் சேப்டர் 2′ டீசர் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

இன்று காலையில் வெளியிடவிருந்த நிலையில் டீசர் நேற்று இரவில் ‘லீக்’ ஆனதால் இரவு 9.29 மணிக்கே டீசரை வெளியிட்டனர்.

பத்து மணி நேரத்திற்குள் அதுவும் இந்திய இரவு நேரத்திலும் இந்த டீசர் சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர் 24 மணி நேரத்தில் 1.85 மில்லியன் லைக்குகளைப் பெற்று சாதனை புரிந்தது.

அந்த சாதனையை 10 மணி நேரத்தில் ‘கேஜிஎப் 2′ டீசர் முந்திவிட்டது.

மேலும், ‘மாஸ்டர்’ டீசர் 78 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்குகள் பெற்றது.
அந்த சாதனையை ‘கேஜிஎப் 2 டீசர்’ 75 நிமிடங்களில் முறியடித்துவிட்டது.

பெரும்பாலும் கன்னட படங்களை அந்த மாதிலத்தவர் தவிர எவரும் பார்ப்பதில்லை.

ஆனால் KGF படம் அந்த எண்ணத்தை விரட்டியுள்ளது.

கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் இப்படம் ரிலீசாகவிருந்தாலும் அனைத்திற்கும் பொதுவாக ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டிருந்தனர்.

தற்போது வரை 20 மில்லியன் பார்வைகளை இந்த டீசர் கடந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்..

‘கேஜிஎப் 2′ டீசர் ஆங்கிலத்தில் வெளியானதால் இந்த சாதனையை செய்துள்ளது.

ஆனால், ‘மாஸ்டர்’ டீசர் தமிழில் மட்டுமே அந்த சாதனையை நிகழ்த்திவிட்டது என தளபதி விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

KGF Chapter 2 breaks Master teaser records

Overall Rating : Not available

Latest Post