ஜெயிலரை என்னையா பண்ணி வச்சிருக்கீங்க.? நெல்சன் அனிருத்தை கலாய்க்கும் தென்னிந்திய ரசிகர்கள்

ஜெயிலரை என்னையா பண்ணி வச்சிருக்கீங்க.? நெல்சன் அனிருத்தை கலாய்க்கும் தென்னிந்திய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.

இந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், தமன்னா, வசந்த் ரவி, சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

‘ஜெயிலர்’ படம் 2023 தீபாவளி வெளியீடாக இருக்குமோ என பல யூகங்கள் வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 10ஆம் தேதி ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்து வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக தென்னிந்தியாவில் ரஜினி ரசிகர்களும் மோகன்லால் ரசிகர்களும் சிவராஜ் குமார் ரசிகர்களும் இந்த பின்னணி இசையை கலாய்த்து வருகின்றனர்.

யோவ் நெல்சா என்னய்யா பண்ணி வச்சிருக்கிக்க.?

யோவ் அனிருத் என்னய்யா பண்ணி வச்சிருக்க? என பல கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியின் அறிமுகக் காட்சி வருவதற்கு முன் தமன்னா ரம்யா கிருஷ்ணன் சுனில் மோகன்லால் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரின் கேரக்டர்கள் வருகின்றன.

அவையெல்லாம் நொடி பொழுதில் வந்து மறைகின்றன. எனவே எதையும் முழுதாக பார்க்க முடியவில்லை என கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக ரஜினியின் தோற்றம் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றே தெரிகிறது.

South Indians fans trolls Nelson Anirudh in Jailer Combon

முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்தனர்

முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்தனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘டியர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ டியர்’.

இப்படத்தில் முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் குமார்- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.

ருக்கேஷ் படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரகதீஷ் கவனித்திருக்கிறார். ஆடை வடிவமைப்பாளராக அனுஷா மீனாக்ஷி பணியாற்றியிருக்கும் இந்த படத்தில் இடம்பெறும் பாடலொன்றை ராப் பாடகரும், பாடலாசிரியருமான அறிவு எழுதி, பாடியிருக்கிறார்.

ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு நரேன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் ஜி வி பிரகாஷ்குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் தோற்றம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. மேலும் பல சுவாரஸ்யங்களூட்டும் காட்சிகள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸிடம் மிகுந்த வரவேற்பைப் பெரும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

டியர்

GV Prakash Aishwarya Rajesh starrer Dear First Look Unveiled

OFFICIAL ரஜினி மோகன்லால் தமன்னா இணையும் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி

OFFICIAL ரஜினி மோகன்லால் தமன்னா இணையும் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.

இந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், தமன்னா, வசந்த் ரவி, சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே ரஜினி ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

2023 தீபாவளி வெளியீடாக இருக்குமோ என பல யூகங்கள் வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்து வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர்

rajini’s Jailer release from August 10th

ஐஸ்வர்யா ரஜினியின் ‘லால் சலாம்’ சூட்டிங் அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்

ஐஸ்வர்யா ரஜினியின் ‘லால் சலாம்’ சூட்டிங் அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவிதா ராஜசேகரும் ‘லால் சலாம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகையாக வரவுள்ள ‘லால் சலாம்’ படத்தில் அவர் ரஜினிகாந்தின் தங்கையாக நடிப்பதாக கூறப்படுகிறது.

விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.

இந்நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் இன்று தொடங்கியது.

மேலும், இப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Vishnu Vishal begin the next schedule of ‘Lal Salaam’ in Mumbai

பொன்னியின் செல்வன் 2 வில் நடித்த இள வயது குந்தவை யார் தெரியுமா ?

பொன்னியின் செல்வன் 2 வில் நடித்த இள வயது குந்தவை யார் தெரியுமா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்னியின் செல்வன் 2 படத்தில் இள வயது குந்தவையாக நடிகை நிலா என்பவர் நடித்திருந்தார்.

தமிழ் சீரியல் நடிகர்களான கவிதா பாரதி மற்றும் கன்யா பாரதியின் ஒரே மகள் நிலா என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ‘சித்தி’ நாடகத்தை இயக்கி புகழ் பெற்றவர் கவிதா பாரதி என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிகாவின் ‘ராட்சசி’ யிலும் நடித்துள்ளார். ‘தெய்வம் தந்த வீடு’, ‘அன்பே வா’, தொடர்களில் நடித்து பிரபலமானவர் கன்யா பாரதி.

கேரளாவில் படித்துக் கொண்டிருக்கும் நிலா, தீவிர தணிக்கைக்குப் பிறகு இளம் குந்தவை வேடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Can you guess who the young Kundavai in ‘Ponniyin Selvan 2’ is?

மனோபாலா மறைவுக்கு நேரில் வராத ரஜினி – கமல் – அஜீத்; நெட்டிசன்கள் கண்டனம்..!

மனோபாலா மறைவுக்கு நேரில் வராத ரஜினி – கமல் – அஜீத்; நெட்டிசன்கள் கண்டனம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான மனோபாலா உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.

மனோபாலாவுக்கு தற்போது 69 வயது. இவருக்கு கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

மனோபாலா நேற்று மே 3-ம் தேதி மதியம் சிகிச்சை பலனின்றி காலமானார்.

40 ஆண்டுகளாக சினிமாவில் துறையில் மனோபாலா பல நடிகர் நடிகைகளின் உடன் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.

நடிகர்கள் விஜய், கவுண்டமணி, பாக்யராஜ், மோகன், விஜய்சேதுபதி, சரத்குமார், நடிகைகள் ராதிகா, பூர்ணிமா பாக்யாராஜ், கோவை சரளா, இயக்குனர்கள் மணிரத்தினம், ஷங்கர் உள்ளிட பலர் மனோபாலா உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில், பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார் இவர்கள் மனோபாலா உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த வரவில்லை.

இதனால், பிரபல நடிகர் மனோபாலா மறைவுக்கு ரஜினி, கமல், அஜித் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்த வராததால் நெட்டிசன்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Rajini, Kamal, Ajith   did not attend the funeral of Manobala

More Articles
Follows