மகேஷ் பாபு படத்திலிருந்து விஜய் பட நாயகி விலகல்.; தனுஷ் நாயகி இணைந்தார்?!

மகேஷ் பாபு படத்திலிருந்து விஜய் பட நாயகி விலகல்.; தனுஷ் நாயகி இணைந்தார்?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடுத்து வரும் ‘குண்டூர் காரம்’ படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் நாயகியாக விஜய்யின் ‘பீஸ்ட்’ பட ஹீரோயின் பூஜா ஹேக்டே ஒப்பந்தமானார். ஈனால் மகேஷ்பாபு வீட்டில் நடைபெற்ற அடுத்தடுத்து இரண்டு துக்க நிகழ்ச்சியால் படப்பிடிப்பு தாமதமானது.

எனவே நாயகி பூஜாவின் கால்ஷீட் விவகாரத்தில் குளறுபடி உருவானது.

இதனையடுத்து அவர் இந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதிய நாயகியாக சம்யுக்தா கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது்

இவர் சமீபத்தில் வெளியான தனுஷின் ‘வாத்தி’ மற்றும் ‘விருபாக்‌ஷா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Samyuktha pairs with Mahesh babu in Telugu movie

‘லியோ’-வே விட்டுட்டாங்க ‘ஜெயிலர்’ காணல.; நெல்சனுக்கு டென்ஷன் கொடுக்கும் ரஜினி ரசிகர்கள்

‘லியோ’-வே விட்டுட்டாங்க ‘ஜெயிலர்’ காணல.; நெல்சனுக்கு டென்ஷன் கொடுக்கும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த இரு தினங்களாக அதாவது ஜூன் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு தினங்களில் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்ட பெயர் ‘லியோ’.

நேற்று நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ‘நா ரெடி…’ என்ற முதல் சிங்கிள் வெளியானது.

இதற்கு முந்தைய நாள் ஜூன் 21ஆம் தேதி இயக்குனர் நெல்சனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

நெல்சன் தற்போது ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 50 நாட்கள் மட்டுமே ஜெயிலர் ரிலீசுக்கு இடைவெளி உள்ள நிலையில் படத்தின் பாடலோ போஸ்டரோ டீசரோ எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிள் தற்போதே வெளியாகி உள்ளதால் ‘ஜெயிலர்’ அப்டேட் கேட்டு ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இனியாவது ரஜினி ரசிகர்களை டென்ஷனில் விடாமல் அடுத்தடுத்து அப்டேட்டுகளை நெல்சன் வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.

Rajinikanth fans tension with Nelson

தமிழில் 1.. தெலுங்கில் 1.; வாடி வாசலுக்கு முன்பே 2 படங்களில் கமிட்டாகும் சூர்யா.?!

தமிழில் 1.. தெலுங்கில் 1.; வாடி வாசலுக்கு முன்பே 2 படங்களில் கமிட்டாகும் சூர்யா.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் உருவாகும் ‘கங்குவா’ என்ற படத்தில் சூர்யா 10 விதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.

இந்த படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் மிகவும் பிரம்மாண்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வெற்றிமாறனின் படம் தாமதமாகும் எனக் கூறப்படும் நிலையில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு படம் ‘சூரரைப் போற்று’ புகழ் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்திலும் தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு என்பவர் இயக்கத்திலும் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இதுவரை இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Before Vaadivasal Suriya committed 2 movies

LCU சொன்னாரே.. ‘லியோ’ பட போஸ்டரை கூட காப்பியடிச்சி இருக்காரே லோகேஷ்.?!

LCU சொன்னாரே.. ‘லியோ’ பட போஸ்டரை கூட காப்பியடிச்சி இருக்காரே லோகேஷ்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்தை தன்னுடைய வழக்கமான LCU பாணியில் உருவாக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

நேற்று ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு நான் ரெடி என்ற முதல் சிங்கள் வெளியானது.

மேலும் ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இதில் ரத்தம் தெறிக்க தெறிக்க சுத்தியலை சுழற்றி அடிப்பதாக விஜய் போஸ் கொடுத்திருந்தார்.

இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ‘லியோ’ பட போஸ்டர் ஹாலிவுட் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் தெரிவித்து ஒரு படத்தையும் பகிர்ந்துள்ளனர்.

‘Game of Thrones’ வெப் தொடரில் வரும் ஜான் ஸ்னோவ் போஸ்டர் லுக் போன்று இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Game of Thrones

Leo poster is copycat of Game of Thrones

ANJALI 50 POOJA மனிதாபிமானமற்ற வாழ்வியலில் அறம் நிறைந்த பெண்ணாக அஞ்சலி

ANJALI 50 POOJA மனிதாபிமானமற்ற வாழ்வியலில் அறம் நிறைந்த பெண்ணாக அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை அஞ்சலி நடிக்கும் 50வது படம் “ஈகை”.

இன்று ஜூன் 22 தேதியில் சென்னை போரூரில் பூஜையுடன் படப்பிடிப்போடு தொடங்கப்பட்டது .

இயக்குனர் இமையம் பாரதிராஜா , புஷ்பா பட வில்லன் சுனில், இளவரசு, புகழ், அறிமுக நடிகர் ஹரி, அபி நட்சத்திரா, நிஷாந்த் ரகு, கிருஷ்ண சந்தர், காஷ்யப் பார்பயா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

கிரீன் அமூசிமெண்ட் மற்றும் D3 புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது.

ஈகை

இந்த விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளிதரன் முன்னிலையில் நடந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் , இந்தி ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப்படம் சென்னை, மற்றும் ஐதராபாத், மும்பையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

சஸ்பென்ஸ் நிறந்த சமூக கருத்துள்ள படமாக உருவாகிறது, ஈகைக்குணம் குறைந்த இன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவும் வன்முறைகளும், மனிதாபிமானமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் அறம் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு இந்த “ஈகை” என்கிறார் அறிமுக இயக்குனர் அசோக் வேலாயுதம்.

ஈகை

படத்திற்கு தரன்குமார் இசையமைக்கிறார்,
ஒளிப்பதிவு ஸ்ரீதர்,
எடிட்டர் பிரவீன் KL,
கலை – த .இராமலிங்கம்.
நடனம் – ஸ்ரீதர்
பாடல்கள் – விவேகா, அறிவு
சண்டை- கணேஷ்.

தயாரிப்பு – தங்கராஜ் லட்சுமி நாராயணன், ஜெ. தினகர்.

ஈகை

Anjalis 50th movie Eagai movie pooja happened

2023ல் தரமான படங்களில் ஒன்று.; குறட்டை விடாமல் ஓடிடி-யில் ‘குட் நைட்’ பாருங்க

2023ல் தரமான படங்களில் ஒன்று.; குறட்டை விடாமல் ஓடிடி-யில் ‘குட் நைட்’ பாருங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெய் பீம்’ மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்த வெளியான திரைப்படம் ‘குட்நைட்’.

இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கினார்.

இப்படத்தில் நாயகியாக மீதா ரகுநாத் நடிக்க, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘குட்நைட்’ திரைப்படம் கடந்த மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘குட்நைட்’ திரைப்படம் வருகிற ஜூலை 3-ஆம் தேதி முதல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

Good night movie release on disney plaus hotstar from july 3

More Articles
Follows