Kannada God of Films…. KGF கேஜிஎஃப் விமர்சனம்

Kannada God of Films…. KGF கேஜிஎஃப் விமர்சனம்

நடிகர்கள்: யஷ், தமன்னா மற்றும் பலர்
இயக்கம் – பிரசாந்த் நீல்
ஒளிப்பதிவு – புவன் கவுடா
இசை – ரவி பஸ்ரூர்
பிஆர்ஓ – நிகில் முருகன் (தமிழ் பதிப்பு)

கதைக்களம்…

கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 4 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள யஷ் படத்தை தமிழில் விஷால் வெளியிட்டுள்ளார்.

கேஜிஎஃப் என்றால் கோலார் கோல்டு ஃபீல்டு. தமிழில் கோலார் தங்க வயல் என்பார்கள்.

தங்கச் சுரங்கத்தில் வேலை செய்பவர்கள் எப்படி எல்லாம் அடிமையாக நடத்தப்படுகிறார்கள்.

அவர்களை எப்படி நம் ஹீரோ மீட்டு எடுக்கிறார்? அவர் எதற்காக அங்கு சென்றார்? என்பதே படத்தின் ஒன் லைன்.

சாகும் தருவாயில் உள்ள தாய், தனது மகன் யஷ்ஷிடம் நீ சாவதற்குள் பெரிய பணக்காரனாக ஆக வேண்டும் என சத்தியம் வாங்கி இறக்கிறார்.

எனவே பணத்துக்காக எதையும் செய்யும் ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டராக உருவாகுகிறார்.

ஒரு சூழ்நிலையில் இவருக்கு அதிபயங்கரமான ப்ராஜக்ட் வருகிறார்.

கோலார் தங்க சுரங்கத்திற்கு சென்று அங்குள்ள ஒருவனை அழிக்க சொல்கிறார்கள்.

அங்கு செல்வதே மிகப்பெரிய சவாலான விஷயமாகும். அங்கு சென்றவர்கள் உயிருடன் திரும்பி வரவே முடியாது. அந்த காரியத்தை செய்தால் மிகப்பெரிய தொகை தருவதாக யஷ்ஷிடம் உறுதியளிக்கின்றனர்.

இதனையடுத்து அவர் அங்கு எப்படி சென்றார்? வில்லனை அழித்தாரா? பணக்காரன் ஆனாரா? தான் ஒரு மான்ஸ்டர் என்பதை நிரூபித்தாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஒட்டு மொத்த படத்தையும் தனி ஒருவனாக தாங்கி உயர்ந்து நிற்கிறார் யஷ். நல்ல உயரம், உடல்வாகு என அசால்லடாக அசர வைத்திருக்கிறார்.

முகம் முழுக்க தாடி, நீண்ட தலை முடி என மிரட்டல் தோற்றத்தில் அதகளம் செய்திருக்கிறார்.

கோலார் தங்க சுரங்கத்தில் ஸ்கெட்ச் போட்டு இவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் செம.

யஷ்க்கு ஜோடியாக ஸ்ரீனிதி ஷெட்டி நடித்துள்ளார்.

ஒரு பாடலுக்கு தமன்னாவும், மற்றொரு பாடலுக்கு நாகினி புகழ் மவுனி ராயும் வந்து குத்தாட்டம் போட்டுள்ளனர்.

அச்சுகுமார், அனந்த் நாக், அர்ச்சனா ஜோஸ், அய்யப்பா ஷர்மா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் கலை பணிகளில் ஷிவ குமார் மிரட்டியிருக்கிறார். கலை பணிக்காக இவருக்கு தேசிய விருதே கொடுக்கலாம்.

சண்டைக் காட்சிகளில் அன்பறிவ் மாஸ் காட்டியுள்ளனர்.

“எவன் முதல அடிக்கிறான் என்பது முக்கியமல்ல. ஆனா எவன் முன்னே கீழே விழுறான் என்பதுதான் முக்கியம்.
கில்லாடி.. கில் லேடி…” உள்ளிட்ட வசனங்கள் படத்திற்கு வரவேற்பை பெறும்.

ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை செம. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் மிரட்டலான இசையை கொடுத்து நம்மை சீட்டோடு கட்டிப் போட்டுள்ளார்.

புவன் கவுடாவின் ஒளிப்பதிவில் கோலார் தங்க வயல் காட்சிகள் அருமை. இப்படியும் ஒரு வாழ்க்கையா? என நம்மை வியக்க வைத்துள்ளார்.

மேலும் மும்பை காட்சிகளும் சிறப்பாய் அமைந்துள்ளன.

படத்தை ஒரு கிறிஸ்துமஸ் விருந்தாக கொடுத்துள்ள டைரக்டர் பிரசாந்த் நீல் அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

இந்த படமும் பாகுபலி போல் 2 பாகங்களாக வரும். தற்போது முதல் சாப்டர் மட்டுமே முடிந்துள்ளது.

கே ஜி எஃப் – KGF Kannada God of Films

KGF movie review rating

Comments are closed.

Related News

கன்னடத்து சினிமா ராக் ஸ்டார் யஷ்…
...Read More
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த டிசம்பர்…
...Read More
பிரசாந்த் நீள் இயக்கத்தில் ராக்கிங் ஸ்டார்…
...Read More