தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘லியோ’ படத்தை தொடர்ந்து ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் ஜெய் மற்றும் பிரேம்ஜி நடிக்க உள்ளனர்.
ஏற்கனவே விஜய்யுடன் ‘பகவதி’ படத்தில் ஜெய் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஜெயிக்கு ஜோடியாக நடிகை அபர்ணாதாஸ் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது நிலையில் சண்டைப் இயக்குனர்களாக அன்பறிவ் சகோதரர்கள் இணைந்துள்ளனர். அன்பறிவ் மாஸ்டர்கள் ஏற்கெனவே ‘பீஸ்ட்’ & ‘லியோ’ ஆகிய படங்களில் விஜய்யுடன் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stunt Masters Anbarivu will join in Thalapathy 68