நானும் விஜய் ரசிகர்தான்.; ‘பீஸ்ட்’ ட்ரைலருக்கு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பாராட்டு

நானும் விஜய் ரசிகர்தான்.; ‘பீஸ்ட்’ ட்ரைலருக்கு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படம் அடுத்த வாரம் ஏப்ரல் 13ம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

எனவே இதன் தெலுங்கு & ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இப்பட டிரைலர் வெளியானது.

அந்த டிரைலரைப் பார்த்து தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய பாராட்டுக்களை பதிவிட்டுள்ளார் பாலிவுட் நடிகரான ஷாரூக்கான்.

‘பீஸ்ட்’ டிரைலர் திரையிடல்.. தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்..; ரஜினியை போல் விஜய் நஷ்ட ஈடு கொடுப்பாரா.?

“டைரக்டர் அட்லியுடன் நான் அமர்ந்திருக்கிறேன், அவர் எந்த அளவிற்கு விஜய்யின் பெரிய ரசிகரோ அதே அளவிற்கு நானும் ரசிகர் தான்.

பீஸ்ட் குழுவிற்கு பெஸ்ட் ஆக அமைய வாழ்த்துகள். டிரைலர் மீனர்…லீனர்… ஸ்ட்ராங்கர்…ஆக உள்ளது,” எனப் பாராட்டியுள்ளார்.

விஜய்யின் ‘பீஸ்ட்’ பட டிரைலரைப் பாராட்டியதோடு, தானும் விஜய் ரசிகர் தான் என ஷாரூக் பதிவிட்டுள்ளதை தளபதி ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Shah Rukh Khan praises Vijay’s beast trailer

அருண் விஜய் நடித்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் சூர்யா

அருண் விஜய் நடித்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த படமான ” ஓ மை டாக்”(oh my dog) 21 ஏப்ரல் 2022 அன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது அமேசான் பிரைம் வீடியோ.

இந்த படம் ” 2D என்டர்டெய்ன்மென்ட்” பேனரில் தயாரிக்கப்பட்டு, சரோவ் ஷண்முகம் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ளது.

இப்படம் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த (தாத்தா, அப்பா, மகன் மூவரின்) கதாபாத்திரங்களின் புகழ்பெற்ற உண்மையான குடும்பக் கதையாகும்.

அருண் விஜய் மற்றும் அவரது மகன் அர்னவ்(அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் பிரத்யேகமாக தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் கண்டு மகிழலாம்.

தன் படத்திலிருந்து விலகிய சூர்யாவை எதிர்க்க அருண் விஜய்யை மோதவிடும் ஹரி.?

இப்படம் ஒவ்வொரு குழந்தையும், செல்லப்பிராணியை விரும்புபவர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒன்று.

” ஓ மை டாக்” அர்ஜூன் (அர்னவ்) மற்றும் கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பா பற்றிய உள்ளத்தை தொடும் கதையாகும். ஒவ்வொரு குழந்தையும், குடும்பமும் பார்த்து மகிழவேண்டிய படம்.

எல்லா குடும்பங்களிலும் சாதாரணமாக நடக்கும் சம்பவங்கள், ஆசாபாசங்கள், முதல் முக்கியத்துவம், கவனிப்பு, தைரியம், வெற்றி, ஏமாற்றங்கள், நட்பு, தியாகம், நிபந்தனையற்ற காதல் மற்றும் விஸ்வாசம் போன்ற எல்லா உணர்வுகளின் கலவையாக உள்ளது இப்படம்.

சூர்யா படத்தில் விஜயகுமாரின் பேரனும் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் அறிமுகம்

இந்த படத்தை தயாரித்தவர்கள் ஜோதிகா-சூர்யா, மற்றும் இணை தயாரிப்பாளர்கள் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் RB டாக்கீஸின் எஸ் ஆர். ரமேஷ் பாபு. இசையமைப்பு நிவாஸ் பிரசன்னா மற்றும் ஒளிப்பதிவு கோபிநாத் ஆகியோர் செய்துள்ளனர்.

இப்படம் பிரைம் வீடியோ மற்றும் 2D என்டர்டைன்மென்ட் ஆகிய இருவருக்குமிடையே 4-பிலிம் வியாபாரத்தின் ஒரு பகுதியாகும்.

பிரைம் வீடியோவின் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் 21 ஏப்ரல் 2022 அன்று, தமிழ் மற்றும் தெலுங்கில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு, வரும் கோடை விடுமுறையை வேடிக்கையாகவும், குடும்பங்களை மகிழ்விக்கும் நோக்கத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

Prime Video announces the launch date of its upcoming family entertainer Oh My Dog

‘மாநாடு’ & ‘மன்மதலீலை’ தொடர்ந்து தெலுங்கு நடிகருடன் இணையும் வெங்கட் பிரபு

‘மாநாடு’ & ‘மன்மதலீலை’ தொடர்ந்து தெலுங்கு நடிகருடன் இணையும் வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கிய
’மாநாடு’ மற்றும் ’மன்மதலீலை’ ஆகிய இரண்டு படங்களும் 4 மாத இடைவெளியில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு கொடுத்துள்ளது.

இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியானது.

இதில் நாயகனாக நாகசைதன்யா நடிக்க உள்ளார். இவர் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் ஆவார். தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் ஆவார்.

இந்த படத்தை பிரபல இந்த படத்தை ஸ்ரீ நிவாசா சில்வர் ஸ்க்ரீன் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கிறார் .

கள்ளக்-காதல் மன்னன்..; மன்மத லீலை விமர்சனம் 3.5/5

இதன் விவரம் வருமாறு..

‘மங்காத்தா’ என்ற பெரும் பிளாக்பஸ்டர் படத்திற்கு பிறகு, தற்போது ‘மாநாடு’ என்ற பெரும் வெற்றியுடன் வந்துள்ளார்.

மாநாடு திரைப்படதின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடும் வேளையில், மன்மதலீலை என்ற படத்தோடு துரிதமாக வந்தார். குறுகிய காலகட்டத்தில் உருவான இந்த படம், அவரது இயக்கத்தில் மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் படமாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்குனராக அவதாரம் எடுத்து 15 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், நாகசைதன்யா உடன் அவர் இணையும் இருமொழி படத்தின் அறிவிப்போடு அவர் வந்திருக்கிறார்.

சிம்பு WIN டைம் லூப்..; மாநாடு விமர்சனம் 4/5

நாகசைதன்யா இந்த வருடத்தில் பங்கார ராஜு என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து, “ Thank you” என்ற அவரது அடுத்த படம் வெளியீட்டிற்கு காத்திருக்கும் வேளையில், அவர் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு உடன் இணையும் அவரது 22வது படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரமாண்டமாக உருவாக உள்ளது.

இது வெங்கட் பிரபுவின் 11 வது படம், தெலுங்கில் அவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Venkat Prabhu

Venkat Prabhu and Naga Chaitanya joins for a new film

முதன்முறையாக விக்ரம் – விஜய்சேதுபதி படங்களை இயக்கும் ரஜினி – விஜய் பட டைரக்டர்

முதன்முறையாக விக்ரம் – விஜய்சேதுபதி படங்களை இயக்கும் ரஜினி – விஜய் பட டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் ‘தர்பார்’ படத்தை தொடர்ந்து விஜய் படத்தை இயக்க இருந்தார் ஏஆர். முருகதாஸ்.

ஆனால் சில பிரச்சினைகளால் முருகதாஸ் விலகவே விஜய் படத்தை நெல்சன் இயக்கிவிட்டார்.

அதன் பின்னர் தெலுங்கு ஹீரோக்களை இயக்குவார் முருகதாஸ் என கூறப்பட்டது.

இதன்பின்னர் முருகதாஸ் படம் குறித்த தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை.

இந்த நிலையில் முதன்முறையாக விக்ரம் நடிக்கவுள்ள படத்தை முருகதாஸ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன.

அதன்பின்னர் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தையும் முருகதாஸ் இயக்குவார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

Popular tamil film director’s next film with Vikram and Vijay Sethupathi

தன் மனைவி பெயருடன் குஸ்தி போடும் விஷ்ணு விஷால்.; ரவிதேஜாவுடன் கூட்டணி

தன் மனைவி பெயருடன் குஸ்தி போடும் விஷ்ணு விஷால்.; ரவிதேஜாவுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்த ‘எப்ஃஐஆர்’ படம் அண்மையில் ரிலீசாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதனையடுத்து ‘மோகன்தாஸ்’ படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

இந்தப் படங்களை தொடர்ந்து செல்லா அய்யாவு என்பவர் இயக்க ‛கட்டா குஸ்தி’ என்ற படத்தில் நடிக்கிறார் விஷ்ணு.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தை விஷ்ணு விஷாலுடன் இணைந்து தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும் தயாரிக்கிறார்.

தன் இசையால் ரசிகர்களை கவரும் இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

சண்டைப் பயிற்சி : அன்பறிவ்
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம் நாதன்
படத்தொகுப்பு : பிரசன்னா
கலை : உமேஷ் குமார்

இந்தப்படம் மல்யுத்தம் தொடர்பான கதையில் உருவாகிறது.

இரு மொழிகளில் தயாராவதால் சிறப்பு தோற்றத்தில் ரவி தேஜா நடிப்பார் என நம்பலாம்.

இதற்கு முன்பே வெண்ணிலா கபடிக்குழு (கபடி), ஜீவா (கிரிக்கெட்) ஆகிய படங்களில் விளையாட்டு வீரராக நடித்திருந்தார் விஷ்ணு விஷால்.

அவை வெற்றி படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் ‛கட்டா குஸ்தி’ படமும் இணையும் என எதிர்ப்பார்க்கலாம்.

எல்லாம் சரி.. இதுல விஷ்ணு விஷால் மனைவி பெயர் எப்படி ? என்பதுதானே உங்கள் கேள்வி.??

விஷ்ணு விஷாலின் மனைவி பெயர் ஜூவாலா கட்டா. இவர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

Vishnu Vishal and Ravi Teja joins for a new film

சமந்தாவின் பான் இந்தியா படம்..; சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸாகிறது

சமந்தாவின் பான் இந்தியா படம்..; சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்ஆர்ஆர், புஷ்பா, ராதே ஷ்யாம் உள்ளிட்ட பல தெலுங்கு படங்கள் தற்போது பான் இந்தியா திரைப்படங்களாக ரிலீசாகின.

இந்த படங்களில் ஹீரோக்களை மையப்படுத்தியே பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்தனர்.

தற்போது சமந்தா நடித்துள்ள ‘யசோதா’ படத்தை 5 மொழிகளில் ஆகஸ்ட் 12 வெளியிட உள்ளனர்.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்ணனி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, தன் தனிச்சிறப்பு மிக்க நடிப்பை வெளிப்படுத்தி “ஃபேமிலிமேன் 2” தொடர் மூலம் இந்திய அளவில் சிறந்த நடிகையாக, நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ளார்.

நடிகை சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார்.

ஹரி-ஹரீஷ் கூட்டணி இப்படத்தில் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இப்படம் வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12 உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.

இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் கூறியதாவது..,

நடிகை சமந்தா “யசோதா” படத்தில் நடிப்பில் மட்டுமின்றி சண்டைக்காட்சிகளிலும் அசத்தியுள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படத்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிடுகிறோம்.

மே மாத இறுதியில் படப்பிடிப்பு முடிவடையும். இந்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படம் இந்திய அளவிலான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு இழுக்கக்கூடிய கதைக்களத்தை கொண்டுள்ளது.

சமீபத்தில் ஒரு பிரமாண்ட செட்டில் ஒரு பெரிய ஷெட்யூலை முடித்துவிட்டு, இன்று கொடைக்கானலில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு செல்கிறோம்”

இப்படத்தில் சமந்தா உடன், வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இசை : மணிசர்மா,
வசனம்: புலகம் சின்னராயனா, Dr. செல்லா பாக்யலக்‌ஷ்மி
பாடல்கள்: ராமஜோகையா சாஸ்திரி Sastry
கிரியேட்டிவ் டைரக்டர்: ஹெமம்பர் ஜஸ்தி
ஒளிப்பதிவு: M. சசிக்குமார்
கலை: அசோக்
சண்டைப்பயிற்சி: வெங்கட்
எடிட்டிங்: மார்தந்த் K. வெங்கடேஷ்
லைன் புரடியூசர் : வித்யா சிவலெங்கா
இணை-தயாரிப்பு : சிண்டா கோபாலகிருஷ்ணா ரெட்டி
இயக்கம் : ஹரி – ஹரீஷ்
தயாரிப்பு : சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்.
பேனர் : Sridevi Movies

Samantha’s new pan indian film will release for independance day

More Articles
Follows