தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விண்னைத் தாண்டும் எதிர்பார்ப்பில் உள்ளது ரஜினியின் கபாலி படம்.
அடுத்த வாரம் ஜூலை 22ஆம் தேதி பிரமாண்டமாக வரவுள்ளது.
முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதுபோல் திருட்டு விசிடி எடுப்பவர்களும் படத்தை திருடி முதல் நாளே வெளியிட காத்திருக்கின்றனர்.
எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தாணு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை தொடர்ந்து இது தொடர்பான 200க்கும் மேற்பட்ட இணைய தளங்களை உடனடியாக முடக்க வேண்டும் என கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.