தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவுக்கு வரும் நடிகைகளுக்கு எல்லாருக்கும் அஜித்துடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடித்து விட ஆசை இருக்கும்.
ஒரு சிலருக்கோ, ஜோடி இல்லையென்றாலும் ஏதாவது ஒரு கேரக்டரில் அவருடன் நடித்தாலே போதும் என்பார்கள்.
இதை அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு பேட்டியிலும் தவறாமல் பேசி விடுவார்கள். (இல்லேனாலும் நம்ம ஆளுங்க டாப் ஸ்டார்ஸ் பத்தி கேள்வி கேட்டு சொல்ல வைச்சிடுவாங்க)
இந்நிலையில் பிரபல கன்னட நடிகையான ஹர்ஷிகா பூனச்சா (Harshika Poonacha) தன் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடியுள்ளார்.
அப்போது அஜித் பற்றி ஒரு ரசிகர் கேள்வி கேட்க…
வாழ்க்கையில் ஒரு முறையாவது அஜித்துடன் என் பிறந்தநாளை கொண்டாட விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
ஏனென்றால், இவருக்கும் அஜித் பிறந்த நாளான மே 1ஆம் தேதிதான் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. (அட. நியாயமான ஆசைதானே…)
இவர் கன்னடத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் விரைவில் ஜெய்யுடன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.