அஜித் ரசிகர்களின் புத்தாண்டு ஆசையை நிறைவேற்றுவாரா சிவா?

அஜித் ரசிகர்களின் புத்தாண்டு ஆசையை நிறைவேற்றுவாரா சிவா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith fansநாளை 2017ஆம் ஆண்டின் பிறப்பை முன்னிட்டு, விஜய், தனுஷ், சிம்பு ஆகிய நடிகர்கள் தங்களின் படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவைகளை புத்தாண்டு விருந்தை அளித்து வருகின்றனர்.

ஆனால் வேதாளம் படத்திற்கு பிறகு அஜித்தின் தல 57 படம் தொடர்பாக எந்த ஒரு பர்ஸ்ட் லுக்கோ, டீசரோ எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்று தல தல தான் என்று ரசிகர் மன்றத்தினர் இயக்குநர் சிவாவுக்கு ஒரு கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

அதில்…

“வேதாளம் படத்திற்கு பிறகு எங்களை வெகு மாதங்களாக காத்திருக்க வைக்கிறீர்கள்.

ரசிகர்கள் அனைவரும் இந்த நியூ இயர் தல படத்தின் முதல் பார்வையோடு கொண்டாட விரும்புகிறோம்.

தயவு செய்து எங்களின் கோரிக்கையை ஏற்று தல 57 firstlook அல்லது படத்தின் தலைப்பையாவது வெளியிடுங்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

அஜித் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா சிவா? என்பதை இன்று வரை காத்திருந்து பார்ப்போம்.

ரசிகர்களுக்கு நியூ இயர் ட்ரீட் தரும் தனுஷ்-கார்த்தி-ஜிவி பிரகாஷ்

ரசிகர்களுக்கு நியூ இயர் ட்ரீட் தரும் தனுஷ்-கார்த்தி-ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Karthi GVPrakashநாளை 2017 புத்தாண்டு பிறக்கிறது.

எனவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்க, உங்கள் அபிமான நடிகர்கள் தயாராகி வருகிறார்கள்.

எனை நோக்கி பாயும் தோட்ட படத்தின் ஒரு பாடல் டீசரை தனுஷ் இன்று டிச. 31ஆம் மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இவரை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள காற்று வெளியிடை படத்தின் டீசரும் வெளியாகிறது.

இது நாளை வெளியாகும் எனத்தெரிகிறது.

இவர்களைத் தொடர்ந்து, ஜி.வி. பிரகாஷின் அடங்காதே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டைரக்டர் அனுராக் காஷ்யாப் அவர்கள் புத்தாண்டு பிறக்கும் சமயத்தில் வெளியிடுகிறார்.

‘இன்னைக்கு நைட் மட்டும் நீ…’ மீண்டும் சிம்பு ‘பீப் சாங்’

‘இன்னைக்கு நைட் மட்டும் நீ…’ மீண்டும் சிம்பு ‘பீப் சாங்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbuவம்வில் மாட்டிக் கொள்வது ஒரு ரகம். ஆனால் வம்பை விலைக்கு வாங்குவது ரெண்டாவது ரகம்.

இதில் சிம்பு ரெண்டாவது போலவே.

கடந்த ஆண்டு டிசம்பரில் (2015) டிசம்பரில் பீப் சாங் போட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

தற்போது அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, இந்த டிரெண்ட் சாங் தற்போது வெளியாகியுள்ளது.

இன்னைக்கு நைட் மட்டும் நீ காதல் பண்ணினா போதும் என்று இப்பாடல் தொடங்குகிறது.

இப்பாடலுக்கு முன்பே சில வரிகள் வருகின்றன. அதில் பாட தோனுது. ஆனா மியூசிக் வரல, டியூன் வரல.. ஒரு ….. வரல… என்ற வரிகளும் வருகிறது.

இப்பாடலும் சர்ச்சைக்குள்ளாகும் எனத் தெரிகிறது.

மீண்டும் விஜய்-ஜோதிகாவுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா

மீண்டும் விஜய்-ஜோதிகாவுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay jothika sj suryaபைரவா படத்தை தொடர்ந்து மீண்டும் தெறி இயக்குனர் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஜோதிகா, சமந்தா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருக்கிறாராம்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி படத்தில் விஜய், ஜோதிகா நடித்திருந்தனர்.

தற்போது இவர்கள் மூவரும் மீண்டும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் மட்டும் 150…. விஜய்-சிவகார்த்திகேயன் 100 தான்

ரஜினிகாந்த் மட்டும் 150…. விஜய்-சிவகார்த்திகேயன் 100 தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth vijay sivakarthikeyanஒரு படம் இரண்டு வாரங்கள் ஓடுவதே குதிரை கொம்பாக இருக்கும் காலம் இது.

200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்து, ஒரு மாதம் ஓட்டி, போஸ்டர் அடிப்பதை பெருமையாக நினைக்கின்றனர்.

இந்நிலையில், இவ்வருடத்தின் சூப்பர் ஹிட்டான கபாலி படம், சென்னையில் மூன்று தியேட்டர்களில் நூறு நாட்களையும், மதுரை மணி இம்பாலா தியேட்டரில் 150 நாட்களைத் தாண்டி ஓடியுள்ளது.

இதனையடுத்து, விஜய் நடித்த தெறி மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் ஆகிய படங்கள் நூறு நாட்கள் ஓடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் பார்முலாவில் விக்ரம்-ஜெயம் ரவி

அஜித் பார்முலாவில் விக்ரம்-ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Vikram Jayam Raviவெள்ளைத் தலைக்கு கறுப்பு மை அல்லது தலையில் விக் என சில ஹீரோக்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தனது ஒரிஜினல் நரைத்த தலைமுடியுடன் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித்.

தற்போது இதனைப் பின்பற்றி வனமகன் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி.

இவர்களைத் தொடர்ந்து, கௌதம் மேனன் இயக்கவுள்ள படத்தில் சீயான் விக்ரமும் இதே லுக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows