தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படத்தின் இமாலய வெற்றிக்கு பாடல்களும் ஒரு காரணமாக அமைந்தன.
அந்த படத்திற்கு இசையமைத்தவர் கோவிந்த் வஸந்தா.
இவர் தற்போது விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே துல்கர், பஹத் பாசில் ஆகியோரின் மலையாள படங்களுக்கு இசையமைத்து அசத்தியவர் இவர்.
இந்நிலையில் மணிரத்னம் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளதாம்.
இளையராஜாவுக்கு பிறகு மணிரத்னம் படங்களுக்கு ரஹ்மான் தானே இசை, பின்னர் கோவிந்த வசந்தா? எப்படி என்றுதானே யோசிக்கிறீர்கள்.?
இது மணிரத்னம் இயக்கும் படமல்ல. அவர் கதை எழுதி தயாரிக்கும் படத்திற்குதான் கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தை தனசேகரன் என்பவர் இயக்குகிறார்.