Collection Update : பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ‘பைட் கிளப்’

Collection Update : பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ‘பைட் கிளப்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ’உறியடி’ விஜயகுமார் நடிப்பில் உருவான திரைப்படம் ’ஃபைட்கிளப்’.

அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ‘உறியடி’ விஜயகுமார், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துதுள்ளனர.

இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் டிரைலர் வந்த போது எதிர்பார்ப்பு கிளம்பியது. மேலும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் இணைந்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூடியது.

எனவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 3 நாட்களில் ரூ. 5.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலும் வடசென்னை பானியிலான தமிழ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருந்து வருகிறது.அது ‘பைட் கிளப்’ படத்திலும் தொடர்ந்து வருவது இங்கே கவனிக்கத்தக்கது.

Fight club movie box office collection report

கான்சார் உலகம்.. பிரபாஸ் – ப்ரித்விராஜ் கசப்பான நட்பு..; வெறித்தனமான ‘சலார்’ டிரைலர்

கான்சார் உலகம்.. பிரபாஸ் – ப்ரித்விராஜ் கசப்பான நட்பு..; வெறித்தனமான ‘சலார்’ டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கே ஜி எஃப் சீரிஸ்’ போன்ற பிரம்மாண்டமான பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கிய ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘சலார்’ படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை தனித்துவமான பாணியில் வெளியிட்டு, வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கி உள்ளது.

இந்த முன்னோட்டம்- அடக்க இயலாத பிரபாஸுடன் தொடங்குகிறது. இத்தகைய காட்சிகளில் வழங்கப்படும் மயக்கும் அழகியல் காட்சிகள் மற்றும் துடிப்பான சண்டை காட்சிகள் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.‌

இந்தியா முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘சலார்’- ஒரு சினிமா கொண்டாட்டமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.

மேலும் சமீபத்திய ட்ரெய்லரில் கான்சார் எனப்படும் உலகத்தையும், பிருத்விராஜ் மற்றும் பிரபாஸ் என்ற இரு நண்பர்களின் புதிரான கதையையும், கவர்ந்திழுக்கும் காட்சிகளுடன் வழங்குகிறது. முரட்டுத்தனமான கதாபாத்திரத்தை சித்தரிக்கும் பிரபாஸ்.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.‌

சலார்

ட்ரெய்லர் ஒரு அழுத்தமான விவரிப்புடன் தொடங்குகிறது. கான்சார் நகரை சுற்றியுள்ள கதை மற்றும் பிருத்விராஜ்- பிரபாஸ் இடையேயான நட்புடன் பார்வையாளர்களை மூழ்கடிக்கிறது.‌ காட்சிகள் தொடர்ந்து விரிவடையும்போது, பிரபாஸ் இதுவரை கண்டிராத அவதாரத்தில் தோன்றுகிறார். அவரது தீவிரமான மற்றும் கட்டளை தொனியுடன் கூடிய தோற்றத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்துகிறார்.

ட்ரெய்லரின் கிளைமாக்ஸ் காட்சி பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் வரவழைத்து, பல அதிர்ச்சிகரமான கேள்விகளை முன் வைக்கிறது.

பிருத்விராஜ் மற்றும் பிரபாஸ் இடையே இருந்த பிரிக்க முடியாத நட்பு… எப்படி கசப்பான பகையாக மாறியது? இந்த முத்தாய்ப்பான காட்சி.. ‘சலார்’ நகரம் முழுவதும் தொடர்ந்து பேசப்படுவதை உறுதி செய்கிறது. மேலும் அப்படத்தின் உடனடி வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.

சலாரில் உள்ள கதாபாத்திரங்கள் வசீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டிருக்கின்றன. இது தேசம் முழுவதிலும் உள்ள ரசிகர்களிடம் நிச்சயம் எதிரொலிக்கும் வகையிலான பெரியதொரு தோற்றத்தை கொண்டுள்ளது. கதையுடன் திறமையாக பின்னி பிணைந்திருக்கும் இசை… ஒட்டுமொத்த சினிமா அனுபவத்தையும் உயர்த்தி, ‘சலார்’ என்ற பிரம்மாண்டத்திற்கு சுவை கூட்டுகிறது.

Salaar – Tamil Trailer

Salaar Trailer makes vibes on social medias

டாப் லெவலில் ‘டங்கி’ ப்ரோமோஷன்.; துபாய் குளோபல் வில்லேஜ்க்கு விசிட்டடித்த ஷாருக்

டாப் லெவலில் ‘டங்கி’ ப்ரோமோஷன்.; துபாய் குளோபல் வில்லேஜ்க்கு விசிட்டடித்த ஷாருக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துபாய் நாள் 1 – துபாயில் உள்ள குளோபல் வில்லேஜில் ‘டங்கி’ படத்திற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வு தொடங்கியது.

ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘டங்கி’, இந்த வாரத்தில் வெளியாகவிருப்பதால், சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அதனை விளம்பரப்படுத்தும் பயணத்தை முழு வீச்சில் தொடங்கியுள்ளார்.

பார்வையாளர்களின் உற்சாகம் ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில்.. SRK தன்னுடைய ரசிகர்கள் மீதான அன்பை உலகம் முழுவதும் பரப்புவதன் மூலம் அதனை மேலும் உயர்த்தி இருக்கிறார்.

ரசிகர்களை சந்திப்பதற்கான எந்த வாய்ப்பையும் அவர் தவற விடவில்லை. துபாயிலிருந்து ‘டங்கி’ படத்திற்கான விளம்பரப்படுத்தும் பயணத்தை தொடங்கி, குளோபல் வில்லேஜில் அவர் நுழையும் போது பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

‘டங்கி டே 1’ என குறிப்பிடப்படும் இந்த விளம்பரப்படுத்தப்பட்ட பயணத்தில் SRKவுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஷாருக்கான் அண்மையில் துபாயில் உள்ள வி ஓ எக்ஸ் (VOX) சினிமாஸ்க்கு வருகை தந்தார். அவரது பிரவேசம் பார்வையாளர்களுக்கு உற்சாகம் அளித்தது. வி ஓ எக்ஸ் சினிமாஸ் நிகழ்ச்சிக்காக டெய்ரா சிட்டி சென்டருக்கு அவர் சென்றபோது பிரம்மாண்டமான வரவேற்பு வழங்கப்பட்டது. எப்பொழுதும் போல் SRK தனது வசீகரமான முகத்துடன்.. அன்பை பரப்பிய போது.. அங்கு கூடியிருந்த மக்களின் கூச்சல்களும், ஆரவாரமும் அந்த ஆடிட்டோரியத்தை அதிர வைத்தது.

இதைத்தொடர்ந்து ஷாருக்கான் துபாய் குளோபல் வில்லேஜில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த ஜெயன்ட் வீலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குளோபல் வில்லேஜில் ஷாருக்கானுக்கான மேடையும் தயாராக இருந்தது. இது பார்வையாளர்களுக்கு ‘டங்கி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் ‘டங்கி’யில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள். இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Dunki promotion in full swing Shahrukh Dubai visit

ஆக்ஷன் பாதை போட்ட ‘சண்டக்கோழி’.; அர்ஜுன் முதல் ரசிகர்கள் வரை விஷால் நன்றி

ஆக்ஷன் பாதை போட்ட ‘சண்டக்கோழி’.; அர்ஜுன் முதல் ரசிகர்கள் வரை விஷால் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷால் திரையுலகில் ஒரு நடிகராக நுழைந்து 19 வருடங்கள் கடந்து விட்டன. எந்த ஒரு நடிகரும் சினிமாவில் நுழையும்போது அழகான காதல் கதைகள் மூலம் எளிதாக ஒரு வெற்றியை பெற்று விடலாம். ஓரளவு ரசிகர்களையும் கவனிக்க வைக்கலாம். ஆனால் அந்த வெற்றியை தக்கவைத்து திரையுலகில் நிலைத்து நின்று பயணிக்க வேண்டும் என்றால், ரசிகர்கள் மனதில் தங்கள் உருவத்தை அழுத்தமாக பதிய வைக்க வேண்டும் என்றால், அது நிச்சயமாக ஒரு ஆக்சன் படம் மூலமாக தான் அமையும்.

நடிகர் விஷாலுக்கு கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக இயக்குநர் லிங்குசாமி மூலமாக கிடைத்த அப்படி ஒரு திருப்புமுனை தான் ‘சண்டக்கோழி’ திரைப்படம். அந்த படம் அவருக்கு அழகான ஒரு ஆக்சன் பாதையை போட்டுக் கொடுத்தது.. இன்றுவரை அவர் அதில் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார். இன்றும் தொலைக்காட்சிகளில் ‘சண்டக்கோழி’ ஒளிபரப்பாகும்போது அதை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

‘சண்டக்கோழி வெளியாகி’ இன்று 18 வருடங்கள் ஆன நிலையில் தனது உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் விஷால். இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது..

“18 வருடங்களுக்கு முன்பு 2005 டிசம்பர் 16 அன்று தமிழ் சினிமாவில் ‘சண்டக்கோழி’ என்கிற மேஜிக் மூலமாக வெள்ளித்திரையில் ஒரு ஆக்சன் ஹீரோவாக என்னுடைய திரையுலக பயணத்தை துவக்கி வைத்த இந்த நாளை இப்போதும் நம்ப முடியவில்லை அல்லது என் உணர்வுகளை, எண்ணங்களை வார்த்தைகளில் அடக்க முடியவில்லை. இன்றுவரை அனைவராலும் என்மீது காட்டப்பட்டு வரும் அன்பு மற்றும் ஆதரவு என்கிற ஒரே காரணத்திற்காக அப்போதிருந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் பார்வையாளர்களில் ஒருவனாகவே தொடரும் நான் அப்போது என்னை திரும்பி பார்க்கவே இல்லை.

எனக்கு மேலே உள்ள கடவுளுக்கும் மற்றும் கடவுள்கள் போன்ற என்னுடைய பெற்றோர், என்னை நம்பிய என்னுடைய இயக்குநர் லிங்குசாமி, மேலும் கடைசியாக உலகெங்கிலும் உள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் உருவில் நான் பார்த்த கடவுள்களுக்கும் தலைவணங்கி நன்றி சொல்கிறேன். எப்போதுமே உங்கள் அனைவருக்கும் கடன்பட்டுள்ளதுடன், என்னுடைய தந்தை ஜி.கே ரெட்டி மற்றும் எனது குரு அர்ஜுன் சார் ஆகியோரின் கனவை தொடர்வேன். உங்களுக்கு நன்றி சொல்வது என்பது மட்டுமே போதுமானது அல்ல.. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.” என்று கூறியுள்ளார்.

18 years of Sandakozhi Vishal thanks to Lingusamy and all

குடும்பஸ்தன் செய்யும் சாகசங்கள்.; சினிமாக்காரன் சொல்லும் சீரியஸ் மேட்டர்

குடும்பஸ்தன் செய்யும் சாகசங்கள்.; சினிமாக்காரன் சொல்லும் சீரியஸ் மேட்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பதே எதார்த்த சினிமாவாகும்.

அத்தகைய எதார்த்த சினிமாவில், தன் ஒவ்வொரு நாளையும் சாகசமாக வாழும் நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையைக் சித்தரிக்கும்போது பொழுதுபோக்குக்கும், உணர்வுகளுக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை.

வாழ்வின் சாகசங்களைச் சாதாரணமாக செய்பவர்களே குடும்பஸ்தர்கள்

சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக S.வினோத்குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் (ஜெய் பீம், குட் நைட் ), சான்வே மேகனா, குரு சோமசுந்தரம் (ஜோக்கர் , ஜிகர்தண்டா) இயக்குனர் சுந்தர்ராஜன், தனம் (சிவப்பு மஞ்சள் பச்சை ) பிரசன்னா பாலச்சந்திரன் (மண்டேலா, சேத்துமான்) ஜென்சன் (அயலி ) இணைந்து நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மணிகண்டன் சமீபத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் எதார்த்தமாக நடித்து மக்களை கவர்ந்த நிலையில், இத்திரைப்படத்திலும் தன்னுடைய எதார்த்த நடிப்பால் அசத்துவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் தன் மானத்திற்காகவும், தன் குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களுமே இத்திரைப்படத்தின் மையக்கருவாகும்.
இத்திரைப்படம் முழுவதும் கோயம்புத்தூரில் படமாக்கப்பட இருக்கிறது.

மணிகண்டன்

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இக்கதை நம் குடும்பங்களில் நடக்கக்கூடிய நிகழ்வுகளின் அடிப்படையில் நகைச்சுவையும் சுவாரசியங்களும் நிறைந்ததாக அமைந்திருப்பதால் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

*தொழில்நுட்பக் கலைஞர்கள்*

இயக்கம்: ராஜேஷ்வர் காளிசாமி
கதை: பிரசன்னா பாலசந்தரன் & ராஜேஷ்வர் காளிசாமி

திரைக்கதை & வசனம்: பிரசன்னா பாலசந்தரன்
தயாரிப்பு: செ. வினோத்குமார்

ஒளிப்பதிவு: சுஜித் சுப்ரமணியம்

இசை: வைசாக்

படத்தொகுப்பு: கண்ணன்

கலை வடிவமைப்பு: சுரேஷ் குமார்

ஒலிப்பதிவு: விக்ரமன்

சண்டைப்பயிற்சி: அபிஷேக் ஸ்ரீனிவாஸ்

உடை வடிவமைப்பு: மீரா

விளம்பர வடிவமைப்பு: இளங்கவின்

மக்கள் தொடர்பாளர்: சுரேஷ் சந்திரா

நிறுவனத்தின் பெயர்: சினிமாக்காரன்

மணிகண்டன்

Good night Manikandan in Cinemakkaran banner

பிரபுதேவா படத்திற்கு விஜய் பாடலை டைட்டிலாக்கிய ரசிகர்கள்.; சர்ப்ரைஸ் கொடுத்த சக்தி சிதம்பரம்

பிரபுதேவா படத்திற்கு விஜய் பாடலை டைட்டிலாக்கிய ரசிகர்கள்.; சர்ப்ரைஸ் கொடுத்த சக்தி சிதம்பரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தயாரித்து வருகிறது.

இதற்கு முன்பு ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற தமிழ்ப் படத்தையும் மராத்தி படம் ஒன்றையும் தயாரித்துள்ளது. இப்போது முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமான ‘ஜாலியோ ஜிம்கானா’ என்ற படத்தை சிறப்பாக தயாரித்து தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளது.

‘சார்லி சாப்ளின்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஷக்தி சிதம்பரம்- பிரபுதேவா காம்போ மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு ‘ஜாலியோ ஜிம்கானா’ என்ற தலைப்பு ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக ரசிகர்களால் ஒரு படத்தின் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

( நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தில் ‘ஜாலியோ ஜிம்கானா) என்ற பாடல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது)

இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, கொடைக்கானல் மற்றும் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள பல இடங்களில் நடந்துள்ளது. இந்தியத் திரையுலகில் இதுவரை கண்டிராத கதைக்களத்தை இந்தப் படம் கொண்டுள்ளது.

படம் குறித்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது…

“மக்களாக தேர்ந்தெடுத்த படத்தின் டைட்டில் மக்களிடம் எப்படி ரீச் ஆனதோ அதுபோலவே படமும் ரீச் ஆகும். ஏன் என்றால் படம் கதையாகவும் விஷுவலாகவும் அவ்வளவு ரிச் ஆக வந்துள்ளது.

பட்ஜெட் ஆகவும் இது பெரியபடம். தயாரிப்பாளர் ராஜேந்திர ராஜன், பாடல்கள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கான பிரமாண்டமான செட்களை குறை வைக்காமல் செய்து தந்தார். படத்தின் திரைக்கதையைப் போலவே, பாடல்களும் இசையும் இந்தப் படத்தில் முக்கியமான ஒரு அம்சம். இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி அற்புதமான இசையைக் கொடுத்துள்ளார். கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவும், ஜனார்த்தனனின் கலை இயக்கமும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

பிரபுதேவா, மடோனா, யோகிபாபு, அபிராமி, யாசிகா ஆனந்த், புஜிதா பொன்னடா கிங்ஸ்ட்லி, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், ஜான் விஜய், சாய்தீனா, மதுசூதனராவ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட படத்தில் நடித்துள்ள மற்ற எல்லா நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர்.

மக்களை கொண்டாட வைக்கும் அளவில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீடு குறித்தான அறிவிப்பு விரைவில் வரும்” என்றார்.

*நடிகர்கள்:* பிரபுதேவா, மடோனா செபாஸ்டின்,யோகிபாபு, அபிராமி, யாஷிகா ஆனந்த், புஜிதா பொன்னடா, ரெடின் கிங்ஸ்ட்லி, ஒய்.ஜி. மகேந்திரன், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ரோபோ சங்கர், சுரேஷ் சக்ரவர்த்தி, சாய் தீனா, எம்.எஸ். பாஸ்கர், ‘டாக்டர்’ சிவா, ‘கல்லூரி’ வினோத், கோதண்டம், ‘ஆதித்யா கதிர்’, ஆதவன், ‘தெலுங்கு’ ரகுபாபு, மரியா, அபி பார்கவன் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

*தொழில்நுட்பக் குழு:..

இயக்குநர்: ஷக்தி சிதம்பரம்,
தயாரிப்பாளர்: எம். ராஜேந்திர ராஜன்,
தயாரிப்பு நிறுவனம்: டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிட்டெட்.
கலை இயக்கம்: ஜனார்த்தனன்,
படத்தொகுப்பு: ‘அசுரன்’, ’விடுதலை’ புகழ் ராமர்,
ஒளிப்பதிவு: கணேஷ் சந்திரா,
நடனம்: பூபதி ராஜா,
ஸ்டண்ட் மாஸ்டர்கள்: மகேஷ் மாத்திவ் மற்றும் பிரதீப்,
பாடல் வரிகள்: மு. ஜெகன் கவிராஜ்

Ptabhudeva and Madonna starrer JollyO Gimkhana

More Articles
Follows