தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2002ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம்தேதி காவிரி நதிநீர் வழங்க கோரி கர்நாடக அரசைக் கண்டித்து, ரஜினி உண்ணாவிரதம் இருந்தார்.
அதன்பின்னர் கவர்னரை சந்தித்து, மனு அளித்த ரஜினிகாந்த், நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு தன்னுடைய பங்காக ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என கூறியிருந்தார்.
ஆனால் அதன்பின்னர் ரஜினி கொடுக்கவில்லை.
இந்நிலையில் 14 ஆண்டுகளை கடந்த பின், தற்போது இதுகுறித்த கேள்வியை எழுப்பியுள்ளனர் விவசாயிகள் சங்கம்.
இதுகுறித்து சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது…
“நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு ஒரு கோடி நிதி தருவதாக கூறிய ரஜினிகாந்த் இதுவரை மாநில அரசிடமோ, மத்திய அரசிடமோ கொடுக்கவில்லை.
தற்போது மத்தியில் ஆளும் மோடி அரசும், தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா அரசும் நதிநீர் இணைப்பு விஷயத்தில், முனைப்பாக செயல்பட்டு வருகிறது.
எனவே, ரஜினி அறிவித்தபடி, நிதியை கொடுக்க கோரி, அவரது வீட்டில் மனு கொடுத்துள்ளோம்.
அவர் ஒரு மாதத்துக்குள் கொடுக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.” இவ்வாறு அவர் கூறினார்.