கொரானா பீதியிலும் இணையத்தை அதிர வைத்த ராஜமௌலியின் RRR

Directors Rajamoulis RRR motion poster goes viralபாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களை தொடர்ந்து ராஜமௌலி இயக்கியுள்ள படம் ஆர்ஆர்ஆர்.

இதில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவகன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர், தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு இன்று(மார்ச் 25) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மோஷன் போஸ்டரை ஐந்து வெவ்வேறு யு-டியூப் தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மொழியிலும் ஆர்ஆர்ஆர் என்பதற்காக விரிவாக்கத்தைக் கொடுத்துள்ளனர்.

தமிழில் ஆர்ஆர்ஆர் என்பதற்கு ரத்தம், ரணம், ரௌத்திரம் எனப் பெயரிட்டுள்ளனர்.

படத்தில் 2 ஹீரோக்கள்.. ஒருவருக்கு நீரையும் மற்றொருவருக்கு நெருப்பையும் பின்பலமாக வைத்துள்ளனர்.

அதனை வைத்தே படத்தின் போஸ்டர் முதல் மோசன் போஸ்டர் வரை காட்சிகள் உள்ளன.

ஆக நீருக்கும் நெருப்புக்கும் உள்ள பகையா? அல்லது நட்பா என்பதை அடுத்த வருடம் காத்திருந்து தெரிந்துக் கொள்வோம்.

தற்போது கொரோனா பீதியில் இந்திய மக்கள் இருந்தாலும் அவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் இந்த மோசன் போஸ்டர் இணையத்தை அதிர வைத்து வருகிறது.

Directors Rajamoulis RRR motion poster goes viral

Overall Rating : Not available

Related News

நடிகர்கள் ஜீனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும்…
...Read More

Latest Post