தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
’மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி தொடர்பான படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள சில மாதங்களுக்கு முன் காட்டுக்குள் சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தற்போது நேற்று மார்ச் 23ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பப்பானது.
இதில் ரஜினி செய்த சாகசங்களை அவரது ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பினரும் கண்டுகளித்தனர்.
ரஜினியின் வேறொரு பரிமாணத்தை பார்க்க முடிந்ததாக ரசிகர்கள் வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டமைக்கு அவரது திரையுலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
இந்த வாழ்த்து வீடியோவும் அதில் இணைக்கப்பட்டு இருந்தன.
நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
’எந்த ஆபத்து வந்தாலும் உங்களை ஒன்றும் செய்யாது. ஏனெனில் ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான், அடித்து தூள் கிளப்புங்க’ என நடிகர் மாதவன் வாழ்த்தினார்.
ரஜினியுடன் ’2.0’ படத்தில் நடித்த பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய்குமாரும் அச்சமின்றி உங்கள் பயணத்தை தொடங்குங்கள் உங்கள் வழி தனி வழி’ என தன் வாழ்த்தை தெரிவித்திருந்தார்.
3 Stars surprises Rajini in Into the Wild show at Discovery Channel