பச்சோந்தி மூலம் இயக்குனராக அவதாரமெடுத்த நடிகர் சம்பத்

பச்சோந்தி மூலம் இயக்குனராக அவதாரமெடுத்த நடிகர் சம்பத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sampathசமுத்திரக்கனி இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் 2004 இல் வெளிவந்த நெறஞ்ச மனசு படத்தின் மூலம் நடிகர் சம்பத் தனது சினிமா பயணத்தை தொடங்கினர்.

அதை தொடர்ந்து பருத்திவீரன் ,தாமிரபரணி, சென்னை 600028 ,சரோஜா,ஜில்லா போன்ற 80 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். .அதன் பிறகு சில வருடங்கள் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை ஏனென்றால் அந்த சமயம் அவர் பிற மொழி படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தார்.

.அதன் பிறகு இப்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் காலா திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து சக்க போடு போடு ராஜா மற்றும் வெங்கட் பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள R K நகர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

பல்வேறு படங்கள் மற்றும் வித்யாசமான வேடங்களில் நடித்துவந்த இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.நடிகர் சம்பத் தற்போது பச்சோந்தி என்ற குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

இந்த குறும்படம் சமூகத்தில் நடக்கும் ஆண் ஆதிக்கம் பற்றி கூறியுள்ளது.இந்த குறும்படத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் பெண்மை பேசும் ஆண் ஆதிக்கம் என்றே கூறலாம்.

பெண்களை காட்சிப்பொருளாகவும் காமத்துக்கு கைக்குழந்தையாகவும் நினைக்கும் ஆண்களை பற்றி மிக சுருக்கமாக தெரிவித்துள்ளார் இக்குறும்படத்தின் இயக்குனர் சம்பத்.

 

அழகிய ஓவியத்தால் சிவகார்த்திகேயனை அழவைத்த ரசிகர்

அழகிய ஓவியத்தால் சிவகார்த்திகேயனை அழவைத்த ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan fan presented emotional art to his actorசின்னத்திரையில் அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையை கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவரது பெரும்பாலான மேடைகளில் தன் தந்தையை பற்றி சொல்வார்.

“நான் சம்பாதித்து என் தந்தைக்கு எதுவுமே வாங்கிக் கொடுத்ததில்லை. குறைந்தபட்சம் ஒரு புகைப்படம் கூட அவருடன் நான் சரியாக எடுத்ததில்லை.

இன்று அவர் உயிருடன் இல்லை” என்று விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் கண்ணீருடன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இவரின் ரசிகர் ஒருவர் சிவகார்த்திகேயன் மைக்கில் பேசிய புகைப்படத்தை எடுத்து சிவகார்த்திகேயனின் தோளில் அவரது தந்தை கை போட்டபடி நிற்பது போல் ஓவியமாக வரைந்து அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதனை ரீட்வீட் செய்து ட்விட்டரில் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளதாவது…

“எப்படி உங்களுக்கு நன்றி சொல்வதென்று தெரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் அப்பாவோடு ஒரு நல்ல புகைப்படம்கூட எடுக்கவில்லை. இந்த ஓவியம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே…” என அந்த ரசிகருக்கு உருக்கமாக நன்றியை தெரிவித்திருக்கிறார்.

2014 – Best entertainer award. The day u cried for this moment. couldn’t made this true on that day. But Tried to make ur tears into smile and Ur dream come true by this artwith lots of love for @Siva_Kartikeyan

Sivakarthikeyan‏Verified account @Siva_Kartikeyan
Sivakarthikeyan Retweeted Kirukals kiki
I don know how to thank u feeling very happy and emotional.. its been sad for me that i missed to take a good pic with appa..this one wil be very spl.. thanks again ma தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் தந்தை அன்பின் முன்னே…

Sivakarthikeyan fan presented emotional art to his actor

sivakarthikeyan dad art

மிக மிக அவசரம் படத்தை வெற்றி மாறனுடன் இணைந்து வெளியிடும் சத்யமூர்த்தி

மிக மிக அவசரம் படத்தை வெற்றி மாறனுடன் இணைந்து வெளியிடும் சத்யமூர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vetrimaaran and Clap Board Sathyamoorthy bought the rights of Miga Miga Avasaram‘அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குநராக அவதாரமெடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’.

கதாநாயகியை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா பெண் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார்.

கதையை புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்பைக் காணோம் ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் எழுதியுள்ளார்.

முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கதா நாயகனாக நடித்துள்ள அரீஷ் குமார் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார்.

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளார் வெற்றிமாறன்.

காக்கா முட்டை, விசாரணை, லென்ஸ் என நீளும் அந்த பட்டியலில் இப்போது மிகமிக அவசரம் படத்தையும் சேர்த்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

இந்நிலையில் இவருடன் கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்’ நிறுவனம் சார்பில் வி.சத்யமூர்த்தி அவர்களும் இணைந்து இப்படத்தை வெளியிட உள்ளார்.

தப்புத்தண்டா படத்தில் நாயகனாக நடித்த வி.சத்யமூர்த்தி அவர்கள் நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் ஆகிய படங்களை அண்மையில் வெளியிட்டார்.

மேலும் கோலி சோடா 2 பட வெளியீட்டு உரிமையையும் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vetrimaaran and Clap Board Sathyamoorthy bought the rights of Miga Miga Avasaram

மப்புல கார் ஓட்டி போலீஸிடம் சிக்கிய சினிமா புரொடியூசர்

மப்புல கார் ஓட்டி போலீஸிடம் சிக்கிய சினிமா புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Police arrested Producer PL Thenappan in Drunk and drive caseகுடி பழக்கம் தீங்கானது என எத்தனையோ விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இருந்தாலும் குடிப்பவர்களை திருத்தவே முடியாது.

குடித்து விட்டு கலாட்டா செய்வது, வாகனம் ஓட்டுவது என்ற பல்வேறு புகார்களை நாம் தினம் தினம் பார்க்கிறோம்.

நாம் பார்க்கும் சினிமாவில் கூட நடிகர்கள் மது அருந்தும் காட்சிகள் வந்தால், குடி குடியை கெடுக்கும் எனற் வாசகங்களை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் ஒரு படத்தயாரிப்பாளரே குடித்து விட்டு நிஜ போலீஸிடம் சிச்கிய ஒரு செய்தியைத்தான் இப்போது பார்க்கவிருக்கிறோம்.

நேற்று இரவு சென்னை கதீட்ரல் சாலையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை போட்டனர்.

அந்த காரை பிரபல சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான பி.எல்.தேனப்பன் ஓட்டி வந்துள்ளார்.

அப்போது அவரை போலீசார் பரிசோதித்த போது அவர் குடி போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரது காரை பறிமுதல் செய்த போலீசார், பி.எல்.தேனப்பன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், இது தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police arrested Producer PL Thenappan in Drunk and drive case

விக்னேஷ் சிவனுக்கு கார் பரிசளித்த சூர்யா; அஜித்தை பாலோ செய்கிறாரா.?

விக்னேஷ் சிவனுக்கு கார் பரிசளித்த சூர்யா; அஜித்தை பாலோ செய்கிறாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya gifted toyota for his TSK director Vignesh Sivanபாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் தயாரித்து நடித்திருந்தார் சூர்யா.

இப்படம் வெற்றிப் பெறவே தன் இயக்குனருக்கு ஒரு புதிய காரை அன்பளிப்பாக கொடுத்தார் சூர்யா.

இதனையடுத்து ஹரி இயக்கிய சிங்கம் 3 படம் வெளியானது. இப்படம் முதல் இரண்டு பாகங்களை போல பேசப்படவில்லை என்றாலும் அந்த இயக்குனருக்கு காரை பரிசளித்தார் சூர்யா.

இந்நிலையில் இந்தாண்டு 2018 பொங்கலுக்கு வெளியானது தானா சேர்ந்த கூட்டம்.

இப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு புதிய காரை பரிசளித்துள்ளார் சூர்யா.

கிட்டதட்ட 13 வருடங்களுக்கு முன் தன்னை இயக்கி சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த டைரக்டர்களுக்கு கார் பரிசளிப்பதை வாடிக்கையாகி கொண்டிருந்தார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் வழியில் சூர்யாவும் செல்கிறாரோ? என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர்.

Suriya gifted toyota for his TSK director Vignesh Sivan

pandiraj car

ஏஆர்.ரஹ்மானுக்காக விஜய்யுடன் கைகோர்க்கும் விபின் அனேஜா

ஏஆர்.ரஹ்மானுக்காக விஜய்யுடன் கைகோர்க்கும் விபின் அனேஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jazbaa singer Vipin Aneja collaborates with AR Rahman for Vijay 62துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து 3வது முறையாக விஜய்யும் ஏஆர். முருகதாஸ் அவர்களும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இப்டபத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி, உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் பாடகர் விபின் அனேஜா இப்படத்தில் ஒர பாடலை பாடவிருக்கிறாராம்.

இதுகுறித்து விபின் கூறும்போது,..

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவது என் கனவாக இருந்தது. இந்தி பாடல்களை பாடி வந்த என்னிடம், தமிழில் பாட விருப்பமா? என கேட்டார். நான் உடனடியாக ஓகே என்று கூறிவிட்டேன்.

இவர் ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரிகளில் பாடியிருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Jazbaa singer Vipin Aneja collaborates with AR Rahman for Vijay 62

More Articles
Follows