தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் “ராமம் ராகவம்” இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ் இயக்குகிறார்.
ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும், ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி, இருமொழி திரைப்படமாக இயக்குவதோடு சமுத்திரக்கனியோடு இணைந்து நடிக்கவும் செய்கிறார்.
அப்பா மகன் உறவு கதைக்களமாக இந்தபடம் இருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் தற்பொழுது பிசியான நடிகராக வலம்வரும் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படத்தில் நடித்துவருகிறார்.
படப்பிடிப்பு ஐதராபாத், ராஜமந்திரி சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
கதை : சிவ பிரசாத் யானல,
ஒளிப்பதிவு : துர்கா பிரசாத் கொல்லி,
இசை: அருண் சிலுவேறு,
கலை: டெளலூரி நாராயணன்,
Executive producer: தீபி ரெட்டி மஹிபால் ரெட்டி ,
எடிட்டிங் : மார்த்தாண்டம் கே வெங்கடேஷ்,
சண்டைபயிற்சி : நட்ராஜ்,
வசனம் : மாலி
திரைக்கதை இயக்கம் – தன்ராஜ் கொரனாணி.
தயாரிப்பு: பிருத்வி போலவரபு
Samuthirakanis Ramam Raghavam will be released Tamil and Telugu