தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆக்சனுக்கும் வேகத்திற்கும் பஞ்சமில்லாத படம் என்றால் இயக்குனர் ஹரி இயக்கிய படங்களை சொல்லலாம்.
தற்போது தாமிரபரணி & பூஜை ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷாலுடன் இணைந்து பணியாற்றிய வருகிறார் இயக்குனர் ஹரி.
இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் கௌதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை விஷால் புகைப்படத்துடன் பகிர்ந்து உள்ளார்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
ஹரியின் ஆஸ்தான பகுதிகளான காரைக்குடி & தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்துள்ளது.
Gautam Menon and Samuthirakani join hands with Vishal