சுதந்திர தின விழாவை பள்ளியில் கொண்டாடி அவர்களுக்கு உதவிய விஷால்

சுதந்திர தின விழாவை பள்ளியில் கொண்டாடி அவர்களுக்கு உதவிய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நமது இந்திய நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று ஆகஸ்ட் 15 நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நடிகர் விஷாலும் இந்த கொண்டாட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு காரைக்குடி அருகில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி டைரக்ஷனில் விஷால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.

விஷால்

இன்று சுதந்திர தினம் என்பதால் காரைக்குடி அருகில் தெக்கூரில் உள்ள விசாலாட்சி நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட விஷால் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியும், சிறப்புமிக்க ஆசிரியர் பெருமக்கள் மத்தியில் திறமையான மாணவியர் செல்வங்களுடன் சிறப்புரை ஆற்றினார்

அதைத் தொடர்ந்து 200 க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பள்ளி உபகரணங்களை தனது தேவி அறக்கட்டளை சார்பில் வழங்கினார் விஷால்.

விஷால்

Vishal celebrated Independence day at School and helped them

OFFUCIAL முதன்முறையாக தனுஷுடன் இணைந்தார் ராஷ்மிகா

OFFUCIAL முதன்முறையாக தனுஷுடன் இணைந்தார் ராஷ்மிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய இயக்குநரும் தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலாவுடன் தனது 51 வது படத்திற்காக கைகோர்த்துள்ளார்.

சமீபத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஸ்ரீ நாராயணன் தாஸ் நாரங் அவர்களின் ஆசியுடன் சுனில் நாரங் மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா LLP (ஆசியன் குரூப்பின் ஒரு பிரிவு) மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் இந்த படம் தயாராகிறது. சோனாலி நாரங் இந்த படத்தை வழங்குகிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக இணைந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இது தனுஷ், சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP ஆகியோருடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து பணியாற்றும் முதல் படம் ஆகும்.

தனது விதிவிலக்கான படங்களுக்காக மிகவும் அறியப்பட்ட இயக்குனர் சேகர் கம்முலா முன்னப்போதும் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷை இந்த படத்தில் காட்டும் விதமாக தனித்தன்மையான கதையை எழுதியுள்ளார்

இப்படத்தில் பங்குபெற உள்ள மிகப்பெரிய கலைஞர்களுடன் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

நடிப்பு ; தனுஷ், ராஷ்மிகா மந்தனா

இயக்குநர் ; சேகர் கம்முலா

வழங்குபவர் ; சோனாலி நாரங்

தயாரிப்பு நிறுவனம் ; ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்

தயாரிப்பாளர்கள் ; சுனில் நாரங் மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ்

மக்கள் தொடர்பு ; ரியாஸ் K அஹ்மத்

மார்க்கெட்டிங் ; ஃபர்ஸ்ட் ஷோ

ராஷ்மிகா

Rashmika Mandanna joins Dhanush’s D51 movie

லாரன்ஸ் & எல்வின் கூட்டணியில் இணைந்த ‘ஜெயிலர்’ பட நடிகர்

லாரன்ஸ் & எல்வின் கூட்டணியில் இணைந்த ‘ஜெயிலர்’ பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டைரி’ பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘புல்லட்’.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார்.

மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

இப்படத்தை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிக்கிறார்.

இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகையான வைஷாலி ராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

புல்லட்

ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே பி ஒய் வினோத், விஜே தணிகை, சென்றாயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்திற்கு ‘டிமான்டி காலனி’, ‘டைரி’ உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாளுகிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சுனில்

‘புல்லட்’ படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும், நடிகர் சுனில், ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புல்லட்

Actor Sunil joins Raghava Lawrence & brother Elviin’s ‘Bullet’

‘கருமேகங்கள் கலைகின்றன’ டிரைலரை வெளியிட்டார் நீதியரசர் சந்துரு

‘கருமேகங்கள் கலைகின்றன’ டிரைலரை வெளியிட்டார் நீதியரசர் சந்துரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழகி, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை என காலம் கடந்தும் ரசிக்கப்படுகின்ற உணர்வு பூர்வமான படங்களை இயக்கியவர் இயக்குநர் தங்கர் பச்சான். தற்போது கருமேகங்கள் கலைகின்றன படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் யோகிபாபு, அதிதி பாலன் நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப்படத்தின் டிரைலர் இன்று (ஆக-14) வெளியாக உள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு அவர்கள் இந்தப்படத்தின் டிரைலரை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிடுகிறார்.

சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஜெய்பீம் திரைப்படம் கடந்த வருடம் ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷனில் இடம்பெற்றது. இப்படம் நீதிபதி சந்துரு அவர்களின் வாழ்க்கையில் அவர் சந்தித்த ஒரு வழக்கை அடிப்படையாக கொண்டுதான் ஜெய்பீம் திரைப்படம் உருவாக்கப்பட்டது.

கருமேகங்கள் கலைகின்றன

மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த அந்தப்படம் நீதியரசர் சந்துருவின் புகழை தமிழக மக்களுக்கு மேலும் வெளிச்சம் போட்டு காட்டியது.

ஒய்வு பெற்ற பின்பும் தமிழக அரசு அமைத்த ஆணையங்களில், ஒரு ரூபாய் கூட ஊதியம் பெறாமல் தனது சொந்த செலவிலேயே பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் மதுரையில் திறக்கப்பட்ட கலைஞர் நூலகத்திற்கு 5000க்கும் மேற்பட்ட புத்தகங்களை அருங்கொடையாக வழங்கியவர் நீதியரசர் சந்துரு என்பது குறிப்பிட தக்கது.

கருமேகங்கள் கலைகின்றன படத்தில் பாரதிராஜா ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரமும் அவரைப்போன்ற ஒரு நேர்மையான நீதிபதி பாத்திரம் தான். அதனால் இந்தப்படத்தின் டிரைலரை நீதியரசர் சந்துருவை கொண்டு வெளியிட்டால் வெகு பொருத்தமாக இருக்கும் என இயக்குநர் தங்கர் பச்சான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் விரும்பினர். அதனை ஏற்றுக்கொண்டு இந்தப்படத்தின் டிரைலரை வெளியிடுகிறார் நீதியரசர் சந்துரு.

இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. செப்-1ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

கருமேகங்கள் கலைகின்றன

Chandru launched Karumegangal Kalaigindrana Trailer

மூன்று இயக்குனர்கள் நடிப்பில் உருவான படத்தின் ரிலீஸ் தேதி இதோ

மூன்று இயக்குனர்கள் நடிப்பில் உருவான படத்தின் ரிலீஸ் தேதி இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.

இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர்,கவுதம் மேனன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘கருமேகங்கள் கலைகின்றன’ படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

கருமேகங்கள் கலைகின்றன

Thankar Bachan’s ‘Karumegangal Kalaigindrana’ movie release date announcement

ரஜினியின் “ஜெயிலர்” படத்தை குடும்பத்துடன் பார்த்த கேரள முதல்வர்

ரஜினியின் “ஜெயிலர்” படத்தை குடும்பத்துடன் பார்த்த கேரள முதல்வர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நெல்சன் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார்.

இப்படம் வெளியான நாள் முதலே படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்துள்ளன.

இப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ திரைப்படத்தை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தன் குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் உள்ள லூலூ மாலில் உள்ள திரையரங்கில் பார்த்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படம், வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

kerala CM pinarayi vijayan watched the movie jailer

More Articles
Follows