தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
என்ஜிகே படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கவுள்ள படத்தை செல்வராகவன் இயக்கவுள்ளார் என கூறப்பட்டது.
தனுஷ் கைவசம் நிறைய படங்கள் உள்ளதால் அவர் ரொம்ப பிசியாக இருக்கிறாராம்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து கர்ணன், அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் படம், ராம்குமார் படம் என தனுஷ் படங்கள் காத்திருக்கின்றன.
எனவே குறைந்த பட்ஜெட்டில் புதிய படமொன்றை இயக்க முடிவெடுத்துள்ளாராம் செல்வராகவன்.
அதில் ஹீரோவாக கௌதம் கார்த்திக் நடிப்பார் என கூறப்படுகிறது.
சூர்யா, சாய்பல்லவி, ராகுல் பரீத்தி சிங் நடித்த என்.ஜி.கே படத்தை இறுதியாக இயக்கி இருந்தார் செல்வராகவன்.
ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Director Selva Raghavan’s next film with Gautham Karthik