‘தயவுசெய்து எங்களை அழிக்காதீங்க…’ ஹரி உருக்கமான வேண்டுகோள்

‘தயவுசெய்து எங்களை அழிக்காதீங்க…’ ஹரி உருக்கமான வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

s3-suriya-haasanசூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடித்த ‘சி 3’ திரைப்படம் நாளை மறுநாள் 9ஆம் தேதி வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இப்பட இயக்குனர் ஹரி, அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் ஓர் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது….

வணக்கம்,
நான் மக்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், தயவு செய்து தியேட்டர் அல்லாத மற்ற எங்கும் எந்த படத்தையும் பார்க்க வேண்டாம்.

நம்முடைய இளைஞர்கள்தான் நம்முடைய மிகப்பெரிய பலம். எழுச்சியோடு, ஒரு மாபெரும் புரட்சி செய்து அதை நிரூபித்தீர்கள். உலகத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களை பாராட்டாத ஆளே கிடையாது.

திருட்டு டி.வி.டி-யிலோ, சட்டவிரோதமான இணையதளங்களிலோ படம் பார்ப்பது உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம். நீங்களே அதை சரியாக உணர்ந்து விட்டால் அதைச் செய்வது உங்களுக்கு பிடிக்காது.

அனைத்து இளைஞர்களுமே பார்ப்பதாக, நான் குற்றம் சொல்லவில்லை, ஏதோ ஒரு சாரார் மட்டுமே அப்படி பார்க்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.

சினிமா என்பது ஒரு தொழில் மட்டுமல்ல ஒரு கலை. தயாரிப்பாளர் கூட ஒரு கலைஞன் தான்.

சினிமாவின் வரலாற்றில் எத்தனை பேர் சம்பாதித்தார்கள் எத்தனை பேர் விட்டுச் சென்றார்கள் என்று பார்த்தால், விட்டுச் சென்றவர்கள் தான் அதிகம்.

அதனால் தயாரிப்பாளருக்கு பணம் போய் சேர வேண்டும் என்றால், கண்டிப்பாக தியேட்டரில் படம் பார்த்தால் மட்டுமே போய் சேரும். ஒரு படத்தை மொத்தமாகவோ காட்சிகளாகவோ விமர்சனம் செய்கின்ற உரிமை பார்வையாளர்களுக்கு உண்டு.

ஆனால் அதை தியேட்டரில் படம் பார்த்துவிட்டு செய்யுங்கள். தவறான வழியில் அல்ல. யாராவது தவறு செய்தால், அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். இது என்னுடைய வேண்டுகோள்.

அடுத்து நீங்கள் ஏதோ இணையதளம் பற்றி சொன்னீர்கள், அதைப்பற்றி எனக்கு முழுதாக தெரியாது. ஆனால், அந்த இணையதளம் சம்மந்தப்பட்டவர்களுக்கு, நான் வைக்கின்ற வேண்டுகோள் என்னவென்றால்,

உங்களுக்கு யார் மீது கோபம்? எதற்க்காக ஒரு படத்தை இப்படி செய்கிறீர்கள். அதனால் உங்களுக்கு என்ன கிடைக்க போகிறது? ஒன்றும் இல்லை. நீங்கள் ஒரு நாள் உட்கார்ந்து ஒரு பத்து நிமிடம் யோசித்து பாருங்கள்.

நாம் செய்வது சரியா தவறா என்று. ஐயோ இந்த பாவத்தை எதற்கு செய்கிறோம் என்று கண்டிப்பாக தோன்றும்.

ஒரு தயாரிப்பாளர் மூலமாக, முன்னூறு தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் ஆயிரம் பேர் பயனடைகிறார்கள்.

அந்த தயாரிப்பாளரை நசுக்கி விட்டால், அவர் அடுத்து படம் தயாரிக்கவே மாட்டார். சினிமா துறையே நசித்து விடும்.

ஒரு தொழில் துறையை நசுக்கி விட்டு நீங்கள் எதை சாதிக்கப் போகிறீர்கள்?

சினிமா ஒரு தொழில். அரசியல் அல்ல. இந்த தொழிலில் உங்கள் அனைவரையும் சந்தோஷப் படுத்துவதற்காக நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம்.

யாருமே நூறு சதவிகிதம் ஜெயிப்பதும் இல்லை. நூறு சதவிகிதம் சம்பாதிப்பதும் இல்லை. அதனால் இப்படி ஒரு சூழலில், பெரிய ஆபத்தில் நாங்கள் இருக்கும் போது, எங்களை நீங்கள் ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்?

தயவு செய்து எல்லாவற்றையும் தூக்கிப் போடுங்கள். இனிமேல் இந்த வேலையை செய்ய மாட்டோம் என்று உங்கள் டிவிட்ட்ரில் பதிவு செய்யுங்கள். உலகமே உங்களை கைதட்டிப் பாராட்டும்.

18 முதல் 21 மணி நேரம் வேலை செய்கின்ற தொழில் துறை எங்காவது இருக்கிறதா? அப்படி இருந்தால் தொழிலாளர்களை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று தொழிலாளர் நலத்துறை உடனே நோட்டீஸ் அனுப்பும்.

ஆனால் கலைஞர்களாகிய நாங்கள் ஒரு விஷயத்தை உருவாக்குவதற்கு கஷ்டப்படுகிறோம் அதிலும் விரும்பியே இந்த வேலையை செய்கிறோமென்று தெரிந்த காரணத்தால் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதில்லை.

நாங்கள் முதலாளிகள் இல்லை. உங்களுக்கு நல்ல உணவைத் தரவேண்டுமென்று சமையல் செய்பவர்கள், நீங்கள் எங்கள் தலையில் கல்லைத் தூக்கி போட்டால், நாங்கள் எப்படி நல்ல சமையல் செய்து தர முடியும்?

எங்களுடைய படம் தவறான வழியில் பார்க்கப்பட்டால், நாங்கள் எவ்வளவு வேதனை படுவோம் என்று எண்ணிப்பாருங்கள்.

எல்லோரும் மனிதர்கள் தான். எல்லோருக்குமே காயம்பட்டால் சிவப்பு இரத்தம் தான். உங்களுக்கு பச்சை இரத்தம் வருமென்று சொன்னால் இந்த தவறை செய்யுங்கள்.

உங்களுடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, நண்பர்கள் என எல்லோருடைய தொழிலும் நன்றாக இருக்க வேண்டுமென்றால், அடுத்தவர்கள் செய்யும் தொழிலும் நன்றாக இருக்க வேண்டும், அதை நீங்கள் கஷ்டப்படுத்தக்கூடாது.

ஒரு ஹீரோவை வைத்து போஸ்டர் ஒட்டினால், தியேட்டரில் அதே ஹீரோ நடித்த படத்தை தான் மக்களுக்கு காட்டுகிறோம், வேறு ஹீரோ படத்தை காட்டி ஏமாற்றுவதில்லை.

நீங்கள் தயவு செய்து சிந்தித்து பார்த்து உங்கள் தவறை நிறுத்திக்கொள்ளுங்கள். வேறொரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உலகமே நம் தமிழ் சமூகத்தை திரும்பிப்பார்த்து வியக்கும் அளவிற்கு, நாம் ஏற்கனவே ஒரு புரட்சியை உருவாக்கி இருக்கிறோம்.

இதே மாதிரியான உயர்வுட¬னேயே நாம் இருக்க வேண்டும். யாரும் நம்மை பார்த்து கேவலமாக பேசும் நிலைக்கு தள்ளப்பட்டு விடக்கூடாது.

அன்புடன்
ஹரி

Director Hari request to all fans regarding Singam 3 movie release

singam-story_647_122216103719

‘காதல்’ சுகுமார்-‘பட்டதாரி’ அபிசரவணன் இணையும் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’

‘காதல்’ சுகுமார்-‘பட்டதாரி’ அபிசரவணன் இணையும் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

9 Giragankalum Ucham Petravan shooting starts with Poojaமதுரை ஆர்.ரத்தினவேல் பாண்டியன் மற்றும் கோவை கே.கனகராஜ் ஆகியோரின் நல்லாசியுடன் ‘காதல்’ சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’ எனும் படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவக்கவிழா நேற்று மாலை கோவையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திரையுலக கலைஞர்களும் கோவையை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

‘காதல்’ படம் மூலம் நகைச்சுவை நடிகனாக பிரபலமான ‘காதல்’ சுகுமார் ‘திருட்டு விசிடி’, ‘சும்மாவே ஆடுவோம்’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து மூன்றாவதாக இயக்கும் படம் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’.

இந்தப்படத்தின் கதாநாயகனாக ‘பட்டதாரி’ படத்தில் நடித்த அபிசரவணன், விஷ்ணுப்ரியன் மற்றும் காதல் சுகுமார் ஆகியோர் நடிக்கின்றனர்.கதாநாயகிகளாக கன்னிகா ரவி, ஸ்ருதி, ஹர்ஷதா ஆகியோர் நடிக்கிறார்.

இவர்களுடன் தம்பிராமையா, எம்.எஸ்.பாஸ்கர், சௌந்தர்ராஜன், கோவை விஷ்ணு, ரமா, சரவணன் சுப்பையா, அசோக் பாண்டியன், டேவிட் சாலமன், சத்யா, மனோ, ஹர்ஷன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

‘பொறம்போக்கு’ படத்திற்கு இசையமைத்த வர்ஷன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

வாழக்கையில் அடுத்தடுத்து தொடர்ந்து மிகப்பெரிய இழப்புகளை சந்திக்கும் ஒருவன் அதில் இருந்து எப்படி மீள்கிறான் என்பதுதான் இந்தப்படத்தின் கதை.

கேரளாவில் ஆரம்பித்து கோவையில் முடியும் இந்தப்படத்தின் கதை ஏழு நாட்களுக்குள் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகிறது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது..

‘காதல்’ சுகுமாரின் சொந்த நிறுவனமான காதல் ஸ்டுடியோஸ்யுடன் கே.யூ.தேவர் பிலிம்ஸ்-ன் U.சாய்சரவணன் மற்றும் பாரம்பரியம் மூவிஸ்-ன் விஜய் ஆனந்த் ஆகியோரும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் விக்ரமன் இயக்கத்தில் வெளியான சூர்யா நடித்த ‘உன்னை நினைத்து’ படத்தில் நகைச்சுவை நடிகர் சார்லி பேசிய ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’ என்கிற புகழ்பெற்ற வசனம் தான் இந்தப்படத்தின் டைட்டிலாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

இசை- வர்ஷன் ( Varsan )
ஒளிப்பதிவு – ஜீன்ஸன் லோனப்பன் ( Jinson Lobnappan )
படத்தொகுப்பு – சதிஷ் பி கோட்டே ( Sathis B.Kottay )
ஆக்சன் – மிரட்டல் செல்வா ( Mirtal Selva )

பூஜையில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தவர்கள்

திரு.சக்திவேல் கவுண்டர் அவர்கள்
திரு.கோடீஸ்வரன் – (பா.ஜ.க தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர்)
மதுரை தமிழசை’ செல்வி முத்துமீனா – ரத்தினவேல்பாண்டியன்
திருமதி A.ராஜசுந்தரி – துணை சேர்மன், கோவை சொசைட்டி
திரு.சக்திவேல் – காவல்துறை உதவி ஆய்வாளர், கோவை

9 Giragankalum Ucham Petravan shooting starts with Pooja

விஜய்-61 மற்றும் ஜனதா கேரேஜ் படத்திற்கும் உள்ள ஒற்றுமைகள்

விஜய்-61 மற்றும் ஜனதா கேரேஜ் படத்திற்கும் உள்ள ஒற்றுமைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and Junior NTRஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து அட்லி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

சமந்தா மற்றும் காஜல் ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ள இப்படம் விஜய் நடிப்பில் உருவாகும் 61வது படமாகும்.

மேலும் இதன் மற்றொரு நாயகியான ஜோதிகா விலகிக்கொள்ள அதில் நித்யாமேனன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நாயகி முடிவாகவில்லை என்றாலும் நித்யா பற்றிய செய்தி வந்த உடனே ரசிகர்கள் இப்படத்தை ஜீனியர் என்டிஆர், மோகன்லால் நடித்த ஜனதா கேரேஜ் படத்துடன் ஒப்பிட ஆரம்பித்து விட்டனர்.

ஜனதா கேரேஜ் படத்திலும் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகிய மூவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similarity between Vijay 61 and Janatha Garage movies

கர்நாடகாவிலும் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த சூர்யா

கர்நாடகாவிலும் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singam suriyaசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சி3 படம் நாளை மறுநாள் பிப். 9ஆம் உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது.

தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆந்திராவில் சினிமா வியாபாரத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் சூர்யா இருக்கிறார் என் ஞானவேல்ராஜா அண்மையில் கூறியிருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் கர்நாடகாவிலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாம்.

அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பை சேர்த்து கிட்டதட்ட 180 தியேட்டர்களில் அங்கு இப்படம் வெளியாகிறதாம்.

இதற்குமுன் தமிழ் நடிகர்களில் ரஜினியின் படங்கள் மட்டுமே அதிகளவில் அங்கு வெளியானதாக சொல்லப்படுகிறது.

Singam 3 movie release in Karnataka updates

தன் பிறந்தநாளில் திரையில் தோன்றும் சிவகார்த்திகேயன்

தன் பிறந்தநாளில் திரையில் தோன்றும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyanசாய் ரமணி இயக்கத்தில் லாரன்ஸ், சத்யராஜ், நிக்கி கல்ராணி நடித்துள்ள படம் மொட்ட சிவா கெட்ட சிவா

அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியானது.

வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.

இதேநாளில்தான் சிவகார்த்திகேயன் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதுவரை சரிதான்.. அவருக்கும் இப்படத்திற்கும் என்ன சம்பந்தம் என்றுத்தானே கேட்கிறீர்கள்..?

இப்படத்தின் ஒரு பாடலில் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் தோன்றியிருக்கிறாராம்.

அவரின் பிறந்தநாளிலேயே அவர் கெஸ்ட் ரோலில் நடித்த படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan movie release on his birthday

siva lawrance shoot

விஜய்-சூர்யாவுக்கு விஜயகாந்த்; கௌதம் கார்த்திக்கு விஜய்சேதுபதி?

விஜய்-சூர்யாவுக்கு விஜயகாந்த்; கௌதம் கார்த்திக்கு விஜய்சேதுபதி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi Gautham Karthikதனது முதல் படத்திலேயே மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் கௌதம் கார்த்திக்.

கடல் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இப்படம் 2013ல் வெளியானது.

அதன்பின் வந்த, என்னமோ ஏதோ, வை ராஜா வை ஆகிய படங்களும் இவருக்கு கைகொடுக்கவில்லை.

வருகிற பிப்ரவரி 24ஆம் நெப்போலியனுடன் இவர் நடித்துள்ள முத்துராமலிங்கம் என்ற படம் வெளியாகிறது.

இந்நிலையில் முன்னணி நடிகரான விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறாராம்.

‘7C’s என்டர்டைன்மெண்ட்’ மற்றும் ‘அம்மே நாராயணா புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆறுமுககுமார் இயக்குகிறார்.

இதன் தலைப்பை விரைவில் வெளியிடவிருக்கிறார்களாம்.

இப்படம் கௌதமுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

விஜய் மற்றும் சூர்யாவின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு விஜய்காந்த் உறுதுணையாக இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi and Gautham Karthik teams up

More Articles
Follows