‘சிங்கம்3’ படத்தின் தெலுங்கில் பதிப்பில் வேற கதையாம்!?

‘சிங்கம்3’ படத்தின் தெலுங்கில் பதிப்பில் வேற கதையாம்!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Si3சூர்யா நடித்த சி3 படம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியானது.

இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் செம வசூலை அள்ளி வருகிறதாம்.

நாகார்ஜீனாவின் படங்களை விட இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாம்.

இந்நிலையில் இந்த தெலுங்கு பதிப்பில் ஒரு சிறிய மாறுதலை செய்துதான் அப்படத்தை அங்கு வெளியிட்டாராம் இதன் இயக்குனர் ஹரி.

அதாவது தமிழ் பதிப்பில் தமிழ்நாட்டு போலீஸ்காரர் ஆந்திரா சென்று வில்லன்களை வேட்டையாடுவார்.

ஆனால் தெலுங்கு பதிப்பில் ஆந்திரா போலீஸ் ஆக இருக்கும் இவர் கர்நாடகாவுக்கு சென்று வேட்டையாடுவாராம்.

Director Hari changed Singam 3 story in Telugu version

‘ஒண்ணுமே ஆகலே…’ பாடிட்டு இப்படி அசத்திட்டாரே அனிருத்

‘ஒண்ணுமே ஆகலே…’ பாடிட்டு இப்படி அசத்திட்டாரே அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudhஅரசியல் கூட்டணி போல சினிமாவில் ஒரு சிலரின் கூட்டணிக்கு அதிக மவுசு உள்ளது.

அதில் ஒன்றுதான் அனிருத் விக்னேஷ் சிவனின் கூட்டணி என்று சொல்லலாம்.

இவர்களின் கூட்டணி வெளியான நானும் ரவுடிதான் படத்தின் பாடலகள் இளைஞர்களிடையே மாபெரும் ஹிட் அடித்தது.

இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் வரிகளுக்கு அனிருத் இசையமைத்து பாடிய ஒண்ணுமே ஆகலே என்று தொடங்கும் பாடலை பாடி யூடிப்பில் வெளியிட்டனர்.

இப்பாடல் வெளியாகி இன்னும் 24 மணி நேரத்தை கூட கடக்காத நிலையில், இதனை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக விக்னேஷ் சிவன் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

(டியூடிப் மற்றும் பேஸ்புக்கை சேர்த்து இந்த எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது)

‘உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு ‘காஸி’ சமர்ப்பணம்…’ ராணா

‘உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு ‘காஸி’ சமர்ப்பணம்…’ ராணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ghazhi Rana1971ல் இந்தியாவிற்க்கும் பாகிஸ்தானிற்க்கும் இடையே நடந்த போரின் போது, இதுவரை யாரும் அறிந்திராத போர்க்கதைதான் இந்த காஸி.

ப்ளூ ஃபிஸ் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படமானது இதுவரை இந்திய சினிமாவில் எடுக்கப்பட்ட தேசப்பற்று படங்களில் தனித்துவம் பெற்ற படமாகும்.

முழுக்க முழுக்க கடலுக்கடியில் நடக்கும் யுத்தத்தினை நவீன தொழில்நுடபத்துடன் தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சங்கல்ப்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் நாயகன் ராணா டகுபதி, இயக்குனர் சங்கல்ப், படத்தின் இசை அமைப்பாளர் கே, பி.வி.பி யின் நிர்வாக இயக்குனருமான கே.கேயும் கலந்து கொண்டார்.

படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் நாயகன் ராணா டகுபதி பேசிய போது…

என்னுடைய சிறுவயது காலங்களில் கேள்விபட்ட காஸி போர் தான் இப்படத்தின் கதை.

ப்ளூ ஃபிஸ் என்ற புத்தகத்தை எழுதிய இயக்குனர் சங்கல்ப் முதலில் இதை ஒரு குறும்படமாக இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் இப்படம் முழுநீள திரைப்படமாக தற்போது வெளிவந்துள்ளது.

இப்படமானது விசாகபட்டிணத்தில் 71 நாட்கள் நடந்த யாரும் அறிந்திராத கடலுக்கடியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.

போர்களத்தில் நமக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இப்படம் பெருமை சேர்க்கும் என்றும்,ஒரு நீர்மூழ்கி கப்பலில் கடலுக்கடியில் வாழும் கடற்படை வீரர்களின் வாழ்க்கையையும், அவர்களின் ஒழுக்கத்தையும் இப்படத்தில் நீங்கள் பார்க்கலாம் என்று கூறினார்.

இப்படத்தின் இயக்குனர் சங்கல்ப் பேசுகையில்…

என்னுடைய முதல் படமே ஒரு சொல்லபடாத உண்மை சம்பவத்தை சொல்வதில் பெருமை கொள்கிறேன் என்றும், இப்படத்தை நான் இயக்கியதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் என கூறினார்.

இசையமைப்பாளர் கே பேசுகையில்…

இந்திய திரையுலக வரலாற்றில் இப்படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு முக்கிய திரைப்படம். முற்றிலும் புதிய களத்தை கொண்டது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தனித்தன்மை கொண்ட இப்படம், என் சினிமா வாழ்க்கையில் என்னை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும் என கூறினார்.

இந்திய சினிமா வரலாற்றில் பல தேசப்பற்று படங்கள் வந்திருந்தாலும், சொல்லபடாத வரலாற்றை சொல்லிய இந்த காஸி இனி வரும் காலங்களில் சொல்லும் படியான வரலாற்றை படைக்கும்.

Rana Dagubaati shares his experience with Ghazi movie

Ghazi movie team

‘தண்டனை பெற்ற சசிகலா அதுக்கும் பதில் சொல்லனும்..’ கௌதமி

‘தண்டனை பெற்ற சசிகலா அதுக்கும் பதில் சொல்லனும்..’ கௌதமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautamiசொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கௌதமி கூறும்போது…

தற்போது ஊழல் செய்த குற்றத்திற்காக சசிகலாவுக்கு தண்டனை கிடைத்துள்ளது.

மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதாவின் மரணத்திற்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Gautami ‏@gautamitads
#sasikala has been convicted for corruption. She has to answer for #Amma death also Both cases don’t carry equal sentencing #JusticeForAmma

ஜெயம் ரவி-ஆர்யாவின் பிரம்மாண்ட கூட்டணியில் பிரபல நடிகை

ஜெயம் ரவி-ஆர்யாவின் பிரம்மாண்ட கூட்டணியில் பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayamravi aryaசுந்தர் சி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சங்கமித்ரா’ படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகமிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

ரூ. 100 கோடிக்கும் மேல் செலவில் இப்படம் உருவாகவிருக்கிறது.

கிட்டதட்ட இது சுந்தர் சியின் கனவுப்படம் என்றே சொல்லலாம்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா இணைந்து நடிக்கின்றனர்.

இந்நிலையில் இதில் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.

Shruthihassan joins with Jayam Ravi and Arya

கபாலி-வேதாளம்-பைரவா-சிங்கம்3… யார் வசூல் மன்னன்.?

கபாலி-வேதாளம்-பைரவா-சிங்கம்3… யார் வசூல் மன்னன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali Vedhalam Bairavaa Singam3 Who is box office Kingதமிழ்நாட்டை போன்றே மலேசியாவிலும் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இதனாலேயே பெரும்பாலான படங்களில் மலேசியா காட்சிகள் அதிகம் இடம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் அண்மையில் வெளியான சிங்கம் 3 படத்தின் வசூல் விவரங்கள் தெரிய வந்துள்ளது.

இதில் ஓப்பனிங் வசூலாக சூர்யா நடித்த சிங்கம்-3 திரைப்படம் ரூ 5.73 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இது விஜய் நடித்த பைரவா படத்தை விட அதிகம் என கூறப்படுகிறது.

ஆனால் அஜித் நடித்த வேதாளம் படத்தின் வசூலை முறியடிக்கவில்லையாம்.

வேதாளம் ஓப்பனிங் வசூலில் ரூ 6 கோடியை வசூல் செய்திருந்ததாம்.

அப்படியென்றால் யாருக்கு முதல் இடம் என்று உங்களுக்கு தெரிந்திருக்குமே. சாட்சாத் கபாலிதான்.

மலேசியாவில் ஓப்பனிங் வசூலாக ரூ 7 கோடியை வசூல் செய்து என்றும் வசூல் மன்னனாக ரஜினி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows