காலா வந்தாதான் நல்ல காலம்; சவரக்கத்தி சக்ஸஸ் மீட்டில் ராம் பேச்சு

Director cum Actor Ram speech about Kaala arrival at Savarakathi success meetஜிஆர். ஆதித்யா இயக்கத்தில் மிஷ்கின் தயாரித்து பாடல் எழுதி நடித்த படம் சவரக்கத்தி.

அரோல் கரோலி இசையமைத்திருந்த இப்படத்தில் டைரக்டர் ராம், பூர்ணா ஜோடியாக நடித்திருந்தனர்.

இப்படம் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது.

அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்ற இப்படத்தின் வெற்றி விழாவை கொண்டாடி படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பட நாயகன் ராம் பேசியதாவது…

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் வரி விதிப்புக்கு பிறகு தியேட்டர்களில் கூட்டம் குறைந்துள்ளது.

பாகுபலி2 படத்திற்கு பிறகு குடும்பத்துடன் தியேட்டர்களுக்கு மக்கள் வருவதில்லை என தியேட்டர்கள் அதிபர்கள் சொல்கின்றனர்.

பெரிய படம் வரவேண்டும் என்கின்றனர். காலா போன்ற படம் வந்தால் மக்கள் குடும்பத்துடன் வருவார்கள் என்கிறார்கள்.

தற்போது சவரக்கத்தி படத்திற்கும் மக்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த படத்திற்கு யு சர்ட்டிபிகேட் கிடைத்திருந்தாலும் சவரக்கத்தி என்ற தலைப்பால் இது வன்முறை நிறைந்த படமாக இருக்குமோ? என்று சிலர் நினைக்கின்றனர்.

இந்த சவரக்கத்தி திருத்தும் கத்தி. அழகு பூர்வமான கத்தி” என்று பேசினார்.

Director cum Actor Ram speech about Kaala arrival at Savarakathi success meet

Overall Rating : Not available

Latest Post