கிராமத்து கதையை கையில் எடுக்கும் தர்பார் டைரக்டர்

கிராமத்து கதையை கையில் எடுக்கும் தர்பார் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini AR Murugadossரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தை இயக்கியுள்ளார் முருகதாஸ்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் மும்பையை பின்னணியாகக் கொண்ட போலீஸ் தாதா கதையாக உருவாகியுள்ளது.

இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் பின்னர் யாரை இயக்குவார் முருகதாஸ்? என கேள்வி தற்போதை கோலிவுட்டில் எழுந்துள்ளது.

நாயகன் யார்? என்ற கேள்விக்கு விடை தெரியாவிட்டாலும் அவர் அடுத்து இயக்கவுள்ள கதை கிராமத்து கதையாம்.

விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என நம்பலாம்.

சிம்புவின் மாநாடு குறித்து சுரேஷ் காமாட்சி முக்கிய அறிவிப்பு

சிம்புவின் மாநாடு குறித்து சுரேஷ் காமாட்சி முக்கிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu in maanaduதயாரிப்பாளராக இருந்த சுரேஷ் காமாட்சி அண்மையில் வெளியான மிக மிக அவசரம் படத்தின் மூலம் இயக்குனராக மாறினார்.

தற்போது பாரதிராஜாவின் குற்றப் பரம்பரை படத்தை வெப் சீரிஸாக தயாரிக்கவுள்ளார்.

இதே சமயத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘மாநாடு’ படத்தை தயாரிக்கவுள்ளார்.

இந்த நிலையில், மாநாடு படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பை பொங்கல் தினத்தில் வெளியிடவுள்ளதாக சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

கேரள கரையோரத்தில் தனுஷ்; மீண்டும் மலையாள நடிகையுடன் ஜோடி

கேரள கரையோரத்தில் தனுஷ்; மீண்டும் மலையாள நடிகையுடன் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajisha Vijayanஎப்போதும் தமிழ் சினிமாவுக்கும் மலையாள நடிகைக்கும் நீண்ட கால தொடர்பு உண்டு.

அண்மைக்காலமாக இது அதிகரித்து வருகிறது.

அதிலும் தனுஷ் படங்களில் மலையாள நடிகைகளே நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

நயன்தாரா, அமலாபால், மஞ்சு வாரியர், மடோனா செபஸ்டியன், அனுபமா, ஐஸ்வர்யா லட்சுமி (டி40 படம்) உள்ளிட்ட பல மலையாள நடிகைகள் தனுஷ் உடன் நடித்துள்ளனர்.

தற்போது இந்த வரிசையில் புதிய வரவாக ரெஜிஷா விஜயன் இணைந்துள்ளர்.

இவர் தன் முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதை பெற்றார்.

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க உள்ளாராம்.

இவர்களுடன் நட்டி, லால் நடிக்க வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

சூர்யா வீட்டு விருந்தில் அஜித்திடம் பாடம் கற்ற பிருத்விராஜ்

சூர்யா வீட்டு விருந்தில் அஜித்திடம் பாடம் கற்ற பிருத்விராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith and prithvirajநடிகர் இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் மலையாள நடிகர் பிருத்விராஜ்.

அண்மையில் ரஜினி பட இயக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக கூறியிந்தார்.

இந்த நிலையில் மற்றொரு பேட்டியில் நடிகர் அஜித் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்…

சில வருடங்களுக்கு முன் நடிகர் சூர்யாவின் புது வீடு கிரகப்பிரவேசத்துக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவரோடு பேசிக் கொண்டிருந்த வெற்றியிலிருந்தும்; தோல்வியிருந்தும் விலகியே இருப்பவர் அஜித் என்பதை புரிந்துக் கொண்டேன்.

வெற்றியால் சந்தோஷம் அடைவதும், தோல்வியால் துவண்டு விடுவதும் இல்லை என அஜித் என்னிடம் தெரிவித்தார். அதை நான் பாடமாக எடுத்துக் கொண்டேன்.” என தெரிவித்துள்ளார் பிருத்விராஜ்.

போலீஸ் கதாபாத்திரத்திற்காக சிறப்புப் பயிற்சி எடுத்தேன் – ரிஷி ரித்விக்

போலீஸ் கதாபாத்திரத்திற்காக சிறப்புப் பயிற்சி எடுத்தேன் – ரிஷி ரித்விக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rishi rithvikஒரு மனிதன் அதிகமான போதைக்கு அடிமையானால் என்ன விளைவு நடக்கும் என்பதைக் கூறும் படம் மரிஜுவானா – இயக்குநர் எம்.டி.ஆனந்த்

‘மரிஜுவானா’ படத்தைப் பற்றி அப்படத்தின் இயக்குநர் எம்.டி.ஆனந்த், கதாநாயகன் ரிஷி ரித்விக் மற்றும் தமிழ் தாய் கலைக் கூடத்தின் எஸ்.ராஜலிங்கம் கூறியதாவது:-

கதாநாயகன் ரிஷி ரித்விக் பேசும்போது,

‘அட்டு’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், அப்படத்தின் உடல்மொழி இருக்கக்கூடாது. மேலும் காவல் துறை அதிகாரியாக நடித்திருப்பதால் காவல் துறையில் பணிபுரியும் என் அண்ணனுடன் 8 நாட்கள் இருந்து கற்றுக் கொண்டேன். இப்படம் சமூக அக்கறை கொண்ட படம். நாயகியும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆனால், எங்கள் இருவருக்கும் காதல் காட்சிகளும் இருக்கிறது என்றார்.

இயக்குநர் எம்.டி.ஆனந்த் பேசியதாவது,

இது எனக்கு முதல் படம்.
சைக்கோ திரில்லர் படம். ஒரு மனிதன் அதிகமான போதைக்கு அடிமையானால் என்ன விளைவு நடக்கும் என்பது தான் இப்படம். உண்மை சம்பவங்களை தான் படமாகியிருக்கிறோம். பெண்களுக்கான பாதுகாப்பு என்பது சமூகம் கொடுக்க வேண்டுமா? அல்லது பெற்றோருடைய பொறுப்பா? ஒருவன் தவறான பாதைக்கு செல்வதற்கு யார் காரணம்? என்னைப் பொறுத்தவரை பெற்றோர்கள் தான் காரணம்.

ஏழையாக இருக்கும் குழந்தை தவறு செய்கிறது. வறுமை தான் தவறு செய்யத் தூண்டுகிறது என்ற கருத்தை கூறியிருக்கிறோம்.

நட்டியின் உதவியாளராக இருந்த பாலா ரோசய்யா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பள்ளியில் பயின்ற கார்த்திக் குரு இசையமைக்கிறார். கலையை சரவணன் செய்திருக்கிறார். படத்தொகுப்பை எம்.டி.விஜய் கவனிக்கிறார்.

‘அட்டு’ பட நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா பாத்தலோம், பவர் ஸ்டார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பெண்கள் குறிப்பாக 40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஆனால், சென்சாரில் ‘A’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். 52 காட்சிகளை நீக்கினால் தான் ‘A’ சான்றிதழை கொடுக்காமல் இருப்போம் என்றார்கள். ஆனால், ஒரு இளைஞன் பெற்றோர்களுக்குத் தெரியாமல் என்னென்ன தவறுகளைச் செய்கிறான் என்பதைக் காட்சிப்படுத்தினால் மட்டும் தான் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். அதை விளக்கிக் கூறி வேண்டுமானால் U/A சான்றிதழலாவது கொடுங்கள் என்று கேட்டோம். ஆனால் மறுத்துவிட்டார்கள். ஆனால், கதை மற்றும் காட்சிகள் குடும்பத்துடன் பார்க்கும் படியாக இருக்கும்.

மரிஜுவானா என்றால் கஞ்சா என்று அர்த்தம். கஞ்சாவை நேரடியாக காட்டவில்லை. இலையையும் சாணத்தையும் வைத்து தான் காட்சிப் படுத்தினோம். இது போன்ற போதைக்கு அடிமையாகும் பொருட்கள் நிறைய இருக்கிறது.

எங்களை போன்ற இயக்குநர் உருவாவது பத்திரிகையாளர்களாலும், எழுத்தார்களாலும் தான்.

பிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.

தமிழ் தாய் கலைக் கூடத்தின் எஸ்.ராஜலிங்கம் பேசியதாவது,

இப்படத்தை நான் தேர்ந்தெடுத்ததற்கு காரணம், கதை தான். இதற்கு முன்பு உள்ள தலைமுறை இளைஞன் எப்படி இருந்தான். இப்போதுள்ள இளைஞன் எப்படி இருக்கிறான் என்பதைக் கூறும் படம். இப்போதுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செலவுக்கு கொடுக்கும் பணத்தை எந்த மாதிரியான விஷயங்களுக்கு செலவு செய்கிறார்கள் என்பதை கவனிக்க தவறி விடுகிறார்கள். குழந்தைகள் பாதிப்பிற்கு ஆளாகும் போது தான் தெரிகிறது. ஆகையால், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இப்படத்தை எடுத்திருக்கிறோம்.

200 திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை யோகிபாபு வெளியிடுகிறார்.

‘தேர்டு ஐ கிரியேஷன்’ எம்.டி.விஜயிடம் இருந்து தமிழ் தாய் கலைக் கூடத்தின் எஸ்.ராஜலிங்கம் மற்றும் மைதீன் ராஜா இருவரும் வாங்கி வெளியிடுகிறார்கள்.

பறக்கும் ‘தர்பார்’ விமானம்..; பட்டைய கிளப்பும் லைகா புரோமோசன்

பறக்கும் ‘தர்பார்’ விமானம்..; பட்டைய கிளப்பும் லைகா புரோமோசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyca Production promote Rajinis Darbar in flight தமிழ் சினிமா பட விளம்பரங்களில் பல யுக்திகளை கையாண்டவர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு.

இவர் சினிமா துறையில் பல வருடங்களாக பல படங்களை தயாரித்தாலும் அண்மையில்தான் ரஜினியின் கபாலி படத்தை தயாரித்திருந்தார்.

எனவே இதன் விளம்பரங்களில் பட்டைய கிளப்பியிருத்தார்.

சாக்லேட் முதல் பறக்கும் விமானம் வரை விளம்பரபடுத்தியிருந்தார்.

தற்போது இவரது பாணியை லைகா நிறுவனமும் கடைபிடித்துள்ளது.

லைகா தயாரித்துள்ள ரஜினியின் தர்பார் பட போஸ்டரையும் விமானத்தில் டிசைன் செய்துள்ளனர். இது வானில் பறந்துக் கொண்டிருக்கிறது.

தர்பார் திரைப்படம் வருகிற ஜனவரி 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

Lyca Production promote Rajinis Darbar in flight

More Articles
Follows