ஜெயலலிதாவை சந்தித்த தனுஷின் மகன் யாத்ரா.!

ஜெயலலிதாவை சந்தித்த தனுஷின் மகன் யாத்ரா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush kidsரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை மணந்தார் தனுஷ்.

தற்போது இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு குழந்தைகள் உள்ளனர்.

இதில் யாத்ரா படிக்கும் பள்ளியில் மாணவர்களை இன்று சென்னை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் இருந்துள்ளார்.

அவரும் பள்ளி மாணவர்களை சந்தித்து, அவர்களுடன் அன்பாக பேசி சாக்லேட் கொடுத்தார்.

அப்போது ரஜினியின் பேரன் யாத்ராவிடம் முதல் அமைச்சர் பேசியுள்ளார்.

முருகதாஸ்-சூர்யா கூட்டணியில் இணைந்த நதியா

முருகதாஸ்-சூர்யா கூட்டணியில் இணைந்த நதியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nadhiya stillsகடந்த 1980-90களில் நடிப்பாலும் அழகாலும் நட்சத்திரங்களையே கவர்ந்தவர் நதியா.

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜெயம் ரவியுடன் ‘எம்.குமரன் s/o மகாலட்சுமி’ படத்தில் நடித்து ரீஎன்ட்ரி ஆனார்.

இந்நிலையில் தற்போது முருகதாஸ் இயக்கவுள்ள ‘வாஸ்கோடகாமா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்க, வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நதியா நடிக்கவுள்ளதாகவும் இவரும் வில்லத்தனம் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

வெகுவிரைவில் இதன் படத்தின் தொடங்கப்படவுள்ளது.

‘இனிமேலும் இதான் என் ரூட்…’ – கீர்த்தி சுரேஷ் அதிரடி

‘இனிமேலும் இதான் என் ரூட்…’ – கீர்த்தி சுரேஷ் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy suresh hot stillsநடித்த படங்கள் வெளியாகும் முன்னரே பல படங்களில் கமிட் ஆகி மற்ற நடிகைகளுக்கு தண்ணி காட்டியவர் கீர்த்தி சுரேஷ்.

ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, விஜய்-60 என டாப் ஹீரோக்களின் படங்களில் தவறாமல் இடம் பெற்று வருகிறார்.

இந்நிலையில் இவரின் சமீபத்தில் இவர் கூறியதாவது…

“எனக்கு ஹோம்லியான கேரக்டர்களே பெயரை கொடுத்துள்ளது. அதுதான் எனக்கும் செட் ஆகிறது.

இதே ரூட்டை தொடர இருக்கிறேன். கவர்ச்சியாக நடித்து இமேஜை கெடுத்துக் கொள்ளப் போவதில்லை.

பாடல் காட்சிகளில் கூட மிதமான கிளாமரைதான் தருவேன்” என கண்டிப்பாக கூறியுள்ளார்.

(பின்குறிப்பு: படத்திற்கும் அவர் சொன்னற்கும் சம்பந்தமில்லை)

கபாலி வரட்டும்.. காத்திருக்கும் தனுஷ் – பிரபுதேவா – விக்ரம்பிரபு

கபாலி வரட்டும்.. காத்திருக்கும் தனுஷ் – பிரபுதேவா – விக்ரம்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush vikram prabhu prabhu devaரஜினி நடித்துள்ள ‘கபாலி’ வருகிற ஜுலை 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்களுக்கிடையில் இப்படம் வெளியாவதால் திரையுலகில் மாபெரும் புரட்சியை உருவாக்கும் எனத் தெரிகிறது.

எனவே இப்படம் வெளியாகும் நாளில் எந்த ஒரு படத்தையும் வெளியிட எந்தவொரு தயாரிப்பாளரும் முன்வரவில்லை.

தமிழில் மட்டுமில்லை தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவில் எந்த படமும் வெளியாகவில்லை.

இதனையடுத்து, அடுத்த வெள்ளிக்கிழமை ஜுலை 29ஆம் தேதியும் எந்த படங்களும் வெளியாகாது எனத் தெரிகிறது.

மேலும் ‘கபாலி’ படத்திற்கு ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்தால், ஆகஸ்ட் 5ஆம் தேதியும் படங்கள் வெளியாகாது.

எனவே கிட்டதட்ட 3 வாரங்களுக்கு கபாலி மட்டும்தான் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்.

இதனையடுத்து ஆகஸ்ட் 12ஆம் தேதிதான் புதிய படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போதுதான் தனுஷின் ‘தொடரி’, விக்ரம் பிரபுவின் ‘வாகா’, பிரபுதேவாவின், ‘தேவி’, ஆகிய படங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

கபாலி டிக்கெட்டு காலி: சிம்பு-வெங்கட் பிரபு எடுத்த புது முயற்சி.!

கபாலி டிக்கெட்டு காலி: சிம்பு-வெங்கட் பிரபு எடுத்த புது முயற்சி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and venkat prabuரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி ரிலீசுக்கு பல ஐடி நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளன.

அப்படி இருக்கும்போது சினிமா துறையைச் சார்ந்தவர்கள் சும்மா இருப்பார்களா?

அன்றைய தினம் அறிவிக்கப்படாத விடுமுறை நாளாக மாறிவிட்டது.

இந்நிலையில் சிம்பு, தற்போது நடித்துவரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படக்குழுவினர் அனைவருக்கும் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் எடுத்து விட்டாராம்.

இதுபோல் சென்னை 28 இரண்டாம் பாகத்தின் கலைஞர்களுக்கும் வெங்கட் பிரபு டிக்கெட் எடுத்துவிட்டதாக அறிவித்து இருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து அருண் விஜய்யின் குற்றம் 23 படக்குழு தங்கள் படப்பிடிப்பை ஒத்தி வைத்துள்ளனர்.

சமாளிக்க முடியாது… கபாலிக்கு நாங்களே லீவு விட்டுடுறோம்…!

சமாளிக்க முடியாது… கபாலிக்கு நாங்களே லீவு விட்டுடுறோம்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali stillsஒரு புறம்… விடுமுறை நாட்கள் வந்தால் படத்தை ரிலீஸ் செய்யலாம் என திரையுலகினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆனால் மறுபுறமோ… கபாலி ரிலீஸ் ஆகும் நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள பின்டஸ் நிறுவனம் விடுமுறை அளித்துள்ள நிலையில் தற்போது ஒரு சில நிறுவனங்களும் விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பெங்களுரை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று சம்பளத்துடன் விடுமுறையையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம் என்னதான் நாம் கட்டுபாடுகள் விதித்தாலும் ஊழியர்களை வேலைக்கு வருமாறு கட்டுபடுத்த முடியாது என்பதால் அவர்களின் போக்குக்கே சென்று விடுமுறை அளித்து விடுகிறோம் என்கின்றனர் நிர்வாக அதிகாரிகள்.

அட அதுவும் சரிதான்… எதுக்குப்பா ரிஸ்க்..?

More Articles
Follows