தல-தளபதி ரசிகர்கள் வழியில் தனுஷ் ரசிகர்கள்

தல-தளபதி ரசிகர்கள் வழியில் தனுஷ் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushமுன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆகி வெற்றியடைந்தால், 100வது நாள் விழா, வெள்ளி விழா என்றெல்லாம் கொண்டாடுவது வழக்கம்.

இப்போதெல்லாம் தியேட்டர்களில் ஓரிரு வாரங்கள் ஓடுவதே குதிரை கொம்பாக இருக்கிறது.

எனவே, வெள்ளி விழாவுக்கு மாற்றுவழியாக ரசிகர்கள் ஒன்றை ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

ஹிட்டான படத்தின் ரிலீஸ் தேதியை வைத்து, முதல் ஆண்டு விழா, இரண்டாம் ஆண்டு விழா என பர்த்டே பார்ட்டி போல கொண்டாட தொடங்கி விட்டார்கள்.

விஜய்யின் கத்தி படத்தை பிரபல தியேட்டர்களில் திரையிட்டு கொண்டாடினார்கள்.

அதுபோல் அஜித் ரசிகர்கள் வேதாளம் படத்தை முதல் ஆண்டு நிறைவையொட்டி வெளியிட சொல்லி தெறிக்க விட்டார்கள்.

தற்போது இவர்களை தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் இவ்வழியில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

புதுப்பேட்டை படம் ரிலீஸ் ஆகி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி வருகிற நவம்பர் 27ஆம் தேதி ஜிகே சினிமா திரையரங்கில் இரண்டு காட்சிகளை திரையிட சொல்லியுள்ளனர்.

முன்பதிவில் இந்த இருகாட்சிகளும் தற்போதே புல்லாகிவிட்டதாம்.

இன்னும் உள்ள சில தினங்களில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இன்றுமுதல் அஜித்துடன் ஒரு மாசம்… அக்ஷராஹாசன் ஹாப்பி

இன்றுமுதல் அஜித்துடன் ஒரு மாசம்… அக்ஷராஹாசன் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith akshara hassanதல-57 படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்குக்காக அஜித், இயக்குனர் சிவா உள்ளிட்ட படக்குழுவினர் பல்கேரியாவில் முகாமிட்டுள்ளனர்.

கடந்த பத்து நாட்களாக இதன் படப்பிடிப்பு அங்கே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றுமுதல் இப்பட சூட்டிங்கில் கலந்து கொள்கிறார் அக்ஷராஹாசன்.

இவர் ஒரு மாதம் காலம் தங்கியிருந்து நடிக்கவிருக்கிறார்.

அஜித்துடன் முதன்முறையாக நடிப்பதால் அக்ஷராஹாசன் செம ஹாப்பியாக காணப்படுகிறாராம்.

இங்கு சில பாடல் காட்சிகளையும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறாராம் சிவா.

அனிருத் இசையமைக்க, இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

‘டயர்ட் ஆனாலும் ரசிகர்களுக்காக நிப்பாரு…’ ரஜினி பற்றி தன்ஷிகா

‘டயர்ட் ஆனாலும் ரசிகர்களுக்காக நிப்பாரு…’ ரஜினி பற்றி தன்ஷிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini dhanshikaபேராண்மை படத்தில் அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே ரஜினியுடன் நடித்தவர் தன்ஷிகா.

இவரது நடிப்பில் காலக்கூத்து விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் தன் சமீபத்திய பேட்டியில் ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார். அதில்…

“என் நடிப்பை வெகுவாக பாராட்டினார் ரஜினி சார்.

கபாலிக்கு பிறகு எனக்கு நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று சொன்னார். அதுபோலவே நடந்து வருகிறது.

ரசிகர்களை ரஜினி சார் உயர்வாக நினைக்கிறாரு.

ரசிகர்கள்தான் நம்ம சொத்து அவங்க இல்லேன்னா நாம இல்ல என்பார்.

சூட்டிங் முடித்துவிட்டு எவ்வளவு டயர்டா இருந்தாலும், ரசிகர்களுக்காக போட்டோவுக்கு போஸ் கொடுத்து நிப்பாரு.

நம்மள பார்க்க ரொம்ப தூரத்துல இருந்து வர்றாங்க. அவங்களுக்கு மரியாதை கொடுக்கனும்னு சொல்வார்.

இதுபோல நிறைய விஷயங்கள அவருக்கு இருந்து கத்துகிட்டேன். இப்பவும் அடிக்கடி போனில் பேசிக் கொள்வோம்”

என்றார் கபாலி மகள் ‘யோகி’.

கபாலி ராதிகா ஆப்தேவின் அடுத்த தமிழ் படம்

கபாலி ராதிகா ஆப்தேவின் அடுத்த தமிழ் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali girl radhika apte‘கபாலி’ படத்தில் ரஜினியின் மனைவி குமுதவல்லி கேரக்டரில் நடித்தவர் ராதிகா ஆப்தே.

இதில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

தற்போது மீண்டும் நேரடியான ஒரு தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும் என்று சொல்லப்பபடுகிறது.

மிஷ்கின், ராம், பூர்ணா நடித்து வரும் ‘சவரக்கத்தி’ படத்தை இயக்கும் ஜி.ஆர்.ஆதித்யா அப்படத்தை இயக்க உள்ளார்.

உடல் எடையில் மாற்றம் செய்யும் சூர்யா

உடல் எடையில் மாற்றம் செய்யும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சிங்கம் 3 ‘சி3’ படத்தில் போலீஸ் உடையில் கம்பீரமாக காட்சியளித்து வருகிறார் சூர்யா.

இதற்காக அவர் தனது உடல் எடையை கொஞ்சம் கூட்டியிருந்தாராம்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.

இதில் கீர்த்தி சுரேஷ் உடன் டூயட் பாடவிருக்கிறார்.

இதில் நடிக்க, கணிசமாக தனது உடல் எடையை இதுவரை 10 கிலோ குறைத்து இருக்கிறாராம்.

தற்போது இன்னும் இளமையுடன் காட்சியளிக்கிறாராம் சூர்யா.

திருமண நிச்சயதார்த்தம் பற்றி அனிருத் விளக்கம்

திருமண நிச்சயதார்த்தம் பற்றி அனிருத் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudhஇளம் நெஞ்சங்களை தன் இசையால் கவர்ந்து வைத்திருப்பவர் அனிருத்.

இவருக்கு விரைவில் திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெற உள்ளதாகவும், அது காதல் திருமணம் இல்லாமல் பெற்றோர் நடத்தும் திருமணமாக இருக்கும் என பல்வேறு இணையத்தளங்களில் செய்திகள் வெளியானது.

இதுகுறித்து சற்றுமுன் அனிருத், தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

எனக்கு நிச்சயதார்த்தமா…? ஹ்ஹ்ஹா….. நான் பேச்சுலர். திருமண வயதை எட்டவில்லை என்பது போல் பதிவிட்டுள்ளார்.

Anirudh Ravichander ‏@anirudhofficial
Engaged ?! Me ?! Hahahahaha.. I’m single and I’m young-u

More Articles
Follows