தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷின் சினிமா கேரியரில் முக்கிய பங்கு அவரது அண்ணன் செல்வராகவனுக்கு உண்டு. அண்ணன் தம்பி இருவரும் இணைந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் மத்தியில் இன்றளவும் எவர்கிரீன் படங்களாக உள்ளன.
பல மாதங்களுக்கு முன் வெளியான ‘நானே வருவேன்’ என்ற படத்தில் தனுஷ் இரட்டை வேடம் ஏற்று நடித்திருந்தார். இதில் செல்வராகவன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் இணைய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் D50-வது படத்தில் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கான காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது.
கேங்ஸ்டர் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷண், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
Selvaraghavan acting in Dhanush direction