Exclusive காலா நஷ்டமில்லை; கன்பார்ம் செய்து ரஜினிக்கு நன்றி சொன்ன தனுஷ்

Dhanush clarifies Kaala is successful and profitable projectகடந்த மாதம் ஜீன் 7 ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் உலகமெங்கும் வெளியானது.

தனுஷ் தயாரித்து இப்படத்தை ரஞ்சித் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இப்படம் வெளியாகி ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், இப்படம் மிகப்பெரிய தோல்வி எனவும், 40 கோடி நஷ்டத்தை தனுஷ் திருப்பி கொடுக்கவுள்ளதாக செய்திகள் நிறைய ஊடகங்களில் வெளியானது.

நம் தளத்தில் இது வெளியாகவில்லை. மாறாக காலா படக்குழு இதனை தெளிவுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

அதன்படி தனுஷின் தயாரிப்பு நிறுவனமாக வுண்டர்பார் பிலிம்ஸ் தனது ட்விட்டரில் பக்கத்தில்…

காலா திரைப்படம் நஷ்டம் என வருவது வதந்தி. அப்படம் எங்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. மேலும் இப்படத்தை கொடுத்த ரஜினிக்கு நன்றி எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Dhanush clarifies Kaala is successful and profitable project

Wunderbar Films‏Verified account @wunderbarfilms
We would like to dispel rumours run in few articles on #Kaala. Contrary to it, #Kaala is a successful and profitable project for Wunderbar Films and we thank Superstar for the opportunity given to us. We also thank the audience for the positive response given to the film.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post