ரஜினி மகள் ஐஸ்வர்யாவுடன் இணையும் ராகவா லாரன்ஸ்

ரஜினி மகள் ஐஸ்வர்யாவுடன் இணையும் ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தனுஷை பிரிவதாக அறிவித்த ஐஸ்வர்யா ரஜினி தற்போது தனது முழுகவனத்தையம் சினிமாவில் செலுத்தி வருகிறார்.

தனுஷ் நடித்த ‘3’ மற்றும் கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை என்ற படங்களை இயக்கினார். தற்போது முசாபிர் என்ற பாடல் ஆல்பத்தை மூன்று மொழிகளில் இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ராகவா லாரன்ஸை சந்தித்து பேசியுள்ளார் ஐஸ்வர்யா.

‘லாரன்ஸ் அண்ணாவை பார்த்தவுடன் எனது மூளை புத்துணர்ச்சி பெற்றது’ என தெரிவித்துள்ளார். இந்த படங்களை அவரே இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படம் துர்கா என கூறப்படுகிறது.

இந்த படத்தை ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் ஆகியோர் தான் இயக்குவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் சமீபத்தில் விலகிக்கொள்கிறோம் என அறிவித்து இருந்தனர்.

எனவே துர்கா படத்தை ஐஸ்வர்யா இயக்குவார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

ரஜினி இல்லை என்றால் சினிமாவில் தனக்கு இந்த இடம் இல்லை. அவர்தான் சினிமாவில் நிலையான இடம் கொடுத்தார். தலைவர் ரஜினியின் மகள்கள் தன் தங்கைகள். அவர்களுக்காக நான் இருப்பேன் என லாரன்ஸ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலம்பரசன் நடிக்கவுள்ள ஒரு படத்தையும் ஐஸ்வர்யா இயக்குவார் என்ற மற்றொரு தகவலும் உலா வருகிறது.

Aishwarya Rajinikanth and Raghava Lawrence joins for a new film

ஓடிடி தொடங்கும் சூப்பர் ஸ்டார்.; அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஓடிடி தொடங்கும் சூப்பர் ஸ்டார்.; அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகெங்கிலும் ஓடிடி தளங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு எழுந்துள்ளது.

எந்த மொழி படம் என்றாலும் வீட்டில் இருந்தபடியே எத்தனை முறை வேண்டுமானாலும் தன் குடும்பத்தாருடன் பார்த்து மகிழலாம் என்பதால் இது எல்லோரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எனவே பிரபலங்கள் பலரும் ஓடிடி தளங்களை தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏற்கெனவே அமேசான், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், சோனி லைவ், ஜீ5 மற்றும் ஆஹா என பல்வேறு ஓடிடி தளங்கள் பிரபலமாக உள்ளன.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் புதிய ஓடிடி தளம் ஒன்றை தொடங்குகிறார்.

SRK+ என்ற பெயரில் இதனை ஷாருக்கான் தொடங்குகிறார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தன் படங்களை தியேட்டர்களில் வெளியிட்டு பிரபலமான ஒரு நடிகர் ஓடிடி தளத்தை தொடங்குவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Shah Rukh Khan announced new OTT platform

மேஜிக்கல் ரியலிசம்.. பெரியாரின் பகுத்தறிவு…; குதிரைவால் படத்தை பார்க்க காரணங்களை குவிக்கும் படக்குழு

மேஜிக்கல் ரியலிசம்.. பெரியாரின் பகுத்தறிவு…; குதிரைவால் படத்தை பார்க்க காரணங்களை குவிக்கும் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100% பார்வையாளர்களுடன் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், புது முயற்சிகளை கையில் எடுத்து உருவாகி வரும் புதிய படங்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில், தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது ‘குதிரைவால்’ திரைப்படம்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

இயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கும் இப்படம் மார்ச் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து படத்தை இயக்கியுள்ளனர்.

கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். சில்லுக்கருப்பட்டி, வாழ் ஆகிய படங்களை அடுத்து பிரபல பாடகர் பிரதீப் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

படத்தின் ட்ரெய்லரில், “கனவுல தொலைச்சத நனவுல தேடுறன்”, “உளவியல் போர்”, “கனவுக்கு மேக்ஸ்ல விடை இருக்கா?” “மேக்ஸ்ல ஒரு Illusion theory இருக்கு” – இது போன்ற வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

வழக்கமான திரைப்படத்தில் இல்லாத புதிய கதைக்களம் கொண்டதாக இருக்கும் என தெரிகிறது.

‘குதிரைவால்’ திரைப்படம் ஏன் திரையரங்குகளில் வெளியாக வேண்டும், பொது மக்கள் ஏன் பார்க்க வேண்டும், குதிரைவால் திரைப்படத்தில் என்ன சிறப்பு போன்ற கேள்விகளுக்கு படக்குழு பதிலளித்திருக்கிறது.

“நிறைய புதிய விஷயங்களை படத்தில் முயற்சி செய்திருக்கின்றோம் என்றாலும் இது ஒரு அரசியல் படம்.

குதிரை, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அயோத்திதாசரின் இந்திர தேச சரித்திரம்தான் குதிரைவால் படத்திற்கு அடித்தளம்.

ஒரு மரபு வழிப்புனைவை இன்னொரு புனைவால்தான் உடைக்க முடியும் என்ற அயோத்திதாசரின் கருத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எழுதப்பட்டது.

வரலாற்றில் குதிரை என்பது ஆக்கிரமிப்பின் சின்னமாகவே இருந்து வருகிறது என்பதை குதிரைவால் படம் சுட்டிக்காட்டும்.

புனைவு மூலமாக ஒட்டுமொத்த வரலாற்றையும் குதிரைவால் படம் கேள்விக்கு உட்படுத்தும்.

இப்படத்தில் புதுமைகள் எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவில் இது ஒரு சீரியஸான படமும் கூட. பெரியாரின் பகுத்தறிவு இப்படத்தில் இருக்கும். ஆனால் புனைவாக இருக்கும்.

இப்படத்தில் தமிழ் சிறு பத்திரிக்கைகளின் தாக்கம் உண்டு. இதில் மேஜிக்கல் ரியலிசம் உண்டு” என படக்குழு தெரிவித்திருக்கிறது.

குதிரைவால் படம் குறித்து பேசி இருக்கும் இயக்குனர் பா. ரஞ்சித்,
“தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய ஆரம்பமாக இருக்கும். புற உலகில் இருந்து விலகி அக உலகிற்குள் இருக்கும் ஒரு கலையை பற்றி குதிரைவால் படம் பேசி இருக்கிறது. கனவு, கனவு உலகத்தில் இருக்கும் சுதந்திரம் பற்றி குதிரைவால் காட்சிப்படுத்தி உள்ளது.

வழக்கமான ஹீரோ வில்லன் கதையாக இல்லாமல், பார்ப்பவர்கள் பர்சனலாக கனெக்ட் செய்து கொள்ள கூடிய அளவில் படம் இருக்கும்.

திரையரங்குகளில் குதிரைவால் படம் தரும் புதிய அனுபவம் பேசப்படும்” என தெரிவித்திருக்கிறார்.
ட்ரெய்லர் ஆரம்பிக்கும்போதே இப்படம் கலந்து கொண்ட திரைப்பட விழாக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று இறுதியாக மக்கள் பார்வைக்காக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது குதிரைவால்.

Top reasons to watch Kuthiraivaal movie in theatres

கேஎஸ் ரவிக்குமார் படத்தில் நாயகனாகும் இயக்குனர் விக்ரமனின் மகன்

கேஎஸ் ரவிக்குமார் படத்தில் நாயகனாகும் இயக்குனர் விக்ரமனின் மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்துள்ள படம் ‘கூகுள் குட்டப்பா’.

இந்த படம் ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற மலையாள படத்தின் ரீமேக் ஆகும்.

நேற்று மார்ச் 14ல் ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் தனது அடுத்த படம் குறித்த தகவலை சொன்னார் கேஎஸ். ரவிக்குமார்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் அரவிந்த் இயக்கவுள்ளார். கேஎஸ் ரவிக்குமார் தயாரிக்கிறார்.

இதில் தனது குருநாதர் விக்ரமனின் மகன் கனிஷ்கா என்பவரை நாயகனாக அறிமுகமாக செய்யவிருக்கிறாராம்.

இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றார்.

சரத்குமார் நடித்த ‘சூர்யவம்சம்’, விஜயகாந்த் நடித்த ‘வானத்தை போல’, விஜய் நடித்த ’பூவே உனக்காக’ அஜித் நடித்த ’உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் விக்ரமன் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikraman son turns hero in KSR film?

ரஜினியின் ‘தலைவர் 169’ அப்டேட் : மீண்டும் நெல்சன் இயக்கத்தில் பிரியங்கா

ரஜினியின் ‘தலைவர் 169’ அப்டேட் : மீண்டும் நெல்சன் இயக்கத்தில் பிரியங்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்தாண்டு 2021ல் வெளியான டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன்.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். காமெடியாக உருவான இந்த படம் வசூலில் கல்லா கட்டியது.

கடந்த வாரம் தியேட்டர்களில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியங்கா.

ஆதினி என்ற கிராமத்து பெண் வேடத்தில் அசத்தியிருந்தார். இப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிற நிலையில் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் தான் பிரியங்காவுக்கு இந்த வாய்ப்பு அமைந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 169’ படத்தில் ரஜினிக்கு மகளாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ரஜினியுடன் முக்கிய வேடத்தில் சரண்யா பொன்வண்ணன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Priyanka in Rajinikanths Thalaivar 169 with Nelson

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ரியல் ஹீரோ சினிமாவில் நடிக்கிறார்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ரியல் ஹீரோ சினிமாவில் நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக காவல்துறையை போற்றியும் கழுவி ஊற்றியும் நிறைய படங்கள் தமிழ் சினிமாவில் இடம் பெற்றுள்ளன.

பெரும்பாலும் ஹீரோ போலீசாக இருந்தால் அந்த படத்தில் காவலர்களை நல்லவர்களாக காட்டியிருப்பார்கள். ஒருவேளை வில்லன் போலீசாக இருந்தால் அந்த படத்தில் காவலர்களை மிக மோசமாக காட்டியிருப்பார்கள்.

சில வருடங்கள் முன் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த வெளியான படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’.

இதில் காவலர்களை நேர்மையாளர்களாக காட்டியிருந்தார் வினோத்.

இந்த படத்தில் பவாரியா கொள்ளை சம்பவ வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் போலீசாக நடித்திருத்தார் கார்த்தி.

இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். தமிழக முன்னாள் டிஜிபி ஆன எஸ்.ஆர்.ஜாங்கிட் தான் இந்த உண்மை கதைக்கு காரணமாக அமைந்தவர். இவர் காவல்துறையில் பணியாற்றிய போது குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனாக இருந்தார். இவரது பணியை மக்கள் பலரும் பாராட்டினர்.

இந்த நிலையில் தற்போது ஆன எஸ்.ஆர்.ஜாங்கிட் தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கியுள்ளார்.

விமல், தன்யா ஹோப் நடிப்பில் உருவாகி வரும் ‛குலசாமி’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ஜாங்கிட்.

இந்த படத்தை ‛குட்டிப்புலி’ புகழ் ஷரவணஷக்தி இயக்க நடிகர் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார்.

குலசாமி பட மோசன் போஸ்டர் நேற்று வெளியானது. அதை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து, தான் நடிப்பதை தெரிவித்துள்ளார் ஜாங்கிட்.

விரைவில் தமிழர்களுக்கு தரிசனம் தருவார் குலசாமி.

Theeran Adhigaram Ondru real hero turns reel hero

More Articles
Follows