தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நவீன டிஜிட்டல் காலத்தில் நமக்கு பிடித்த சினிமா நடிகர் நடிகைகளை தொடர்பு கொள்வது மிக எளிதான ஒன்றாகி விட்டது.
நடிகர்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த சமூக வலைத்தளங்கள் ஓர் எளிய சாதனமாகி விட்டது.
பேஸ்புக் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூகவலைத்தளங்களில் முன்னணி நடிகர்கள் ஆக்டிவாக உள்ளனர்.
தங்களின் புகைப்படங்களை.. தங்களைப் பற்றி தகவல்களை அதில் அதிகம் பகிர்கின்றனர்.
எனவே பொதுமக்களும் அவர்களை சமூக வலைத்தளங்களில் பின் தொடங்கினர்.
இந்த நிலையில் நடிகர் தனுஷின் twitter பக்கத்தை 11 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்கின்றனர்.
இதன் மூலம் தமிழ் சினிமா நடிகர்களில் தனுஷ் முதலிடத்தை பெறுகிறார். தென்னிந்திய அளவில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட நடிகராக தனுஷ் உய(வள)ர்ந்து நிற்கிறார்.
தனுஷின் 3 படம் ரீ-ரிலீஸ்.; ஸ்ருதிஹாசனை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்