தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழில் தற்போது சாக்லேட் பாய் (ஹீரோஸ்) கள் குறைவு. ரொமான்டிக் ஹீரோ ஆக நடித்து வந்தவர்கள் எல்லாம் தற்போது ஆக்சன் ஹீரோக்களாக மாறிவிட்டார்கள்.
இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண், காளிதாஸ் உள்ளிட்ட ஒரு சிலரே ரசிகைகளின் சாக்லேட் பாயாக வலம் வருகிறார்கள்.
இதில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தற்போது தனுஷின் 50வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அவர் கேரவனிலிருந்து இறங்கி வரும் போது தனுஷின் புதுப்பேட்டை பாடல் ஒலிக்கிறது. இதன் மூலம் தனுஷின் 50வது படத்தில் காளிதாஸ் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
நட்சத்திரம் நகர்கிறது மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் நடித்து தனது தனித்திறமையை காட்டியவர் காளிதாஸ்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைக்க தனுஷ் இயக்கி இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kalidas Jayaram joins Dhanush in his 50th movie