தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சந்திரமுகி 2’.
இப்படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.
‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
சமீபத்தில் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.
இதையடுத்து ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் பாடலான ‘ஸ்வாகதாஞ்சலி’ பாடல் நேற்று வெளியாகி ட்ரெண்டானது.
இந்நிலையில், எம் எம் கீரவாணியின் இசையில் வெளியான இந்த பாடல் ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளனர்.
‘Chandramukhi 2’ movie SWAGATHAANJALI song Crosses 3 Million Views just 1 day