கின்னஸ் சாதனை படைத்த காமெடி நடிகர் பிரம்மானந்தம்

கின்னஸ் சாதனை படைத்த காமெடி நடிகர் பிரம்மானந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor brahmanandamதெலுங்கு சினிமாவில் இவர் இல்லாத படங்களே இல்லை என்னுமளவுக்கு அதிக படங்களில் நடித்து வருபவர் பிரம்மானந்தம்.

தெலுங்கு தவிர தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார்.

தமிழியில் கில்லி, மொழி, பயணம், லிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் இதுவரை 1000 படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது கமல்ஹாசனுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 30 ஆண்டுகளில் 1000 படங்களில் நடித்துள்ளதால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் சிவிலியன் போன்ற விருதுகளை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலிக்கு லீவு விட்ட சென்னை நிறுவனம்… ஊழியர்கள் ‘மகிழ்ச்சி’

கபாலிக்கு லீவு விட்ட சென்னை நிறுவனம்… ஊழியர்கள் ‘மகிழ்ச்சி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

fyndusரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைக்கு வர இன்னும் 4 நாட்களே உள்ளன.

ஆன்லைன் புக்கிங் தொடங்கவுள்ள நிலையில், சில தியேட்டர்களில் ஒரு வாரத்திற்கு ஹவுஸ்புல் என்ற நிலையும் தொடர்கிறது.

முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்குமா? என பல மீம்ஸ்கள் இணையத்தில் கலக்கி வருகின்றன.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கபாலி ரிலீஸ் அன்று தங்கள் நிறுவனத்திற்கு விடுமுறை அளித்துள்ளது.

சென்னை OMR சாலையில் உள்ள ஃபின்டஸ் நிறுவனம்தான் இந்த புதுமையை கையாண்டுள்ளது.

இவையில்லாமல் பல நிறுவனங்கள் விடுமுறை அளிக்காமல் ஒரு காட்சிக்கு தங்களின் ஒட்டுமொத்த ஊழியர்களையும் அழைத்து செல்ல ஏற்பாடு செய்து வருகிறது.

இதனால் இந்நிறுவனங்களின் ஊழியர்கள் ‘மகிழ்ச்சி’ அடைந்துள்ளனர்.

நடந்து வந்து நன்றி சொல்வேன்… ரசிகர்களுக்கு கமல் தகவல்..!

நடந்து வந்து நன்றி சொல்வேன்… ரசிகர்களுக்கு கமல் தகவல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal stillsகடந்த 13ஆம் தேதி மாடிப் படியில் இருந்து தவறி விழுந்த கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் காலில் அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது ஓய்வு எடுத்து வரும் தன் உடல்நிலை பற்றி ரசிகர்களுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது…

என்பால் எப்போதும் என் நிலையிலும் அன்பு காட்டும் என் ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி பல.

எனக்கு சிறு விபத்தோ, ஆபத்தோ ஏற்பட்டால் கூட கேள்விகள் பலவற்றுடன் வீறுகொண்டு எழுந்து என்னை காக்க எனக்கும் முன்னால் நின்று இவர்கள் காட்டும் அன்பை நான் பார்த்து வியப்பதென்று நான் என்ன செய்ய.

இத்தகைய அன்புக்கு பாத்திரமாக நான் ஒரு தவமும் செய்யவில்லை.

பதிலுக்கு அன்பும், என் கலையும், அதை செய்ய நான் ஏற்ற பல பாத்திரங்களும் தான்.

எனக்கு நடக்கும் நல்லதோ, கெட்டதோ உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். வெற்றிகளும், விபத்துகளும் எனக்கு விசித்திரமல்ல.

சில இடர்களை கடந்து பல பாடம் கற்றவன். ஆனால் பல விபத்துகளை கடந்தும் பாடம் கற்க மறந்தேன் என்பதற்கு இவ்விபத்தே சான்று.

ஆயிரம் வேலைகளும், ஆர்ப்பரிக்கும் ரசிகர்களும் எனக்காக காத்திருக்கையில், இந்த விபத்து நேர்ந்திருக்க வேண்டாம் தான்.

ஆனால் நல்ல மருத்துவர்களும், அவர்களின் உதவியாளர்களும், என் சிறு குடும்பமும் உடன் இருக்க, எனக்கு ஒரு குறையும் இல்லாமல் நலம் பெற்று வருவேன்.

எப்படி இருக்கீங்க? எப்ப பார்க்கலாம்? என்று கேள்விகளை கேட்டு துளைக்கும் நண்பர்களுக்கும், என்னவாயிற்று என் தம்பிக்கு, அண்ணனுக்கு, அப்பனுக்கு, தலைவனுக்கு என்று என் உறவுகளாகவே மாறிவிட்ட என் ரசிகர்களுக்கும் பதில் சொல்ல நலம் பெற்று திரும்புவேன்” என்று தெரிவித்துள்ளார்.

விக்ரமின் இருமுகன் புதிய தகவல்கள்…!

விக்ரமின் இருமுகன் புதிய தகவல்கள்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

irumugan stillsதமிழக ரசிகர்கள் வெகுநாட்களாக எதிர்பார்த்த ஜோடி விக்ரம்-நயன்தாரா இணைந்துள்ள படம் இருமுகன்.

ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார். இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

இப்படத்தில் விக்ரம் இரண்டு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

‘ரா’ உளவுப் பிரிவு ஏஜெண்ட்டாகவும் திருநங்கை கேரக்டரிலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இதன் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான தேதியை அறிவித்துள்ளர்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்னையில் இசையை வெளியிடுகின்றனர்.

இதனையடுத்து, செப்டம்பர் 1ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

நாளை மீண்டும் ‘தெறி’க்க விடும் விஜய் ரசிகர்கள்

நாளை மீண்டும் ‘தெறி’க்க விடும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay theri stillsஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி சூப்பர் டூப்பர் ஹிட்டத்தது.

இப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி இன்னும் ஒரு சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

வருகிற ஜீலை 22ஆம் தேதி 100வது நாளை தொடவுள்ள நிலையில் இப்படத்தை மீண்டும் ரசிகர்கள் தியேட்டரில் பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர்.

எனவே சென்னை ஆல்பட் தியேட்டரில் நாளை தெறி சிறப்புக் காட்சி திரையிடப்படவுள்ளது.

இதனை வரவேற்கும் வகையில் கொடி, பேனர் என உற்சாகத்தில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.

சிவகார்த்திகேயனோடு மோதும் ஜீவா..!

சிவகார்த்திகேயனோடு மோதும் ஜீவா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and jeevaசிவகார்த்திகேயன் நடித்து மிகப்பிரம்மாண்டாக தயாராகியுள்ள படம் ‘ரெமோ’.

இவருடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஓரிரு தினங்களுக்கு முன் அறிவித்தனர்.

இந்நிலையில் இதே நாளில் ஜீவா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சுனைனா, ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள கவலை வேண்டாம் படமும் வெளியாகவுள்ளதாக சற்று முன் அறிவித்துள்ளனர்.

டிகே இயக்கியுள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

More Articles
Follows