தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா பொது முடக்கத்தால் அனைவரும் கடந்த 2 மாதங்களாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
சினிமா பிரபலங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வந்து மக்களை மகிழ்விக்க ஏதாவது வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் உரையாடியும் வருகின்றன்ர.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுடன் உரையாடினார்
அப்போது அவரிடம் ஒரு ரசிகர் நீங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படம் எது? என கேட்டுள்ளார்.
கில்லி படம் என்று நினைக்கிறேன். என் அப்பாவுடன் சென்று பார்த்தேன். சரியான பதில் கிடைக்கனும் என்றால் அப்பாவிடம் தான் கேட்கனும்.
அப்போது அவருக்கு சினிமா ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் நடிகையான பிறகு அவர் படம் பார்ப்பதில்லை” என தெரிவித்துள்ளார்.