‘மாநாடு’ தயாரிப்பாளருடன் மீண்டும் ‘வினோதய சித்தம்’ கூட்டணி.; ஆனா இது வேற ட்விஸ்ட்

‘மாநாடு’ தயாரிப்பாளருடன் மீண்டும் ‘வினோதய சித்தம்’ கூட்டணி.; ஆனா இது வேற ட்விஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாநாடு’ என்கிற மிகப்பெரிய வெற்றி பெற்ற கமர்ஷியல் படத்தை மட்டுமல்ல, ‘கங்காரு’, ‘மிகமிக அவசரம்’ என எளிய மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சொல்லும் கருத்தாழம் கொண்ட படைப்புகளையும் தயாரித்து வெளியிட்ட வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படம் ‘ராஜா கிளி’ இந்தப் படத்தின் பூஜை இன்று மிக எளிய முறையில் நடைபெற்றது.

‘சாட்டை’, ‘அப்பா’, சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ‘வினோதய சித்தம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் இந்தப்படம் உருவாகிறது.

ஒரே ஒரு சிறிய மாற்றமாக இந்தப் படத்தை தம்பி ராமையா இயக்குகிறார். சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர்.

நடிப்பும் அதேசமயம் தமிழ் வசனங்களை அழகாக உச்சரிக்க தெரிந்த நடிகையும் இந்தப் படத்திற்கு தேவை என்பதால் ஆடிஷனில் கலந்துகொண்ட பல பெண்களில் இருந்து மிகப் பொருத்தமான தேர்வாக இந்தப் படத்திற்குள் சுவேடா ஷ்ரிம்ப்டன் நுழைந்துள்ளார்.

மேலும் முக்கிய வேடங்களில் பி எம்.எஸ்.பாஸ்கர், பழ. கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின்.G, இயக்குநர் மூர்த்தி, ‘கும்கி’ அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், ‘கும்கி’ தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’ முதல், சமீபத்தில் வெளியான ‘யானை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய கோபிநாத் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார்..

‘மாநாடு’ என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் கலை இயக்குநராக பணியாற்றியுள்ள உமேஷ் ஜே. குமார் கலை வடிவமைப்பு செய்கிறார்.

இசையமைப்பாளர் தமனிடம் சீடராக பணியாற்றிய தினேஷ் இசையமைக்கிறார்.

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘ஒத்த செருப்பு’ ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய படத்தொகுப்பை ஆர். சுதர்சன் மேற்கொள்கிறார்.

தம்பி ராமையாவின் மகன் உமாபதி இந்த படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

இந்த படம் குறித்து இயக்குநர் தம்பி ராமையா கூறும்போது…

“இந்தப் படத்தை வி ஹவுஸ் நிறுவனத்தில் நான் இயக்குவதற்கு காரணமே, சுரேஷ் காமட்சி வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல ஒரு மிகச்சிறந்த இயக்குநரும் கூட.

சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் கதை அறிவு கொண்ட தயாரிப்பாளர்களாக இருக்கும் வெகு சிலரில் சுரேஷ் காமாட்சியும் ஒருவர்.

கிட்டத்தட்ட 12 இயக்குநர்களிடம் இந்தக் கதையை கூறிவிட்டு, அதன் பின்னர் இந்த படத்தை தயாரிக்கிறார் சுரேஷ் காமாட்சி.

பெருந்திணைக் காதலை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படம் ஒரு வாழ்வியல் கதை என்பதால், ஒரு மனிதனின் சுயசரிதை என்பதால் இதை நானே இயக்குவது தான் சரியாக இருக்கும் என மீண்டும் டைரக்சனில் இறங்கியுள்ளேன்.

இந்த கதையில் நிகழ்வதெல்லாம் சாத்தியமா என்றால், இது நிஜத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி தான் உருவாகுகிறது.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு மனிதனின் வாழ்க்கையை பார்த்துவிட்டு வெளியே வந்த உணர்வு ஏற்படும்.

எல்லா தரப்பு வயதினருக்குமான கதாபாத்திரங்கள் இந்த படத்தில் சுழன்று கொண்டே இருக்கும். படம் பார்ப்பவர்கள் இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் தங்களை தொடர்புபடுத்தி பார்த்துக்கொள்ள முடியும்” என்கிறார்.

“இந்தப் படம் 50 சதவீதம் கதை, 50 சதவீதம் நடிப்பு என சரிவிகித கலவையாக உருவாகியுள்ளது.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் அப்படியே பவுண்டட் ஸ்கிரிப்ட் ஆக உருவாகியுள்ள இந்தக் கதையை யாராவது படமாக்கத் தூக்கிக் கொண்டு ஓடினால், இதைப் படித்தவுடன் அதைவிட அதிகமான வேகத்தில் கொண்டு வந்து எடுத்து இடத்திலேயே வைத்து விடுவார்கள்.. அந்த அளவுக்கு கதையையும், நடிப்பையும் மட்டுமே பிரதானமாகக் கொண்டு இந்தக் கதை உருவாகியுள்ளது.”

*தொழில்நுட்பக் குழுவினர்*

தயாரிப்பு ; சுரேஷ் காமாட்சி
இயக்கம் ; தம்பி ராமையா
இசை ; தினேஷ்
ஒளிப்பதிவு ; கோபிநாத்
படத்தொகுப்பு;
R. சுதர்ஷன்
கலை ; உமேஷ் ஜே குமார்
சண்டை பயிற்சி ; ஸ்டண்ட் சில்வா
நடனம் ; சாண்டி
ஆடை வடிவமைப்பு ; நவதேவி
தயாரிப்பு மேற்பார்வை ; ஜெகதீஷ் ஜெகன், பிரவின்.G, Ksk செல்வா மற்றும் மாலிக்
மக்கள் தொடர்பு ; A.ஜான்

சுரேஷ் காமாட்சி

சுரேஷ் காமாட்சி

சுரேஷ் காமாட்சி

‘Vinodaya Siddham’ team to collaborate with Maanaadu producer again

சிக்கலில் மாட்டியது விஜய்யின் ‘வாரிசு’.; தெலுங்கு பட உலகில் கிளம்பியது எதிர்ப்பு.!

சிக்கலில் மாட்டியது விஜய்யின் ‘வாரிசு’.; தெலுங்கு பட உலகில் கிளம்பியது எதிர்ப்பு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘வாரிசு’.

ஒரே நேரத்தில் தமிழ் மட்டும் தெலுங்கில் இந்த படம் உருவாகி வருகிறது. இது விஜய் நடிக்கும் நேரடி தெலுங்கு படம் என்றும் கூறலாம்.

இப்படத்தில், ராஷ்மிகா மந்தனா பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

முதல் முறையாக விஜய் படத்திற்கு தமன் இசை அமைத்து வருகிறார்.

காதலுக்கு மரியாதை பூவே உனக்காக ஆகிய படங்களுக்குப் பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் குடும்ப படம் இது.

இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றுள்ளார் நடிகர் விஜய்.

ஆனால் அங்கு படத்தின் படப்பிடிப்பை நடத்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக தெலுங்கு ஹீரோக்களின் சம்பளம் உயர்ந்து வருவதால் அதை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் போர் கொடி தூக்கி உள்ளனர்.

இதற்கு முடிவு வந்த பிறகு படப்பிடிப்புகளை துவங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் ஆகஸ்ட் 1 முதல் தெலுங்கு தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு நிறுத்தியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் தான் விஜய்யின் ‘வாரிசு’ நேரடியாக தெலுங்கிலும் உருவாவதால், அதன் ஷூட்டிங்கையும் நிறுத்தவேண்டும் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

‘வாரிசு’ படத் தயாரிப்பாளர் தில் ராஜூ இது தொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில்… ‘வாரிசு’ தெலுங்கு படம் அல்ல. அது அசல் தமிழ் படம். தமிழில் எடுக்கப்பட்டு பின்னர் ‘வரசுடு’ (Vaarasudu) என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத தயாரிப்பாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Vijay’s ‘Varisu’ in trouble.; Protest started in the Telugu film world

Not Reachable : கோலிவுட்டின் செயல்பாடுகளை மாற்ற ரஜினியிடம் கோரிக்கை வைத்த கே.ராஜன்

Not Reachable : கோலிவுட்டின் செயல்பாடுகளை மாற்ற ரஜினியிடம் கோரிக்கை வைத்த கே.ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Crackbrain Productions தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable). இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக, ரசிகர்களை இருக்கை நுனியில் பரபர திரில்லராக உருவாகியுள்ளது.

இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வினில்…

இயக்குநர் சந்துரு முருகானந்தம் பேசியதாவது…

இந்த திரைப்படத்தை முதலில் பைலட் பிலிமாக எடுத்தோம். அதன் மூலம் தயாரிப்பாளருக்கு எனது மேக்கிங் பற்றி தெரியவந்தது. அவர் எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார். இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டை ஒரு விழாவாக எடுத்து செய்ததே பெரிய விஷயம், அதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இவ்வளவு குறுகிய காலத்தில் படத்தை முடிக்க எனது குழு தான் மிக முக்கிய காரணம்.

இப்படத்தின் இசையமைப்பாளருக்கு இது தான் முதல் படம், எதிர்காலத்தில் அவர் சிறந்த இசையமைப்பாளராக வருவார். படத்தில் அனைவரும் கடினமாக உழைத்துள்ளார்கள்.

நடிகர் விஷ்வா, சாய் தன்யா, சுபா அனைவருக்கும் நன்றி. கேமராமேன் மிகக்குறைந்த லைட்டை வைத்து அட்டகாசமாக நான் கேட்டதை எடுத்து தந்தார். இங்கு வந்து வாழ்த்திய பிரபலங்களுக்கு என் நன்றிகள். ஒரு நல்ல படத்தை எடுத்துள்ளோம், படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் சரண் குமார் பேசியதாவது…

எனது முதல் படத்திற்கு இப்படி ஒரு ஆடியோ லாஞ்ச் நடப்பது சந்தோசம், அதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. முதலில் இந்த படத்திற்கு ஒரு பாடல் தான் இருந்தது, பின்னர் நாங்கள் கலந்துரையாடி படத்தை ரசிகர்களுடன் நெருக்கமாக கொண்டு போக மேலும் சில பாடல்களை இணைத்துள்ளோம். அதுபோக ஒரு பாடலை இன்னும் வெளியிடாமல் வைத்துள்ளோம். அந்த பாடல் படத்தின் கதையை முழுதாய் கூறும் படி இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.

நடிகர் விஷ்வா பேசியதாவது…

இந்த படத்தின் இயக்குநர் மிகவும் திறமை வாய்ந்தவர், அவருடைய ஐடியாக்கள் எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கும். இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பு மூலம் படத்தை மெருகேற்றியுள்ளனர். அனைவருக்கும் நன்றி.

Vishwa

நடிகை சுபா பேசியதாவது…

இந்த திரைப்படம் இயக்குநர், இசையமைப்பாளருக்கு முதல் படம், ஆனால் படம் அப்படி இருக்காது. நேர்த்தியான ஒரு படமாக இருக்கும். நான் இங்கு இருப்பதற்கு என் அம்மா தான் காரணம் அவருக்கு நன்றி. நான் திரைத்துறைக்கு வந்த புதிதில் இருந்து, இப்போது வரை மக்கள் மனதில் எப்படியாவது பதிய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நிறைய சின்ன கதாபாத்திரங்களை கூட எடுத்து நடித்து வருகிறேன். ஒரு நாள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். இங்கு எங்களை வாழ்த்த வந்த பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

suba

இயக்குநர் திரை விமர்சகர் கேபிள் சங்கர் பேசியதாவது…

கோயம்புத்தூரில் இருந்து வந்து, ஒரு புது டீம் படம் செய்துள்ளார்கள். இப்போது கோயம்புத்தூரிலிருந்து நிறைய பேர் படம் செய்கிறார்கள் வாழ்த்துக்கள். ஒரு புது படத்தை வியாபாரம் செய்வது இன்றைய நிலையில் மிக கடினமான பணியாக இருக்கிறது. நானும் ஒரு ஒடிடியில் பணியாற்றுகிறவன் என்பதால், டிஜிட்டல் மார்க்கெட் பற்றி தெரியும். சின்ன படங்கள் வியாபாரம் ஆவது கஷ்டம், மக்கள் படம் பார்க்க தயாராக இருந்தாலும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினம். தியேட்டரில் படத்தை நிறுத்தி வைப்பது முடியாத காரியம். அதனால் இன்றைய காலத்தில் படத்தை எங்கெல்லாம் கொண்டு சேர்க்க முடியுமோ அதை சேர்த்து விட வேண்டும். புது ஆட்கள் எனில் படத்தை பற்றி பலவிதமாக சொல்லி படத்தை திரையரங்கில் வாங்க மறுப்பார்கள்.

ஒரே நேரத்தில் பல ஓடிடியில் ஒளிபரப்பும் வசதி இன்று இருக்கிறது. அதை பயன்படுத்தி கொள்ளுங்கள். எதிர்காலத்தில் டிஜிட்டலில் நிறைய கண்டண்ட் தேவைப்படுகிறது, உங்கள் படத்தின் உரிமையை நீங்களே வைத்து கொள்ளுங்கள் அது பின்னால் உங்களுக்கு பலனளிக்கும். இப்படத்தில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

cable shankar

நடிகர் ‘பீச்சாங்கை” கார்த்திக் பேசியது…

நாட் ரீச்சபிள் படத்தை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். படத்தின் டீசர் நன்றாக இருந்தது. பாடல் நன்றாக இருந்தது. இந்த டீமிற்கு இது முதல் படம், எனது முதல் படமான பீச்சாங்கை படத்திற்கு இங்கு தான் பிரஸ் மீட் நடந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது.

எவ்வளவு பதட்டம் இருக்கும் என எனக்கு தெரியும். இப்படத்தை பெரிய அளவில் கொண்டு சேர்ப்பது மீடியா, உங்கள் கையில் இருக்கிறது. கோடி ரூபாய் போட்டு பாட்டு எடுக்க எங்களிடம் பணம் இல்லை,

எங்களிடம் திறமை இருக்கிறது. ஆனால் திறமைக்கு இங்கு யாரும் வாய்ப்பு தருவதில்லை. விஜய் சேதுபதி அண்ணாவுக்கு ஆரம்பத்தில் வாய்ப்பு தந்தவர்கள் புது தயாரிப்பளர்கள், இப்போது அந்த நிலை இல்லை. நல்ல படம் நாங்க ரெடி, மக்கள் பாக்க ரெடி ஆனால் நடுவில் ஏதோ ஒன்று மிஸ்ஸாகிறது அது என்னவென்று தெரியவில்லை. நல்ல படம் எடுத்தால் ஜெயிக்க முடியும் என்பதை சின்ன படங்கள் தான் நிரூபித்தது. நம்பிக்கை தந்தது அந்த நம்பிக்கையில் தான் நாங்கள் இருக்கிறோம்.
அந்த வகையில் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும் என் வாழ்த்துகிறேன் நன்றி.

Karthi

இயக்குநர் அருண்காந்த் பேசியதாவது…

கோயம்புத்தூரிலிருந்து நிறைய கனவுகளோடு வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வீட்டுக்கு வருபவர்களை உபசரிப்பது போல் இந்த திரைத்துறைக்கு வரும் புதியவர்களை வரவேற்க வேண்டும். சமீபமாக சின்ன படம் ஓடாது சின்ன படம் எடுக்காதீர்கள் என ஒரு நெகட்டிவிடி பரவுகிறது. இதை சொல்பவர்கள் சின்ன படம் எடுப்பதில்லை.

அதனால் நீங்கள் அதை சொல்லாதீர்கள். சின்ன படம் தான் சினிமாவை வளர்க்கும். சின்ன படங்களுக்கு மீடியா ஆதரவு தாருங்கள். இந்தப்படத்தை பற்றி எழுதுங்கள். இப்படம் நன்றாக வந்துள்ளது படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் நடிகர் பிரவீன் பேசியதாவது…

என் படத்தின் பிரஸ் மீட் இங்கு தான் நடந்தது. இப்போது என் நண்பர்களின் படம் இங்கு நடப்பதை பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. இப்போது படம் எடுப்பதை விட படத்தை விளம்பரப்படுத்தவும், ரிலீஸ் செய்யவும் ஒரு தொகை தேவைப்படுகிறது. அதை புரிந்து கொள்ளாமல் தான் நாம் தவறு செய்கிறோம் என்று நினைக்கிறேன். சின்ன படத்தை ரிலீஸ் செய்ய தொகை ரெடி செய்து கொண்டு படத்தை எடுங்கள். படத்தை மார்க்கெட் செய்வது மிக முக்கியம். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள் நன்றி.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…

திறமைகளோடு வரும் புதியவர்கள் சினிமாவில் ஜெயிக்க வேண்டும். சினிமாவை இப்போது காப்பாற்றுபவர்கள் சின்ன பட தயாரிப்பாளர்கள் தான். பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சினிமாவை வைத்து பிழைக்கிறார்கள் ஆனால் வாழ வைப்பதில்லை.

*பெரிய நடிகர்கள் இப்போதெல்லாம் ஷூட்டிங் வெளி மாநிலங்களில் வைக்கிறார்கள்.. இங்கிருப்பவர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ரஜினி சாரிடமே இதை மாற்ற நான் வேண்டுகோளாக வைத்தேன்.*

இப்போது படம் எடுப்பது பிரச்சனை இல்லை அதை ரிலீஸ் செய்வது தான் கஷ்டம். மக்கள் பார்க்க தயாராக இருக்கிறார்கள் ஆனால் படத்தை ரிலீஸ் பண்ண முடிவதில்லை. பல சின்ன படங்கள் தான் தமிழ் சினிமாவை வாழவைத்திருக்கிறது. சிக்கனமாக செலவு செய்து படம் எடுங்கள், சினிமாவில் பணம் போட்டால் பணம் திரும்பி வருவதில்லை. நாட் ரீச்சபிள் மக்களை ரீச் செய்யும் என வாழ்த்துகிறேன் நன்றி.

K Rajan

தொழில் நுட்ப குழுவினர் விபரம்

பேனர்: Crackbrain Productions & M Creations
எழுத்து – எடிட்டிங் & இயக்கம்: சந்துரு முருகானந்தம்
நடிகர்கள்: விஷ்வா, சாய் தன்யா, சுபா தேவராஜ், விஜயன், காதல் சரவணன், பிர்லா போஸ், ஷர்மிளா, கலங்கல் தினேஷ்
ஒளிப்பதிவு : சுகுமாரன் சுந்தர்
இசையமைப்பாளர்: சரண் குமார்
ஒலி வடிவமைப்பு: விக்னேஷ் பாஸ்கரன்
கலை இயக்குனர்: ஜெகதீஷ்
VFX: ஹரிகரன்.K, சந்துரு முருகானந்தம்
DI: பயர்பாக்ஸ் ஸ்டுடியோஸ்
வண்ணக்கலவை : ஸ்ரீகாந்த் ரகு
ஒப்பனை: பெர்சி அலெக்ஸ்
பாடல் வரிகள்: உடுமலை பிரவின், M.C.விக்கி, தி மாங்க்
தயாரிப்பு: Crackbrain Productions
மக்கள் தொடர்பு : பரணி அழகிரி, திருமுருகன்.

Not Reachable

Not Reachable : K. Rajan requested Rajini to change the format of Kollywood

JUST IN சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல இயக்குனரின் மகள்.; கதை இதுதானா.?

JUST IN சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல இயக்குனரின் மகள்.; கதை இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டாக்டர்’ & ‘டான்’ ஆகிய இரு வெற்றி படங்களை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் ஹாட்ரிக் வெற்றி அளிக்க அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதன் பின்னர் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதனையடுத்து மண்டேலா படத்தை இயக்கிய மடோனா அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்‘ படத்திலும் நடிக்கின்றார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நாயகி யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார்

அதிதி தற்போது கார்த்தி ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மாவீரன்’ படத்தின் கதை..: அதிகார வர்க்க பணக்காரர்களுக்கு எதிராக ஏழைகளின் உரிமைக்காக போராடும் நாயகன் ‘மாவீரன்’ என்பதுதான் படத்தின் ஒரு வரி கதை என கூறப்படுகிறது.

சாந்தி டாக்கீஸ் சார்பாக அருண் விஷ்வா இந்த படத்தை தயாரிக்கிறார். வித்துயூ ஐயனா ஒளிப்பதிவு செய்கிறார்.

பரத் ஷங்கர் இசையமைக்க பிலோமீன் ராஜ் எடிட்டிங் செய்கிறார்

aditi shankar

Aditi Shankar is on board for Sivakarthikeyan’s Maaveeran

‘என்ஜாய்’ பாடினவருக்கு என்ஜாய் இல்லாம போச்சே.; சந்தோஷ் நாராயணன் Vs அறிவு

‘என்ஜாய்’ பாடினவருக்கு என்ஜாய் இல்லாம போச்சே.; சந்தோஷ் நாராயணன் Vs அறிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தோஷ் நாராயணன், பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் உருவான ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி.

அனைவரையும் கவர்ந்த இந்த பாடல் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது.

இதுவரை 40 கோடிக்கும் அதிகமானவர்கள் யூடியூப்பில் கண்டுகளித்துள்ளனர்.

ஜூலை 28 ஆம் தேதி… துவங்கிய செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்்முன்பு, இந்த பாடலை தீ மற்றும் மாரியம்மாள் ஆகியோர் மேடையில் பாடினர்.

அப்போது ‘தெருக்குரல்’ அறிவு இடம்பெறாதது சர்ச்சையானது.

இப்பாடல் குறித்த முக்கியமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அறிவு.

இந்த பதிவில்…

“என்ஜாய் எஞ்சாமி பாடலை, நானே எழுதி, இசையமைத்து, ,பாடியது மட்டும் இன்றி நடித்தும் இருந்தேன்.

இந்த பாடலை உருவாக்குவதற்கு யாரும் எனக்கு ஒரு ட்யூன் போட்டு கொடுத்தோ…; மெலடியோ தயார் செய்து கொடுத்தோ அல்லது ஒரே ஒரு வார்த்தையையோ கூட கொடுத்து உதவவில்லை.

இந்த பாடலுக்காக 6 மாதங்கள் தூக்கத்தை தொலைத்து, மனஅழுத்ததோடு உழைத்திருக்கிறேன்.

நம் மண்ணில் 10,000-த்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற இசை பாடல்கள் உள்ளது. அவை ஒவ்வொன்றும் நம் முன்னோர்களின் வலி, வாழ்க்கை, வேதனை அன்பு, போன்றவற்றை எடுத்து கூறும் பாடல்களாகவே உள்ளது.

நம் பாடல்கள் மூலமாகவே பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறோம் என்றும், அதே போல் நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். ஆனால் நீங்கள் விழித்திருக்கும் போது முடியாது. ஜெய்பீம்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இசையமைப்புல சந்தோஷ் நாராயணன் ஓர் நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில்..

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், நமது வரலாற்றையும் இயற்கையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடல் உருவாக்க வேண்டும் என்று தீ என்னிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து நான், தீ, அறிவு ஒருவர் மீது ஒருவர் வைத்த மதிப்புடன் இதில் இணைந்து பணியாற்றினோம்.

இதில் தீ பாடிய வரிகளுக்கான பாடல் மெட்டை அவரே உருவாக்கினார். பிற வரிகளுக்கான மெட்டை நான் உருவாக்கினேன். அறிவு பாடிய வரிகளுக்கான மெட்டையும் நான் உருவாக்கி இருந்தேன்.

இப்பாடலின் வரிகளுக்கு அறிவுடன் இணைந்து நிறைய நேரம் செலவிட்டேன். பாடலில் இடம்பெற்றிருந்த ஒப்பாரி வரிகளுக்கு அரக்கோணம் பகுதி சுற்று வட்டாரத்தில் தாத்தாக்களும், பாட்டிகளும் உதவினர். அவர்களின் பங்களிப்புக்கு மதிப்பளித்த அறிவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடலை ஒட்டு மொத்தமாக முடிக்க நாங்கள் 30 மணி நேரம் எடுத்துக் கொண்டோம். பாடல் பதிவு செய்யும்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். இப்பாடலின் மூலம் வந்த வருமானம் அனைத்தையும் நான், தீ, அறிவு சமமாகவே பங்கிட்டு கொண்டோம் என்பதை வெளிப்படையாகவே கூறுகிறேன்.

ஒலிம்பியாட் போட்டியில், ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் நிகழ்வில் அமெரிக்கப் பயணம் காரணமாக அறிவு பங்கேற்க இயலாது என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் நாங்கள் தெரிவித்துவிட்டோம்.

நான் எப்போதும் அறிவை சிறந்த கலைஞர் என்றே உணர்கிறேன். நான் எப்போதும் எனது படைப்பு தளத்தை ஒடுக்கப்பட்டவர்களுக்காவே பயன்படுத்தி கொண்டிருக்கிறேன்.

எஞ்சாயி எஞ்சாமி’ குறித்து இப்பாடலில் பங்கெடுத்த கலைஞர்கள், என்னிடம் தனிப்பட்ட முறையிலும், பொதுவெளியிலும் விவாதிக்க நான் தயாராகவே இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Santhosh Narayanan Vs Arivu Enjoy Enjaami song issue goes viral

ரவி தேஜா – அனுபம் கேர் நடிப்பில் தயாரான ‘டைகர் நாகேஸ்வரராவ்’

ரவி தேஜா – அனுபம் கேர் நடிப்பில் தயாரான ‘டைகர் நாகேஸ்வரராவ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரும், மாஸ் மகாராஜாவுமான ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் முதல் பான் இந்திய திரைப்படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார்.

இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இப்படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கம் இந்திய திரையுலகின் பேசு பொருளாக மாறியது. தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாஸ் மகாராஜா ரவிதேஜா நடிப்பில் தயாராகி வரும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் லேட்டஸ்ட்டாக சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் அனுபவம் கேர் இணைந்திருக்கிறார்.

அழுத்தமான வேடத்தில் நடிக்கவிருக்கும் அனுபம் கேர், ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் தயாரித்து பிரம்மாண்டமான வசூல் வெற்றியைப் பெற்ற ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ எனும் படத்தில் நடித்திருந்தார். இவர் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் நட்சத்திர பட்டாளத்தில் இணைந்திருப்பதால் இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இந்திய அளவில் அதிகரித்திருக்கிறது.

அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் இலட்சிய படைப்பு இது என்பதால், பட உருவாக்கத்தில் சமரசம் செய்யாமல் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ‘டைகர் நாகேஸ்வரராவை’ உருவாக்கி வருகிறார்.

‘டைகர் நாகேஸ்வரராவ்’ 1970களில் ஸ்டூவர்ட் புரம் என்ற கிராமத்தில் வாழ்ந்த திருடன் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த திரைப்படம் உருவாவதால், கதையின் நாயகனாக நடிக்கும் ரவி தேஜா, இந்த கதாபாத்திரத்திற்காக தன்னுடைய உடல் மொழி, வசனம் மற்றும் தோற்றத்தை மாற்றியிருக்கிறார்.

இது ரசிகர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். மேலும் ரவி தேஜா இதற்கு முன் ஏற்றிராத கதாபாத்திரமாகவும் இது இடம்பெற்றிருக்கிறது.

‘டைகர் நாகேஸ்வரராவ்’ தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகி வருகிறது. ஆர். மதி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்ற, ஸ்ரீகாந்த் விஸா வசனம் எழுதுகிறார். இணை தயாரிப்பாளராக மயங்க் சிங்கானியா பணியாற்றுகிறார்.

டைகர் நாகேஸ்வரராவ் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் பட்டியல்

நடிகர்கள் : ரவி தேஜா, அனுபம் கேர், நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் : வம்சி
தயாரிப்பாளர் : அபிசேக் அகர்வால்
தயாரிப்பு நிறுவனம் : அபிசேக் அகர்வால் ஆர்ட்ஸ்
வழங்குபவர் : தேஜ் நாராயணன் அகர்வால்
இணை தயாரிப்பு : மயங்க் சிங்கானியா
வசனம் : ஸ்ரீகாந்த் விஸா
இசை : ஜீ. வி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு : ஆர். மதி
தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா

Mass Maharaja Ravi Teja’s Tiger Nageswara Rao

More Articles
Follows