தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன் சினிமா கேரியரில் 160 படங்களை கடந்துவிட்டாலும் அவராலும் அவரது ரசிகர்களாலும் மறக்கமுடியாத படம் பாட்ஷா.
சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய இப்படத்திற்கு தேவா இசையமைக்க, ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார்.
இது ரிலீஸ் ஆகி 22 வருடங்களை கடந்துவிட்டாலும் இன்றும் ஆயுதபூஜைக்கு இப்படத்தில் உள்ள ஆட்டோக்காரன் பாடலை கேட்க முடிகிறது.
இந்நிலையில் மெர்சல் படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியில் அட்லி கலந்துக் கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது…
நான் ஷங்கர் சாரிடம் உதவி இயக்குனராக இருந்தபோது கிட்டதட்ட ஒரு வருடம் எந்திரன் சூட்டிங்கில் ரஜினி சாருடன் இருந்தேன்.
இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அன்பாக பழகினோம்.
நான் அவர் படத்தை இயக்கினால் பாட்ஷா 2 படத்தை இயக்க ஆசையாக இருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Atlee wish to direct Baasha 2 with SuperStar Rajinikanth