‘பாட்ஷா’ எப்போ எப்டின்னு தெரியல?.; ஆனா ‘பாட்ஷா’ வில்லன் அரசியலுக்கு வர்றார்..

actor devanரஜினிகாந்துடன் பாட்ஷா, விஜயகாந்துடன் ஆனஸ்ட் ராஜ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் தேவன்.

பாட்ஷா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்ததன் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.

தற்போது தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை என்றாலும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விரைவில் தனிக்கட்சி ஒன்றை துவங்கவுள்ளாராம் தேவன்.

வருகிற கேரளா சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளார்.

தன் கட்சியில் தற்போதை அரசியல்வாதிகளுக்கும் பிரபலங்களுக்கும் இடமில்லையாம்.

திறமை வாய்ந்த புதியவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

மேலும் இவர் தனது சொந்த தொகுதியான திருச்சூரில் போட்டியிட முடிவு செய்திருக்கிறாராம்.

பொதுவாக மலையாள நடிகர்கள் கேரளா அரசியலில் ஜொலிப்பதில்லை. ஆனால் இவர் தனிக்கட்சி ஆரம்பித்திருப்பது அங்குள்ள நடிகர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளதாம்.

கடந்த 1985ல் மலையாளத்தில் ‘வெள்ளம்’ என்ற படத்தை தயாரித்து அதன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 2020ல் இறுதியாக மோகன்லால் நடித்த ‘பிக் பிரதர்’ என்ற படத்தில் நடித்திருந்தார் தேவன்.

Baadshah fame Devan started a political party

Overall Rating : Not available

Latest Post