தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமாக்களை பாராட்டி கௌரவிக்கும் விழாவாக பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டில் வெளியான சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களை தேர்ந்தெடுக்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இதில் தென்னிந்தியாவை சார்ந்த சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழில் சிறந்த படமாக தனுஷ் தயாரித்த காக்கா முட்டை படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தெலுங்கில் சிறந்த படமாக ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி தேர்ந்தெடுக்கப்பட்டது.
மேலும் இப்படம் மொத்தம் 4 விருதுகளை தட்டி சென்றது.
- சிறந்த இயக்குனர் – S.S.ராஜமௌலி
- சிறந்த ஒளிப்பதிவாளர் – கே.கே.செந்தில் குமார்
- சிறந்த பாடகி – கீதா மாதுரி (ஜீவநதி பாடல்)
- சிறந்த துணை நடிகை – ரம்யா கிருஷ்ணன்
மலையாளத்தில் சிறந்த திரைப்படமாக ”பதேமாரி” படமும், கன்னடத்தில் சிறந்த படமாக ”ரங்கிதா ரங்கா” ஆகியவையும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
மலையாளத்தில் ”என்னு நின்டே மொய்தீன்” திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது ஆர்.எஸ். விமல் அவர்களுக்கு கிடைத்தது.
மேலும் பதேமாரி படத்தில் நடித்த மம்மூட்டிக்கும் விருது வழங்கப்பட்டது.
”ருத்ரம்மாதேவி” படத்திற்காக அனுஷ்காவுக்கு சிறந்த முன்னணி கதாபத்திரம் விருது வழங்கப்பட்டது.
மலையாளத்தில் சிறந்த முன்னணி கதாபாத்திர விருது மகேஷ் பாபுவுக்கும், கன்னடத்தில் சிறந்த முன்னணி கதாபாத்திர விருது புனீத் ராஜ்குமாருக்கும் வழங்கப்பட்டது.
மேலும் தமிழ் சினிமா விருதுகள் விவரம் இதோ…
- சிறந்த நடிகர் : விக்ரம் (ஐ)
- சிறந்த நடிகை: நயன்தாரா (நானும் ரௌடி தான்)
- சிறந்த இயக்குனர் : மோகன் ராஜா (தனி ஒருவன்)
- சிறந்த நடிகர் (Critics Jury Award): ஜெயம் ரவி (தனி ஒருவன்)
- சிறந்த நடிகை (Critics Jury Award): ஜோதிகா(36 வயதினிலே)
- சிறந்த துணை நடிகர்: அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
- சிறந்த துணை நடிகை : ராதிகா சரத்குமார் (தங்கமகன்)
- சிறந்த அறிமுக நடிகர்: ஜீ.வி.பிரகாஷ் (டார்லிங்)
- சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான் (ஐ)
- சிறந்த பாடலாசிரியர்: மதன் கார்க்கி (பூக்களே சற்று ஓய்வெடுங்கள் – ஐ)
- சிறந்த பாடகர்: சித் ஸ்ரீராம் (என்னோடு நீ இருந்தால் – ஐ)
- சிறந்த பாடகி : ஸ்வேதா மோகன் (என்னச் சொல்ல – தங்கமகன்)
இதுவரை 7 பிலிம்பேர் விருதுகளை விக்ரம் அவர்களும் 14 விருதுகளை ஏ.ஆர். ரஹ்மான் அவர்களும் பெற்றுள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.