சென்னையில் தெலுங்கு முறைப்படி ஆதி – நிக்கி திருமணம்

சென்னையில் தெலுங்கு முறைப்படி ஆதி – நிக்கி திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஈரம்’, ‘கோச்சடையான்’, ‘மரகத நாணயம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆதி. பிரபல தெலுங்கு இயக்குனர் ரவிராஜா பினிசெட்டியின் 2வது மகன்.

‘டார்லிங்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘இடியட்’, ‘கலகலப்பு 2’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நிக்கி கல்ராணி. இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.

இவர்கள் இருவரும் ‘யாகவராயினும் நா காக்க, மரகத நாணயம்’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர். அப்போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்துள்ளது.

தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் ‘தி வாரியர்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் ஆதி. அதுபோல் நிக்கியும் தமிழ் மற்றும் சில மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மே 18ல் சென்னையில் தெலுங்கு முறைப்படி ஆதி நிக்கி திருமணம் நடைபெற்றது.

இவர்களின் திருமணத்தில் நடிகர் மெட்ரோ சிரிஷ் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

நேற்றிரவே திருமண வரவேற்பும் நடந்துள்ளது.

Aadhi – Nikki Galrani tie the knot

ரஜினியை அழவைத்த சிவகார்த்திகேயன்..; சூப்பரூ என பாராட்டிய சூப்பர் ஸ்டார்

ரஜினியை அழவைத்த சிவகார்த்திகேயன்..; சூப்பரூ என பாராட்டிய சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்திருந்த படம் ‘டான்’.

லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்த இந்த படத்தை உதயநிதி வெளியிட்டார்.

நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க அனிருத் இசையமைத்து இருந்தார்.

சிபி சக்கரவர்த்தி இயக்கிய இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த வாரம் மே 13ல் வெளியானது.

கிட்டத்தட்ட 5 நாட்களில் ரூ.50 கோடி வசூலை உலகளவில் கடந்துள்ளதாக கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் படத்தின் வெற்றியை கேட் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளது.

இந்த நிலையில் டான் படத்தை நடிகர் ரஜினிகாந்த் தன்னை போனில் அழைத்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் சிபியை ரஜினி போனில் பாராட்டினாராம்.

‛ரஜினி சார் படத்தை பார்த்துட்டு சூப்பர்.. சூப்பர் பென்டாஸ்டிக் ‘டான்’.

கடைசி 30 நிமிடங்கள் என்னால் என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியல” என ரஜினி தெரிவித்ததாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Rajinikanth praised Sivakarthikeyan’s Don

மகள்கள் வருவார்களா? 2வது மனைவியுடன் காத்திருக்கும் இமான்

மகள்கள் வருவார்களா? 2வது மனைவியுடன் காத்திருக்கும் இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் இசை உலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி. இமான். தற்போது 100 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார்.

இவர் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சில தினங்களுக்கு முன்தான் மே 15ஆம் தேதி ஞாயிறன்று 2வது திருமணம் செய்துக் கொண்டார். இந்த விழாவில் நடிகை சங்கீதா அவரது கணவர் கிரிஷ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

மறைந்த பிரபல சினிமா டிசைனரான உபால்டுவின் மகள் அமலியை திருமணம் செய்து கொண்டார் இமான்.

அமலிக்கு தனது முதல் கணவர் மூலம் ஒரு மகளும் இருக்கிறார். இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் செய்தியாக பார்த்தோம்.

தனது 2வது திருமணத்திற்கு பிறகு சில தகவல்களை பதிவிட்டுள்ளார் இமான்.

அதில், “மே 15ம் தேதி எனக்கு அமலியுடன் மறுமணம் நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியாக பகிர்கிறேன்.

எனது அப்பா டேவிட் கிருபாகர தாஸ் என்னுடைய கடினமான காலங்களில் ஒரு வலிமையான தூணாக இருந்ததற்கு மிகவும் நன்றி.

எனது அம்மா மறைந்த மஞ்சுளா டேவிட்டின் ஆசீர்வாதமும் எனக்கு உண்டு.

சிறந்த பெண்மணியான அமலியை அடைவதற்குக் காரணமாக இருந்த எனது குடும்பத்தினர் நலம் விரும்பிகள் ஆகியோருக்கு நன்றி.

இனிமேல், அமலியின் அன்பு மகள் நேரத்ரா என்னுடைய 3வது மகள். நேத்ராவின் அப்பாவாக இருப்பதற்கு மகிழ்ச்சி.

எனது அன்பு மகள்கள் வெரோனிகா, பிளஸிகா எனது திருமணத்தில் இல்லாதது எனக்கு வருத்தம்.

நிச்சயம் ஒரு நாள் எனது மகள்கள் வீட்டிற்கு வருவார்கள் என அதிகபட்ச அன்புடன் நாங்கள் காத்திருக்கிறோம்.

அமலி குடும்பத்தினரின் விலைமதிப்பற்ற அன்புக்கு நன்றி. மேலும் இத்தனை வருடங்களாக எனக்கு ஆதரவாக இருக்கும் இசை ரசிகர்களுக்கு எனது நன்றி,” என தெரிவித்துள்ளார் இமான்.

Will the daughters come? Iman waiting with 2nd wife

ரசிகர்களை சிறைப்பிடித்த ‘கைதி’ ரஷ்யாவில் பெயர் மாற்றத்துடன் ரிலீஸ்

ரசிகர்களை சிறைப்பிடித்த ‘கைதி’ ரஷ்யாவில் பெயர் மாற்றத்துடன் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஒரு படத்துக்கு வரவேற்பு கிடைப்பது என்பது மிகவும் அபூர்வம்.

கடந்த 2019-ம் ஆண்டில் இந்த அபூர்வம் ‘கைதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நிகழ்ந்தது.

2019 தீபாவளியன்று அக்டோபர் 25-ம் தேதி வெளியான இந்தப் படம் அனைத்து தரப்பினர்களாலும் கொண்டாடப்பட்டது.

கார்த்தியின் அசாத்திய நடிப்பில் உருவான இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் நரேன், அர்ஜுன் தாஸ், பேபி மோனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

வித்தியாசமான கதைக்களங்களைத் தொடர்ச்சியாக வெற்றிகரமாகத் தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.

முன்னணி நாயகனின் படத்தில் நாயகி கிடையாது, பாடல்கள் கிடையாது உள்ளிட்ட பல புதுமையான விஷயங்கள் இந்தப் படத்தில் கையாளப்பட்டது.

கார்த்தியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்த படம் ‘கைதி’ என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ‘கைதி’ மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இதன் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘போலா’ என்ற பெயரில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது.

இதனை ட்ரீம் வாரியர் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் மற்றும் அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது.

தற்போது மேலும் ஒரு மைல்கல்லாக ரஷ்யாவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகிறது ‘கைதி’. ‘உஸ்னிக்’ என்ற பெயரில் சுமார் 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ்த் திரைப்படம் ஒன்று ரஷ்யாவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக பல்வேறு விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது. ‘உஸ்னிக்’ படத்தினை ரஷ்யாவில் 4 சீசன்ஸ் கிரியேஷன்ஸ் வெளியிடுகிறது.

100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்த ‘கைதி’ திரைப்படம், ரஷ்யாவிலும் பிரம்மாண்டமான முறையில் வெளியாவதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது ட்ரீம் வாரியர் நிறுவனம்.

Kaithi is releasing in Russia today as Узник

உங்க அட்வைஸ் கூந்தலை பின்னி நீங்களே பூ…; டென்ஷனில் விஜயலட்சுமி

உங்க அட்வைஸ் கூந்தலை பின்னி நீங்களே பூ…; டென்ஷனில் விஜயலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அகத்தியனின் மகள்களில் ஒருவர் நடிகை விஜயலட்சுமி. இவரது கணவரும் ஒரு இயக்குனரே. இவரது கணவர் பெரோஸ் இயக்கிய படம் தான் பண்டிகை (2017).

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார் விஜயலட்சுமி. மேலும் அஞ்சாதே படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் இவரின் டான்ஸ் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அந்த வீடியோவை பார்த்த ஒரு நபர் ”இந்த ஆட்டம் உனக்கு தேவையா ஒரு அம்மாவா இருக்கியே” என கமெண்ட் போட்டுள்ளார்.

இதனால் டென்ஷனாகியுள்ளார் விஜயலட்சுமி.

எனவே அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக…

”அம்மா ஆகிவிட்டால் வீட்டு மூலைல உக்காந்து ஐயோ என் லைஃப் முடிஞ்சு போச்சுன்னு வருத்தப்படனுமா?

நீ வேணும்னா வருத்தப்படு.. உனக்கு சிலை வைப்பாங்க. இது என்னோட லைஃப் என் இஷ்டத்துக்கு இருப்பேன்..

உங்க அட்வைஸ் கூந்தலை பின்னி நீங்களே பூ வைத்துக் கொள்ளவும்” என நெத்தியடி பதிலை பதிவிட்டுள்ளார்.

Actress Vijayalakshmi reply to her fans

‘திருப்பாச்சி-திருப்பதி’ பட வெற்றி ஒரு மாய வெற்றிதான்.; ‘டேக் டைவர்ஷன்’ மீட்டிங்கில் பேரரசு பேச்சு

‘திருப்பாச்சி-திருப்பதி’ பட வெற்றி ஒரு மாய வெற்றிதான்.; ‘டேக் டைவர்ஷன்’ மீட்டிங்கில் பேரரசு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ டேக் டைவர்ஷன்’. இதில் கே ஜி எஃப் படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்திருக்கிறார்.

‘கார்கில்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில் இயக்கியுள்ளார். விரைவில் வெளியாகவிருக்கும் ‘டேக் டைவர்ஷன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் படக்குழுவினரை வாழ்த்த இயக்குநர் பேரரசு, இயக்குநர் ‘எத்தன்’ சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

படக்குழுவினரை வாழ்த்தி இயக்குநர் பேரரசு பேசுகையில்,

” இப்படத்தின் கதாநாயகன் சிவக்குமார், தமிழ் சினிமாவின் ‘என்றும் மார்க்கண்டேயன்’ ஆன சிவகுமாரைப் போல் இவரும் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன். நாயகன் சிவக்குமார் பேசும்போது, ‘என்னுடைய தாயார் என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்க மாட்டார்’ எனக் குறிப்பிட்டார். இந்த உலகத்தில் எதையும் எதிர்பார்க்காத ஒரு ஜீவன் என்றால் அது தாய் தான். அவர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால், ‘தன் பிள்ளை நன்றாக பெயரெடுக்க வேண்டும். தன் பிள்ளை வெற்றி பெற வேண்டும். நன்றாகச் சம்பாதிக்க வேண்டும்’ என்றுதான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் மகனிடமிருந்து ஒன்றையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்கள்தான் தாய்.

இப்படத்தின் நாயகன் சிவகுமார் மேடையில் பேசும்போது தன்னுடைய குருவிற்கு நன்றிகள் தெரிவித்த பிறகுதான் தாய்க்கு நன்றி தெரிவித்தார். இப்போதே அவர் கலைஞராகிவிட்டார். ஒரு கலைஞனுக்கு முதலில் குரு தான் அனைத்தும். அதன்பிறகுதான் தாய் உள்ளிட்ட பலர்.

அண்மைக்காலமாக தமிழைக் காப்பாற்ற வேண்டும். இந்தி எதிர்ப்பு.. இந்தி திணிப்பு …என குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் தமிழ் அழியாது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறேன்.

முன்பெல்லாம் விழாக்களில் கலந்து கொள்ளும் கதாநாயகிகள், ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தை பேசிவிட்டு அமர்ந்து விடுவார்கள். அண்மைக்காலமாக நான் கலந்து கொள்ளும் விழாக்களில் கதாநாயகிகள் தமிழில் பேசுகிறார்கள்.

இந்தப் படத்தின் கதாநாயகி பெயர் பாடினி. அருமையான இலக்கியத் தமிழ்ப் பெயர். அவர்கள் தமிழில் பேசுவதே அழகு. அழகான பெண் தமிழில் பேசினால் அதைவிட அழகு. அதனால் இனிமேல் அழகான பெண்கள் தமிழில் பேசி, தமிழைக் காப்பாற்ற வேண்டும்.

சென்னையைப் பொறுத்தவரை எல்லாருக்கும் டேக் டைவர்ஷன் தான். ஒரு கிலோ மீட்டருக்கு செல்லவேண்டிய தூரத்திற்கு, ஆறு கிலோமீட்டர் வரை டேக் டைவர்ஷன் எடுத்துச் செல்வோம். தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள்..

சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், ‘டேக் டைவர்ஷன்’ என்பது இயல்பான. பழகிப்போன, ஒரு பொருத்தமான தலைப்பு.

இன்றைய தேதியில் ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றால், அதில் பெரிய ஹீரோ நடித்திருக்க வேண்டும் அல்லது கதை ஹீரோவாக இருக்க வேண்டும். இவ்விரண்டில் ஒன்று இருந்தால்தான் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தருகிறார்கள். அந்தவகையில் டேக் டைவர்ஷனில் கதை தான் ஹீரோ.

இயக்குநர் ஷிவானி செந்தில் ஏற்கெனவே ‘கார்கில்’ என்ற ஒரே ஒரு நடிகர் நடித்த திரைப்படத்தை இயக்கியவர். அந்தப் படத்திலும் ஒரு புது முயற்சியை மேற்கொண்டவர். தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சிக்கு எப்போதும் வரவேற்பு உண்டு.

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு ஆதரவு கிடைத்தது போல், அவரது ‘இரவின் நிழல்’ என்ற புதிய முயற்சிக்கும் ஆதரவு கிடைக்கும். அந்தப் படத்தை பார்த்து விட்டேன். பார்த்திபனின் புதிய முயற்சிக்குப் பாராட்டுகள். அவர் ஒரு தமிழ் இயக்குநர் என்பதால் நானும் பெருமிதம் அடைகிறேன்.

டேக் டைவர்ஷன் பலருக்கு நல்ல வழியை காட்டி விடும். இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிகராக வெற்றி பெறுவதற்காகத்தான் திரை உலகிற்கு வந்தார். ஆனால் அவர் டேக் டைவர்ஷன் எடுத்து இயக்குநராகி, பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். ஒரு கிராமவாசி திரை உலகில் நுழைந்து வெற்றிகரமான இயக்குநராக முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.

இதனால் நூற்றுக்கணக்கான கிராமத்து வாசிகள் இயக்குநர் கனவோடு தமிழ் திரையுலகில் படையெடுத்து வருகிறார்கள். அவர் வெற்றி அடைய வில்லை என்றால், இன்று பேரரசு உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் திரையுலகில் அறிமுகமாகி இருக்க மாட்டார்கள். அதனால் பல தருணங்களில் டேக் டைவர்ஷன் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஷிவானி செந்தில் இயக்கியிருக்கும் டேக் டைவர்ஷன் அவருக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, ஏற்றத்தை அளிக்க வேண்டும் .

திரையுலகைப் பொறுத்தவரை புதிய முயற்சிகள் தான் கவனத்தை கவர்ந்து வெற்றி பெற்று வரலாறாகும். என்னைப் பொறுத்தவரை பெரிய நடிகர்களை வைத்து வெற்றிப்படத்தை அளிக்கும் இயக்குநர்களை விட, புதுமுகங்களை வைத்து பெரிய வெற்றியை வழங்குபவர்கள் தான் சிறந்த இயக்குநர்கள். அதுபோன்றதொரு வெற்றியை இயக்குநர் ஷிவானி செந்தில் பெறுவார். நான் இன்னும் முழுமையான இயக்குநராக வெற்றி பெறவில்லை.

நான் எப்போது புதுமுகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி பெறுகிறேனோ அப்போதுதான் முழுமையான இயக்குநராவேன். ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘திருப்பதி’ இந்தப் படங்கள் எல்லாம் பெற்ற வெற்றி ஒரு மாய வெற்றிதான். இந்த மாதிரியான வெற்றி ஒரு குறிப்பிட்ட ரசிகர்களுக்கு நிறைவைத் தந்தாலும், புதுமுகங்களை வைத்து படம் இயக்கி அந்தப் படம் வெற்றி பெறும் போது தான் ஒட்டுமொத்த திரையுலகமும் ஆரோக்கியமாகப் பயணிக்கும். அந்தப் பயணத்தில் டேக் டைவர்ஷன் படமும் இடம் பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் ஷிவானி செந்தில் பேசுகையில்,

” நேராகப் பயணிக்க வேண்டிய பயணத்தில் டேக் டைவர்ஷன் இருந்தால் ஒரு மாற்றுப்பாதையில் பயணிக்க வேண்டியிருக்கும். முதலில் தயக்கம் இருந்தாலும், டென்ஷன் ஏற்பட்டாலும், பயணித்தால்… சென்றடைய வேண்டிய இலக்கு நல்லதாகவே இருக்கும். இந்தத் திரைப்படத்தில் உங்களுக்கு டேக் டைவர்ஷன் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் டென்ஷனைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்பதை மையப்படுத்தி இருக்கிறேன். வாழ்க்கையே ஒரு டேக் டைவர்ஷன் தான். இயக்குநர் பேரரசு குறிப்பிட்டதைப் போல் டேக் டைவர்ஷனால் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் ஏராளம். இந்தப்படத்திலும் டென்ஷனை ஏற்றுக்கொண்டு டேக் டைவர்ஷனில் பயணித்தால் நமக்கும் பொக்கிஷங்கள் கிடைக்கும் என்பதைச் சுவராசியமாக சொல்லி இருக்கிறேன்.

ஒரே நாளில் நடைபெறும் கதை. அதிலும் பயணம் தொடர்பான கதை என்பதால் முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய நடிகர், நடிகைகளுக்கும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் சினிமாவில் சாதிக்க ஆசைப்படுவேன். அதனை கடவுள் வெவ்வேறு நண்பர்களின் ரூபத்தில் நிறைவேற்றி வைப்பார்; வைத்திருக்கிறார். இந்தப்படத்தின் ட்ரெய்லரை நாயகன் சிவகுமார் மூலமாக கே ஜி எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டினார். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அவர்களும் இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது எனப் பாராட்டினார். இது போன்ற பாராட்டுகள் என்னை உற்சாகமடைய வைத்திருக்கின்றன.

என்னைப்பொறுத்தவரை ஒரு கனவு நனவாக வேண்டும் என்றால், உழைப்பு மட்டும் போதாது. மக்களின் கைகளில்தான் இருக்கிறது. டேக் டைவர்ஷன் படைப்பை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று முழுமையாக நம்புகிறேன். என்னுடைய கனவிற்கும் நிஜத்திற்கும் இடையில் இருப்பவர்கள் மக்கள். அதனால் அவர்களின் ஆதரவை வேண்டுகிறேன்.” என்றார்.

இந்நிகழ்வில் படத்தின் நாயகன் சிவக்குமார், நடிகர் ராம்ஸ், நடிகை பாடினி குமார், ஒளிப்பதிவாளர் ஈஸ்வரன் தங்கவேல், படத்தொகுப்பாளர் விது விஷ்வா, இசை அமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் தயாரிப்பாளர் சுபா செந்தில் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

Director Perarasu speech at Take Diversion press meet

More Articles
Follows