தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ படத்திற்கு பிறகு ஆர்யா நடித்த படங்கள் பெரியளவில் கைகொடுக்கவில்லை.
எனவே தற்போது கவனமுடன் தன் படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார்.
மஞ்சப்பை’ இயக்குனர் ராகவனின் ‘கடம்பன்’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார்.
அதன்பின்னர் அமீர் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் ‘தி கிரேட் ஃபாதர்’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறாராம் ஆர்யா.
இதில் மம்மூட்டியின் மகளாக சாரா நடிக்க, ‘ஆகஸ்ட் சினிமா’ என்ற நிறுவனம் தயாரிகிறது.
இந்த நிறுவனத்தில் சந்தோஷ் சிவன், ஷாஜி நடேசன், ஆர்யா, பிரித்விராஜ் ஆகியோர் பங்குதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.