தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராஜா ராணி என்ற ஒரே ஒரு ஹிட் படம் கொடுத்தார் அட்லி.
இப்படத்தை அடுத்து விஜய்யின் 3 படங்களை இயக்கிவிட்டார் அட்லி.
ஷங்கரின் உதவி இயக்குனராக ‘நண்பன்’ படத்தில் பணிபுரிந்த போது கிடைத்த விஜய்யின் அறிமுகமே இதற்கு முக்கிய காரணம் எனலாம்.
தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
விரைவில் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார்.
தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராக உள்ளதாம்
இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
இப்பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2-ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஜீரோ படத்திற்கு பின் ஷாருக்கான் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
SRKs film with Atlee to start in november ?